3/23/15

இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்ததை தியானிப்போமாக !

இயேசு  சிலுவையில் அறையுண்டு மரித்ததை தியானிப்போமாக !

யேசுவே  உம் பாடுகள் என்  மீட்பு
தந்தையே  உம் அன்பு என் அடைக்கலம்
அப்பா எனக்காக  உயிர்  துறந்தீர்
அன்பால் என்னை விடுவித்தீர்
ஆயிரம் நன்றி சொல்வேன்
வெற்றி  பாயிரம் பாடிடுவேன்
இயேசு என்னை மீட்டார்
அவரே  என் நண்பனாய்  அருகில்  இருக்க
நான் யாருக்கும் அஞ்சிடேன்
சாவின்  கொடுக்குகளின்  சங்கிலிகளை தகர்த்தார்


மரித்தார்  யேசு  எனக்காய்
உயிர்த்தார்  இயேசு  எனக்காய்
இப்புவி  வாழ்வில்  அவர்  இறப்பும் உயிர்ப்பும்
எடுத்துரைத்து  மீட்படைவேன்
அல்லேலுயா ! அல்லேலுயா !  அல்லேலுயா !
ஆமென் ! அல்லேலுயா ! 

No comments:

Post a Comment