முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம்
முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம் ஜெபமும் ஆகும் . முதல் வெள்ளி பக்தி முயற்சிகளாக, பல்வேறு தவ முயற்சிகள் பயனில் உள்ளன . அவை யாவும் உடலுக்கும் , மனதிற்கும் , அன்மாவிற்கும் நம்பிக்கையும் , தெம்பும் தருகின்ற அரும் மருந்தான அருள் வரங்கள் ஆகும்.
முதல் வெள்ளி ஒருத்தல் இருந்து ஜெபிப்பது பக்திமான்களின் பழக்கம் மட்டுமில்லாது , அஃது வேண்டும் வரங்களை பெற்றுத் தரும் அருள் கருவியாக அமைகின்றது . தானியேல் தான் வேண்டும் வரங்களுக்காக ஒருத்தல் இருந்து ஜெபித்தார் . நமதாண்டவர் யேசு கிறிஸ்து நாற்பது நாள் உபவாசம் இருந்து ஜெபித்தார். உபவாச ஜெபம் சாத்தானை ஜெயிக்கும் வல்லமையான ஜெபமாகவும் அமைகின்றது . இதனால் மாதம் ஒருமுறை முதல் வெள்ளியன்று உபவாசம் இருந்து ஜெபிப்பது சாலச் சிறந்த புண்ணிய பழக்கம் ஆகும்.
முதல் வெள்ளியன்று திருப்பலி கண்டு நன்மை வாங்குவது நம் பாரம்பரியம் ஆகும் . ஜெபங்களில் சிறந்த ஜெபம் திருப் பலியாகும். முதல் வெள்ளியன்று திருப்பலி காண்பது ஓர் சிறந்த புனித ஜெப வழக்கம் ஆகும். திருப்பலியில் எசுக்கி றிஸ்துவோடு அவர்தம் சிலுவைப் பாடுகளில் பங்கு கொள்ளும் போது , நம் பாடுகளும் அவரோடு இணைந்து , நம் சுமைகள் எளிதாக வாய்ப்பு பெறுகின்றோம்.
முதல் வெள்ளியன்று சிலுவைப் பாதை தியானம் நம் பாரம்பரியம் ஆகும் . சிலுவைப்பாதையின் பதினான்கு ஸ்தலங்களிலும் , நம்மையும் நம் பாவங்களையும் இயேசு சுமந்ததை தியானிக்கும் போது நாம் மனம் மாறி பிறரை மன்னிக்கும் மன வல்லமையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு பெறுகின்றோம்.
முதல் வெள்ளியன்று பாவ சங்கீர்த்தனம் செய்வது நம் பாரம்பரியம் ஆகும் . மாதம் ஒருமுறையாவது முதல் வெள்ளியன்று ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குபெற்று நமை நாம் பரிசுத்த ஆவியின் நண்பர்களாக அயத்தப் படுத்துவது, நம் வாழ்வின் சூழல்களில் நம் தீர்மானங்களில் இறைவனின் சித்தத்தை அறிந்து நடக்க பலன் அளிக்கும். மேலும் பாவ சங்கீர்த்தனம் நம் பாவங்களை கழுவி நம் ஆன்மாவை சுத்தமாக மாற்றும் அற்புத ஆற்றுபடுத்தும் கருவியாகும். இதனால் உடல் உள்ள ஆன்மா சுகம் பெறுகின்றோம்.
முதல் வெள்ளியன்று ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது மிகவும் நன்மை பயக்கும் அறப்பணியாகும். முதல் வெள்ளியன்று இயேசுவின் திரு இருதய பேரால் ஏழைகளுக்கு உணவு உடை அளிப்பது நம் பாரம்பரிய பக்தி முயற்சிகளில் அடங்கும். இதனால் முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம் ஆகும் . ஜெபம் , தவம் , அறம் என்ற அருள் கனிகளால் முதல் வெள்ளி பக்தியை அலங்கரிப்போம்.
.
.
நன்றியும்,வாழ்த்துகளும்.
ReplyDelete