உபவாச ஜெபம் விடுதலை தரும் ஜெபம்
உபவாச ஜெபம் விடுதலை தரும் ஜெபம். உல்லாசம் துறந்து, உணவு மறந்து, நடை , உடை , பாவனைகளில் , எளிமை கொண்டு, புண்ணிய நோக்குடன் , புனிதம் தேடும் ஓர் அரிய ஜெபம் உபவாச ஜெபம் ஆகும்.
உடலை ஒறுத்து , மனதை நேர்படுத்தி , உள்ளத்தை இறைவன்பால் ஒன்டறிணைக்கும் ஓர் அற்புத ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
தன்னலம் மறந்து , பிறர்நலம் கருதி , பிறருக்காக தவம் செய்து , இறைவனை மன்றாடும், மன்றாட்டுச் ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
உன்னதத்தில் வாழும் இறைவனின் இதயத்தை, மண்ணில் வாழும் மைந்தன் உருகச் செய்யும் ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
தன்னையே ஒறுத்து , தான் ஜெபிக்கும் ஜெபத்தில் நிலையில் நிலை நின்று தியானிக்கும் ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் .
மோயிசன் உபவாச ஜெபம் ஜெபித்தார், இஸ்ராயேல் விடுதலை பெற்றார். தாவிது உபவாச ஜெபம் ஜெபித்தார், பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்.
தானியேல் உபவாச ஜெபம் ஜெபித்தார், எதிரிகளின் சூழ்ச்சியிலும் , சிங்கத்தின் வாயினின்றும் விடுலை பெற்றார் . ஆண்டவராகிய இயேசு உபவாச ஜெபம் ஜெபித்தார், உலகை பாவத்திலிருந்து விடுவித்தார் , அலகையின் சூழ்ச்சிகளையும் , சோதனைகளையும் , மனித பலவீனங்களையும் ஜெயித்தார் . மேலும் , இயேசு உபவாச ஜெபத்தையும் , அதன் பலன்களையும் , ஜெபிக்கும் முறைகளையும் , சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார் . இன்னும் , சில வேண்டுதல்களுக்கு பலன் பெற்றிட , உபவாச ஜெபம் ஜெபிப்பது , மிகவும் அவசியம் என்று சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
இதனால் உபவாச ஜெபம் ஓர் இன்றியமையாத ஜெபம் ஆகும் . இச்ஜெபம் பாவத்தையும் , பாவ சூழ்நிலைகளையும் ஜெயிக்கும் சக்தி தரும் அரும்மருந்தாகும். இச்ஜெபம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் விடுதலை தரும் ஜெபம் ஆகும் . இஃது தனிப்பட்ட வேண்டுதல்களுக்காக மட்டுமின்றி , குடும்பத் தேவைகளுக்காகவும் , உற்றார் மாற்றார் தேவைகளுக்காகவும் ஜெபிக்க தகுந்த ஓர் உன்னத கருவியாகும். குறிப்பாக , இக்கால இளைய தலைமுறைகளை வழிநடத்த , பெற்றோர்களின் உதவியான ஜெபம் உபவாச ஜெபம் ஆகும் என்றால் அஃது மிகையாகாது.
No comments:
Post a Comment