9/13/14

நற்செய்தி தியானம் நன்மை பயக்கும் அருள் தியானம் !

நற்செய்தி தியானம் நன்மை பயக்கும் அருள் தியானம் !



நற்செய்தி தியானம் நன்மை பயக்கும் அருள் ஜெபமாகும் . அனுதினமும் நற்செய்தி தியானித்தல் பெரும்நன்மை விளையும் என்பது புனிதர்களின்  வாக்கு , மற்றும்  தாய்த் திருட்சபையின் வாழ்வாகும் . திருட்சபையின் அருள்வாழ்வின்  அதாரம் திருப் பலியாகும். அக்தே, தலைசிறந்த ஜெபமாகும் . திருப்பலியின், முதன்மைப்  பாகம் விவில்யத் தியானம் என்றால் அஃது மிகையாகது . அன்றாடம் திருவிவிலியத் தியானத்தை ஊ க்கிவிப்பது  திருப்பலியகும்.

நற்செய்தி தியானத்தை நாம் எங்கும் எப்போதும்  செய்யலாம் . அஃது  ஓர் எளிமையான, இனிமை யா ன  அனுபவச் ஜெபம்  ஆகும் . பல புனிதர்கள்  நாள்  முழுவதும் நற்செய்தி தியானத்தில் செலவழித்துள்ளர்கள். துறவியர்கள் , கன்னியர்கள் , சந்நியாசிகள், நற்செய்தி தியானத்தை தங்கள் ஜெபமாக மேற்கொள்கிறார்கள். காட்டில்  மற்றும் பாலை வனங்களிலும் துறவியர்கள்  நற்செய்தி தியானத்தை நடத்தினார்கள்  அதனை  தங்கள் வாழ்வின் குரி யாகக்  கொண்டார்கள் . ஏன் ,  திருச்சபையை  எதிரிகள்  அழிக்க  முற்பட்ட ஆதி காலத்தில், திருச்சபையின்  துறவியர்கள் பாலைவனத்தில் தஞ்சம் கொண்டு நற்செய்தி தியானத்தை மேற்கொண்டார்கள் . இதனால் திருச்சபை  வேர்கொண்டு வளர்ந்தது. இதனால் நற்செய்தி தியானம் எனும் ஜெபம் மிகவும் சக்தி வாய்ந்ததாய்  காணப் படுகிறது.

புனித பிரான்சிஸ் அசிசி, புனித இன்னாசியர்  மற்றும் எல்லாப் புனிதர்களும் நற்செய்தி தியானத்தை கடைப் பிடித்து  வாழ்ந்தார்கள் . பல புனிதர்கள் நற்செய்தி தியானத்தை தங்கள் வாழ்வாக மாற்றிக் கொண்டார்கள் , இதனால் முக்தி பேறு அடைந்தா ர்கள். ஒருசில புனிதர்கள் நற்செய்தி யை தியானித்து , அதில் ஒருசில வசனங்களை  தங்கள் வாழ்வில் , பேச்சில் , நடவடிக்கைகளில் பின்பற்றினார்கள் , இதனால் அவர்கள் நற்செய்தியை பிரதிபலித்தார்கள், வாழ்வில்  அசாத்திய காரியங்கள் , அற்புதங்கள் கண்டார்கள் . பரிசுத்த ஆவியின் நண்பர்கள் அனார்கள். புனித அந்தோனியார்  இதற்கு  ஓர் உதாரணம் ஆவார்.
 
புனிதர்கள்  மட்டும்மல்லாது , சாதாரண    மக்களாகிய நம்மையும் தாய் திருச்சபை   நற்செய்தி தியானத்தை நம் வாழ்வில் கடைபிடிக்க அழைப்பு விடுக்கிறது என்பதை இரண்டாம் வாத்திகன் சங்கம் உணர் த்துகிறது.

நற்செய்தி தியானம் என்பது , நல்லதோர்  விதையை , நம் உள்ளமாகிய நிலத்தில் விதைப்பதுக்கு சமம்  ஆகும் . உள்ளத்தில் நற்செய்தி தியானம் செய்தால் உள்ளம் பரிசுத்தமாகும் , மற்றும் அமைதி கொள்ளும் வழி பிறக்கும்.
எல்லாச் செயல்களுக்கும், பிறப்பிடமானது உள்ளம்  என்பதால் நற்செய்தி தியானம் செய்யும் உள்ளம் நல்ல செயல்களை உருவாக்கும் உறைவிடமாக மாறும் மேன்மை பெறும். இதனால் அன்றாடம் விதைக்கப்படும் நற்செய்தி தியானம் மிகவும் அவசியமாகும், வாழ்வில்  நன்மை பயக்கும்  கனியாகும்.

நற்செய்தி தியானம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் அன்பையும்   அரவணைப்பையும் உணரச் செய்யும் வல்லமை  கொண்டது . இதனால் வாழ்வில் நெருக்கடி வேழைகளில் உற்ற துணையாக உடனிருந்து தேற்றும் அருமருந்தாகும். உள்ளம் கலக்கம் கொண்ட நேரங்களில் தெளிவான சிந்தனைகளை உருவாக்கும். வாழ்வின் தேடல்களில் வழிகாட்டும் ஒளியைத் தரும் கலங்கரை விளக்காகும். 

நற்செய்தி  ஓர் வீரிய வாழ்  ஆகும் , மேலும் , இருபுறமும் கருக்கு கொண்ட வாழ் ஆகும் . அஃது அறிவிப் பவரையும்  கேட்போரையும் வழிபடுத்தும்  அருள் வாக்கு ஆகும்  என்று விவிலியம் விளம்புகிறது. சோதனை வேழைகளில் சக்தி தரும் , துவண்ட நேரங்களில் நம்பிக்கையூட்டும், புரியாத சூழல்களில் சீரிய சிந்தனை தருவது நற்செய்தி தியானம் ஆகும். இதனால் நற்செய்தி தியானம் செய்வோம் பலன் பெறுவோம்.








No comments:

Post a Comment