9/25/14

சிலுவைப்பாதை தியானம் உள்மனம் ஆற்றும் உயர்ந்த ஜெபம்

சிலுவைப்பாதை தியானம் உள்மனம் ஆற்றும் உயர்ந்த ஜெபம்


வருத்தப்பட்டுப்  பாரம் சுமப்பவர்களே  எல்லோரும்  என்னிடம்  வாருங்கள்  என்று  கூறினார்  ஆண்டவர்  இயேசு . அதன்படி உடல்  உள்ள பாரங்களால் வாடும் வேளையில் , உடலுக்கு  சுகமும் , உள்ளத்திற்கு  உறுதியையும் வேண்டித் தரக்கூடிய  ஓர் அற்புத ஜெபம் சிலுவைப்பாதை தியானம் ஜெபம் ஆகும் . பதினான்கு ஸ்தலங்களும் பதினான்கு வகையான வாழ்வின் தத்துவங்கள். மானிடர் அனைவருக்கும் பொதுவான திருப்பாடுகளை சிலுவைப்பாதை தியானம் சித்தரிகின்றது. இதனை ஜெபிக்கும்போது  நம் பாடுகளை கிறிஸ்துவின் பாடுகளோடு இணைக்கும் பேறு  பெருகின்றோம் . இதனால் நம் சுமைகளை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து மனம் அமைதி கொள்கிறோம்.  சிலுவைப்பாதை தியானம் அமைதி  தருகின்ற  ஜீவ ஊ ற்றகும்.

சிலுவைப்பாதை தியானம் ஜெபம் நம் இம்மை அன்றாட வாழ்வின் அல்லல்கள் , இடர்பாடுகள், தேவைகள் , நெருக்கும் சூழ்நிலைகள்  போன்றவற்றை  எல்லாம்  வல்ல இறைவன் பாடுகளின் வழியாக இறைவனுக்கு  அர்ப்பணித்து ஜெபிக்கும் வல்லைமையான ஜெபம் ஆகும் . இந்த ஜெபத்தை ஜெபிக்கும் போது உள்ளத்தில் ஆறுதல் கிடைக்கின்றது . நம்  சோதனை வேளைகளில் நாம் தனியாக இல்லை , இறைவன் நம்மோடு  நம்  சிலுவைகளை  இன்று , இப்போது  சுமக்கின்றார்  என்ற  நம்பிக்கை  தருகின்றது . இதனால் சிலுவைப்பாதை தியானம் நம்பிக்கை  ஊட்டும் நலன் தரும் ஜெபம் ஆகும்.

சிலுவைப்பாதை தியானம் ஜெபம்  தனிப்பட்ட ஜெபமாகவோ , குடும்ப  ஜெபமாகவோ , மேலும்  சமுக ஜெபமாகவோ  ஜெபிக்ககூடிய  தாய் திருட்சபையின் தன்னிகரற்ற பொக்கிஷம் ஆகும் . இச்செபம் நம் விசுவாசத்தின் அடிப்படையாகும் . இதனால் இதனை ஜெபிக்கும் போது  நாம்  நம் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறோம். இதனைக் காணும்  அலகை  தூர  ஓட்டம் பிடிப்பான் . இதனால் இந்த ஜெபம் உடல் , உள்ள  சோதனைகளில் இருந்தும் , பாவத்திற்கு ஏதுவான சூழ்நிலைகளில் இருந்தும் நமை மீட்க வல்ல விடிவிக்கும் ஜெபம் ஆகும்.

சிலுவைப்பாதை தியானம் ஓர் எதார்த்தத்தின் ஜெபம் ஆகும் . சிலுவைப்பாதை தியானம் கிறிஸ்துவின் பாடுகளின் மூலம் நம் இன்றைய வாழ்வின் எதார்த்தங்கள் அனைத்திற்கும்  பொருந்தும்  ஓர்  விடுதலை ஜெபம் ஆகும். இச்ஜெபத்தில் , கிறிஸ்துவின் பாடுகளில் நம் பாடுகளையும் காணலாம். அதுமட்டுமின்றி  நம் பாடுகளின் விடுதலையையும்  ஜெபித்து  பெற்றுக்கொள்ளும்  வாய்ப்பை அடைகின்றோம். இதனால் சிலுவைப்பாதை தியானம் அனுதின  ஜெபமாக  அமைந்தால் நம் பாரங்கள் குறைய  வழி  பிறக்கும் என நம்புவோம்.



No comments:

Post a Comment