மனவலிய ஜெபம் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும் : வல்லமையான வலிமை அளிக்கும் ஜெபம் ஆகும்.
மனவலிய ஜெபம் ஓர் தொடர் ஜெபம் ஆகும் . ஜெபத்தின்போது நாம் இறைவனோடு பேசும் வாய்ப்பை அடைகின்றோம் . இதனால் மனவலிய ஜெபம் வழியாக நாம் தொடர்ந்து இறைவனோடு நாள் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும். எப்படி செல்போன் வழியாக மற்றவருடன் உடனடி தொடர்பு கொள்ள முடிகிறதோ , அப்படியே நாம் இருக்கும் இடத்தில் , எப்போதும், எங்கேயும் , எந்நிலையிலும் , எத்தருணத்திலும் , எல்லாத் தேவைகளிலும் இறைவனை நாட முடியும் . மனவலிய ஜெபம் ஓர் அரிய இறை தொடர்பு சாதனம் ஆகும் .
மனவலிய ஜெபம் ஓர் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும். எப்படி ஊற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து அறாகப் பாய்கிறதோ, அவ்வண்ணமே ஓர் வற்றாத ஜெப ஊற்றாக மனவலிய ஜெபம் நம் உள்ளத்தை இறைவன்பால் ஓடச் செய்கின்றது. மனவலிய ஜெபம் ஜெபிக்க ஜெபிக்க, அஃது நம்முள் ஓர் தெய்வீக அங்கமாக மாறுகின்றது , மேலும் இச்ஜெபம் நம்மையும் பிறரையும் மாற்றக்கூடிய ஓர் அற்புத கருவியாகும். மனதை ஒருங்குபடுத்தி , சிந்தையை சீர் படுத்தி, ஜெபிப்போர் உடலையும் , ஆன்மாவையும், ஒருங்கிணைத்து இறை இரக்கத்தின்பால் இட்டுச் செல்லும் வற்றாத ஜெப ஊற்றாகும்.
அவசரமான உலகில் , அவசரப் போக்கில் ஓடிகொண்டிருப்பது நம் அனைவரின் வாடிக்கையான வழியாகிவிட்டது. இத்தகைய சூழலில் மனவலிய ஜெபம் மிகவும் கைகொடுக்கும் ஜெபமாக விளங்குகிறது என்றால் அஃது மிகையாகாது.
"யேசுவே இரக்கமாயிரும்" என்று அடிக்கடி சொல்லும் மனவலிய ஜெபம், இயேசுவின் இரக்கத்தை நம்மைச்ற்றி வியாபிக்கச் செய்யும் வல்லைமையான ஜெபம். ஏசுவே தாவீதின் குமாரனே, என் மீது இரக்கமாயிரும் என்று ஓயாது கூப்பிட்ட, குருடனுக்கு இரக்கம் காட்டினர் இயேசு , இன்றும் நம் குரல் கேட்டு அதிசயம் செய்ய வல்லவராய் இருக்கிறார்.
"யேசுவே நான் உம்மை நம்புகிறேன் " என்று அடிக்கடி சொல்லும் மனவலிய ஜெபம், மனதிற்கு சக்தியும் , ஆற்றலும் , அமைதியையும் அளிக்கக்கூடிய ஜெபம் ஆகும் . இயேசு தன்னிடம் ஓயாது மன்றாடிய கனானயப் பெண்ணின் நம்பிக்கையை கண்டு வியந்து அவளைப் பராட்டி அவள் வேண்டுதல் கேட்டார் . மற்றும் நூற்றுவர் தலைவனின் விசுவாசம் கண்டு அவன் ஜெபம் கேட்டார். இந்த மனவலிய ஜெபம் ஏசுவின் மீதுள்ள நம்பிக்கையை ஓயாது அறிக்கை செய்வதால் , இஃது ஓர் வல்லமையான ஜெபம் ஆகும்.
மற்றும் இயேசுவின் இரத்தம் ஜெயம், யேசுவே வாழ்க , ஏசுவுக்கே புகழ் , ஏசுவுக்கே நன்றி, யேசுவே உம்மை அன்பு செய்கின்றேன் , போன்ற வார்த்தைகளை மனவலிய ஜெபமாக சொல்லலாம். இவை யாவும் சில எடுத்துக்காட்டுகளே. மேலும், விவிலியத்தின் வார்த்தைகளை, குறிப்பாக சங்கீதங்களை மனவலிய ஜெபமாக வல்லமையாய் உச்சரித்து, அடிக்கடி சொல்லும் மனவலிய ஜெபமகா மாற்றலாம்.
மனவலிய ஜெபம் ஓர் வற்றாத ஜெப ஊற்றாகும் : வல்லமையான வலிமை அளிக்கும் ஜெபம் ஆகும். அஃது நம் கதோலிக்க பாரம்பரியம். ஜெபித்து பயன் பெறுவோமாக.

No comments:
Post a Comment