9/13/14

திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்

திரியாத்திரை  நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்



கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில், பாரம்பரியத்தில்   நாம் பலவகையான அருள் பொகிஷங்களை காணலாம்.   அவற்றில் நவநாள் ஜெபங்களும் ஒன்றாகும்.

ஜூலை  மாத கொடை  வெயில் மண்டையை பிளக்கிறது . வேளாங்கன்னியில் 10.30 திருப்பலியை முடித்து, 12 மணிக்கு  தங்கும் அறையை நோக்கி நானும் என் குடும்பமும் நடந்து கொண்டிருந்தோம். நடந்தோம?  இல்லை வெயில் தங்காது  ஓடிக்  கொண்டிரிருந்தோம்   என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் மக்கள் எங்கும் நிறைந்து வழிந்தார்கள் . தங்கள் வேண்டுதல்கள்  நிறைவேற்றுவதில் சுருசுருப்பாக இருந்தார்கள்.  வெயிலோ மழையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை , என்  பார்வை  உச்சி வெய்யிலில் முழந்தாழிட்டு நடக்கும் பக்தர்கள் பக்கம் சென்றது. என் உள்ளம் நம்பிக்கையின்  அனுபவம்  கொண்டது. அப்போது ஒரு அருமையான  எண்ணம்  என் மனதை  வருடியது . அந்த எண்ணமானது  இப்படியாக  இருந்தது. அங்கே  நான்  காணும் பக்தர்கள்  ஒவ்வோருவரும் ஓர் புதுமை.  ஒவ்வோரு பக்தரும்  பல்வேறு  வேண்டுதல்களின்  சாட்சி , நம்பிக்கையின் சாட்சி , புதுமையின் சாட்சி , அவர்கள் யாவரும்  கண்காணும் விசுவாச நற்செய்தியா ளர்கள்,  அற்புத உயிருள்ள வேத சாட்சிகள்.

வெயிலை மறந்தேன் அங்கே கொஞ்சம் நேரம் நின்று  நான் முதன்முறையாக  என்னை  மறந்து  என்  தனிப்பட்ட குடும்ப மன்றாட்டை விடுத்து , அங்கே  முழந்தாழிட்டுச்   செல்லும்  திரியாத்திரை  பக்தர்களுக்காக , அவர்தம்  வேண்டுதல்களுக்காக  மனம் உருகி செபித்தேன்.

திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்.
தொடர்ந்து  நடந்து  கொண்டிருந்தோம், அப்போது அங்கே கிறிஸ்தவர்கள்  அல்லாத பிரமதத்து  சகோதர்கள்  அதிகமாய், குடும்பம் குடும்பமாய்  , சந்தோஷமாய், மாதாவை  காண வேகமாய்  சென்றுகொடிருந்தர்கள். அவர்களை  காணும்  போது , என்  விசுவாசாம் மிகவும் சிறியதாக  மாறியது. திருச்சபையின்  மகிமையும்  அதன்  மாபெரும்  சேவையும்   கண்கூடாக விளங்கியது. இப்போது  நான்  அவர்களுக்காகவும்  செபித்தேன். இவற்றையெல்லாம் மனதில் ஏந்திக்கொண்டு  நடந்த  நான்,  பாரமாக நினைத்த என் கவலைகள்,  வேண்டுதல்கள்,  ஒன்றுமில்லாதது   போன்று  தோன்றியது. பாரமான மனதோடு சென்ற  நான்  லேசான  மனதோடு, மிகுந்த  நம்பிக்கையோடு   தங்கும்  அறையை  அடைந்தேன்.

திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நம் விசுவாசத்தை ஆழப்படுத்துவதை நாம்  அறிவோம். அங்கே  நம் ஜெபங்கள்  உலகத் திருச்சபையோடு சேரும்  போது நாம்  நம்மை புனிதர்களின்  விசுவாசத்தோடு  இணைக்கும்  அற்புதம்  நிகழ்கிறது. இதானால்  குறைந்த  நம்  விசுவாசம்  பலமடங்காகப்  பெருகுவது  ஓர்  அதிசயம்  ஆகும்.  திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்.         


No comments:

Post a Comment