9/21/14

திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம் திடனளிக்கும் அரும் ஜெபம் ஆகும்

திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம் திடனளிக்கும் அரும் ஜெபம் ஆகும்






திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம் திடனளிக்கும் அரும் ஜெபம் ஆகும். தற்போது உலகமெங்கும், கதோலிக்க ஆலயங்களில் திவ்விய நற்கருணை ஆராதனை ஸ்தாபிக்கப்பட்டு , மக்கள்  திவ்விய நற்கருணை ஆராதனை செய்ய  ஊ க்குவிக்கப்படுகிரர்கள். திவ்விய நற்கருணை ஆராதனை  தாய்த்திருச்சபை  நமக்கு அருளிச்செய்துள்ள  ஓர்  அற்புத  கொடையாகும்.

 திவ்விய நற்கருணை ஆராதனை, உள்ளத்திற்கும் , உடலுக்கும், திடமும் , ஊக்கமும் தரும் அரிய ஜெபம் ஆகும் . திவ்விய நற்கருணை ஆராதனையில்  வீற்றிருக்கும் ஆண்டவர் , அற்புதம் செய்யும் நாசேரத் யேசுக்கிறிஸ்து  ஆகும் . உடைந்த உள்ளங்களை குணமாக்கவும், சோர்ந்த மனங்களை  தேற்றிடவும் , காயப்பட்ட இதயங்களை  ஆற்றிடவும் , நோயுற்ற  மனதையும் , உடலையும்  குணமாற்றவும், கட்டப்பட்ட இதயங்களை விடுவிக்கவும் , இருகரம்  விரித்தவறாய், எப்போதும் நமக்காய் இறைவன் , சுதனாகிய   இறைவன் , உயிர்த்த ஆண்டவர் காத்திருக்கின்றார். இந்த அற்புத உண்மையை  ஒரு மணி   நேரம்  அவரோடு அமர்ந்திருந்த அனுபவம் கொண்டவர்கள் அறிவார்கள் .

திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம்  இறைவனோடு  அமர்ந்து  ஜெபிக்கும்  ஜெபம் ஆகும் . நித்ய குருவான இயேசு, நம்முடன்  அமர்ந்து நமக்காய் இறைவனிடம் தம்மை பலியாக்கி, இன்று   நம்மை தம் உயிர்த்த பிரசன்னத்திற்குள்  ஈர்த்துக்  கொண்டு , நம்மை வெற்றிப்  பெறச்செய்யும்  அற்புதம் ஏராளம். அதிசயங்கள்  அற்புதங்கள் இன்றும் திவ்விய நற்கருணை ஆராதனையில்  தினம்தோரும்  நடக்கின்றன . அன்றாட  தேவைகளும் , அவசரத்  தேவைகளும் , ஆன்மத்  தேவைகளும் , உடல் நன்மைகளும் , தனிப்பட்ட தேவைகளும் , குடும்பத் தேவைகளும் , ஊர் தேவைகளும் , உற்றார் தேவைகளும் , சமூகத் தேவைகளும் , நாட்டின் தேவைகளும் , ஏன்  உலகத்  தேவைகளும்  எந்நாளும் திவ்விய நற்கருணை ஆராதனையின்  பிரசன்னத்தில்  எறேடுக்கபட்டு, நிறைவேற்றப்படுகின்றன . இதனால்  மக்கள்  தற்காலப் பலன்  மற்றும்  மறுவுலகப்  பலன்களையும்  இம்மையில் அடைகிறார்கள்  என்றால்  அஃது  மிகையாகது .

திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபத்தின்  பலன் சூழ்நிலைக்கேற்றார்ப்போல்  இறைவனால்  அருளிசெயப்படுகின்றது. அனுபவங்கள் பல. நான் கண்ட  அனுபவங்கள்  சில  இங்கே  இறைவனின்  மகிமைக்கே  சமர்ப்பணம் . சில நேரங்களில் விடுதலையும் , சில நேரங்களில் வழிநடத்துதலும் , சில  நேரங்களில் அலோசனையும், சில நேரங்களில் அனுபவமும் , சில நேரங்களில் மனமாற்றமும் , சில நேரங்களில் மனத்தெளிவும், சில நேரங்களில் மன அமைதியும், சில நேரங்களில் அற்புதங்களும் , சில நேரங்களில் குணமாக்குதலும், சில நேரங்களில் உற்சாகமும் , சில நேரங்களில் ஆன்ம மனஸ்தாபமும், பச்சாதாபமும் , சில நேரங்களில்  மன்னிப்பும் , சில  நேரங்களில்  மன்னிக்கும்  மனப்பான்மையும் , சில  நேரங்களில் கூரிய சிந்தையும் , சில நேரங்களில் நேரிய யுக்தியும் , சில  நேரங்களில் சக்தியும் , சில நேரங்களில் துணிவும் , சில நேரங்களில் வித்தியாச  கண்ணோட்டம் , சில நேரங்களில் சூழ்நிலையை ஜெயிக்கும் திடனும் , சில நேரங்களில் சூழ்நிலைகளை   பொறுக்க திடனும் , சில நேரங்களில் ஜெபிக்கத் தாகமும் , சில நேரங்களில் ஜெபிக்கத் திடனும் , சில  நேரங்களில் ஜெபிக்கும்  முறையும் , சில நேரங்களில் சூழ்நிலையை  வெளியே   நின்று  பார்க்கும் திறனும் , சில  நேரங்களில் சூழ்நிலையை  அலசி  அறியும் திறனும், சில நேரங்களில்  தெள்ளிய  அறிவும் , சில  நேரங்களில் செயல்லாகும்  அககங்களும், சில நேரங்களில் பகுத்தறியும் திறனும் , சில நேரங்களில் நல்லதோர் இளைப்பாறுதலும், பல  நேரங்களில்  சந்தோஷமும் , பல நேரங்களில் ஆன்ம  அமைதியும் , பல நேரங்களில் வருபவற்றை  அறியும்/உணரும்   திறனும் , பல  நேரங்களில் தேவ  நட்புறவும் , பல  நேரங்களில்  நன்றியுணர்வும், பல  நேரங்களில் பிறருக்காக ஜெபிக்கும் வாஞ்சையும் , பல நேரங்களில் எதிர்ப்போருக்காக ஜெபிக்கும்  திறனும் , பல நேரங்களில் எதிராய்  நாம் கருதுவோரில் இறைவனின்  சித்தத்தையும் , அவர்களில் வழியாய்  இறைவனின்  கிருபையான வழிநடத்துதலையும் அறியும்  பண்பும் , பல  நேரங்களில்  பொருமையையும், பல  நேரங்களில்  இறை அன்பையும், அதை  வெளிப்படுத்தும்  திடனும், பல நேரங்களில்  தேவ  பிரசன்த்தை  அருகமையில் உணரும் பலனும் , பல நேரங்களில் ஒளியும், பல நேரங்களில் நல்லதோர் சிறிய தூக்கமும்( இஃது ஓர் அனுபவம் ), ஆனால் எல்லா நேரங்களிலும் திவ்விய நற்கருணை ஆராதனையின்  பின்  ஓர்  புரியாத அமைதி உள்ளத்தையும் , உடலையும்  சூழ்ந்துகொள்ளும்  அனுபவம்  மறுக்க முடியாத அனுபவ உண்மையாகும்.


திவ்விய நற்கருணை ஆராதனை ஜெபம்,  இறைவனின்  இனிய  அழைப்பு  ஆகும் . வருத்தப்பட்டு  பாரம்  சுமப்பவர்களே, எல்லோரும்  என்னிடம்  வாருங்கள்  என்று  கூறினார்  இயேசு . மேலும்  நான்  உங்களுக்கு  இளைப்பாறுதல்  தருவேன் என்று  வாக்குருதி  தந்தார் .  அழைத்தார் , அழைப்பை  ஏற்று  வருவோருக்கு,  ஆறுதலும்  தருகின்றார்  திவ்விய நற்கருணை ஆராதனையில், நம் ஆண்டவராகிய  யேசுக்கிறிஸ்து.

ஒருமணி  நேரம் என்னிடம்  அமர்ந்து  ஜெபிக்ககூடாதா? என்று  சீடர்களுக்கு  இயேசு  விடுத்த வேண்டுதல் , இன்று நம்மையும்  ஜெபிக்க  அழைக்கும்  அழைப்பாகும். வாழ்வின்  தேவைகளில்  அன்றாடம்  இறைவனைத்  தேடி  பலன் அடைய ஏதுவான திவ்விய நற்கருணை ஆராதனை எனும் அரிய வரத்தை பயன் படுத்திப்  பலன்  பெறுவோம்.


No comments:

Post a Comment