9/13/14

ஜெபமாலை ஓர் அருள்மாலை!



ஜெபமாலை ஓர் அருள்மாலை. அனுதினமும் ஜெபிப்பதால் கிடைக்கும் கோடி அற்புதம் . புனிதர்களின் வரலாற்றில் ஜெபமாலை ஜெபித்ததினால் பெற்ற அருள்வரங்களை  நாம் கண்கூடாக காணலாம் . அன்னை கன்னி மரி நமக்காக நம்மைக்  காக்க, அருள் வரங்களை நாம் ஜெபித்து  கண்டிட, அருளிச்செய்த தவ மாலை.

பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி தந்த  அன்னை, அவர்கள்  வழியாக, உலகிற்கு நற்சேதி  சொன் னார். லூர்து நகரில் பெர்னதிர்கு தோன்றிய  அன்னை , ஜெபமலையின் உன் னதத்தை, உலகம் அறிந்திடச் செய்தார் . இன்னும் டொமினிக் சாவியோ, டொன்போஸ்கோ போன்ற புனிதர்கள் ஜெபமலையின் பக்கிதியைப்   போற்றி வளர்த்தார்கள். புனித பியோ , தினமும் , பல மணி நேரங்கள் ஜெபமாலை செய்வதில் செலவிட்டார். மேலும் , இன்றும் , உலகமெங்கும்  கோடிகணக்கான கத் தோலிக்க     கிறிஸ்தவர்கள்  ஜெபமாலை  செய்து பயன் பெறுகிறார்கள் .

ஜெபமாலை அலைகயை வெல்லும் சக்தி தரக் கூடிய   ஜெபம்  என்றும் , புனிதர்கள்  கருதுகிறார்கள் . இன்றைய அவசர உலகில் ஜெபமாலை ஜெபிக்க நேரம் இல்லை என்று  பலர் எண்ணலாம். ஆனால் , ஜெபமாலையை  எந்நிலையிலும் , எங்கும் சொல்லலாம் . ஜெபமாலையை  மனதிலும்  சொல்லலாம் , சத்தமாகவும்  சொல்லலாம் . தனியாகவும், குழுவாகவும், குடும்பமாகவும் சொல்லலாம் . ஜெபமாலை  ஓர் அரிய பெரிய மேலும் எளிய ஜெபம் ஆகும்.

ஜெபமாலை  விவிலியத்தின் வழி  வந்த அடிப்படையான  விசுவாச  ஜெபம்  ஆகும். இதன் தேவ இரகசியங்களைத்  தியானிக்கும்போது  தேவ அருள் பிரசன்னம் நம்மை சூழ்ந்து கொள்வதைக் காணலாம். இன்னும் சில  நேரங்களில், ஜெபமாலை நம்மை பக்திப் பரவசமாக் கும்  வல்லமை  கொண்டதாய் தோன்றுகிறது. மற்றும்  பல வேழைகளில் இச்ஜெபம் , நம்மை  பாவ சூழ்நிலைகளில் இருந்து காக்கும் வல்லமை கொண்ட ஜெபமாகத் திகழுகிறது. இன்னும்  பல  நேரங்களில் நம்மை ஆபத்திலிருந்து, நோயிலிருந்தும் , பசாசின்  சூழ்ச்சிகளிலிருந்தும் காப்பாற்றும் அரும் மருந்தாக விளங்குகின்றது.

தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது, தானாக இதயத்தில் அமைதி  உண்டாகக் காணலாம். சந்தோஷ  தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது, இறை மகிமை , இறை அன்பு , இறை மகிழ்வு , நம்மைத்  தழுவிக்கொள்ள  உணரலாம். இந்த தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது, திருக்குடும்பத்தை முழுமையாகத் தரிசிக்கலாம். அவர்களில் , திரித்துவ  தேவனையும் , அவர்தம்  அன்பையும்  உணரலாம் . துக்கத் தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது, இறைவனின் , அன்பையும், தியாகத்தையும் , பாடுகளையும், மீட்பையும்  கண்டு  உணரலாம் . இந்த தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது , தேவ நம்பிக்கை , வல்லமை , வாழ்வில்  நம்பிக்கை , துன்பத்தில் ஆதரவு , துயரத்தில்  தேறுதல் , நோயில் சுகம் , தனிமையில்  துணை , தோல்வியில் உயர்வு , வேதனையில் சாதனை , போன்ற வரங்கள் கனியக் காணலாம் . இதனால் இறை நம்பிக்கை  மேல்லோங்குகிறது , அவநம்பிக்கை  விலகிச் செல்லுகிறது . மகிமை நிறை தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது, இறை மகிமையும்  அவர்தம் மறுருபமும் நம்மை மகிழச்செய்கிறது. ஒளியின்  தேவ  இரகசியங்களைத்  தியானிக்கும்போது, இறைவனின் அருட்ப்பணியும், அவர்தம் தோழமையும் , நற்செய்தியும், நம்மை மகிழச்  செய்கிறது .

இப்படியாக தேவ  இரகசியங்களைத்  தியானித்து ஜெபமாலை   செய்வது  சாலச்சிறந்த  ஜெபமாகும் . எப்போதும் ஜெபமாலை ஜெபிப்போம். நம் அன்னை  மரியின் பரிந்துரையால் வாழ்வில் மகிழ்வாய் வாழ்வோம் .

ஜெபமே ஜெயம் ! அன்னை மரி வாழ்க !

No comments:

Post a Comment