11/15/14

பாடல்களினால் ஜெபித்தல் இருமுறை ஜெபித்தல் ஆகும் ( Praying through songs: singing once is equal to praying twice)



பாடல்களினால் ஜெபித்தல் இருமுறை ஜெபித்தல் ஆகும்

பாடல்கள் நம் திருச்சபையின் வழிபாட்டுகளில் முக்கிய அம்சம் ஆகும் . ஒருமுறை  பாடுவது இருமுறை ஜெபிப்பதற்கு  சமம் என்பது வழக்கு. பாடல்களினால் ஜெபசிந்தனைக்குள் நுழைவது மிகவும் இயல்பான ஓர் அற்புத ஜெப அனுபவம் ஆகும்.

பெரியசாமிபுரம் என்னும் சிறிய கிராமம் நான் பிறந்த ஊர் ஆகும் . அங்கே  திருவிழா நாட்களில் இருதைய அன்னைக்கு பதம் என்னும் ஓர் அறிய அருமையான பாடல் பாடுவார்கள் . மூன்றாம்  வகுப்பிலிருந்து  பாடல்  குழுவில் பாடும்  நான் அங்கே அன்னையின் ஆலயத்தில் பல பாடல்கள் பாடிய அனுபவம்  உண்டு . அந்த அனுபவங்கள் எப்போதும் என் நினைவில் நின்றவை.  ஆனால்  பெரியவர்கள்  சேர்ந்து  பாடும் பதம்  எப்போதும் என் மனதில் பதிந்த ஜெபம்  ஆகும். மக்கள் எல்லோரும்  சேர்ந்து  உள்ளம் உருகப்  பாடும் இந்த அற்புத ஜெபம் , மிகவும் சக்தி வாய்ந்த ஜெபம் ஆகும் . இப்போதும்  என் தேவைகளில் இருதய அன்னையின் படத்தின் முன்னால் நின்று  நான் ஜெபிக்கும்  ஜெபம் ஆகும் . இருதய அன்னையின் குழந்தையான  நான் படிப்பிற்காக என்  11 வயதில் வெளியே  வந்தாலும் , உலகெல்லாம் அன்னையின் அருளால் நான் பயணித்தாலும் , என் குளந்தை உள்ளம் என்றும்  என்  இருதய அன்னையின்  பாதம் சமர்ப்பணம் ஆகும் .

உலகில் பல நாடுகளில் பயணம் செய்துள்ள  எனக்கு  , அங்கு  உள்ள பங்கு  ஆலயங்களிலும் பாடல் குழுவில்  பாடும்  பாக்கியத்தை  இறைவன்  அருளியுள்ளார். பாடும் போது  நாம்  மனதையும் , உள்ளதையும் , உடலையும் , உணர்வையும், ஆவியையும், தெம்பையும் , ஆன்மாவையும்  ஒன்றாக  இணைத்து இறைவன்பால் ஜெபிக்கின்றோம். பாடும்  போது  மேற்சொன்ன எல்லா  அங்கங்களும் இணைந்து   செயல்படுவதை  நாம்  உணரலாம்.

பாடல்களால் இறைவனை துதிக்கத் தகுந்த ஜெப வாய்ப்பை பெறுகின்றோம். துதியினால் விடுதலை கிடைக்கும் என்பது விவிலியக்  கூற்றாகும். பாடல்கள் மன  உருக்கமான  ஜெபங்களை இறைவனிடம் எழுப்புவதற்கு ஏற்ற  அருள் கருவியாகும். பாடல்களால்  இறைவனுக்கு நன்றி  கூறுவது  மிகவும்  எளிய மேலும்  வல்லமையான  ஜெபம்  ஆகும். இறைமக்களோடு சேர்ந்து  பாடி  ஜெபிப்பது  ஓர் வல்லமையான  ஜெபம்  ஆகும் . பாடும்  உதடுகள், பாடும்  நாவும்  நன்றியுடைய உள்ளத்தின்  வெளிப்பாடுகள்  ஆகும்.  பாடல்களில் ஜெபிப்பது  நம்  கத்தோலிக்க   பாரம்பரியமும் ஆகும்.  பாடல்களில்  ஜெபிக்கும்போது நாம்  நம்மை  இறை  பிரசன்னத்திர்குள் நம்  முழு  மனதோடு  சமர்பிக்கின்றோம். இதனால்  நாம்  இறைபிரசனத்தால்  தேற்றப்பட்டு, மன  அமைதி  பெறுகின்றோம் .

பாடல்களில்  ஜெபித்தல்  துன்பத்தில் , இக்கட்டு  வெளைகளில் விடுதலை பெற்றுத்  தரும்  ஓர்  அருள்  வரம்  ஆகும் .பாடும் போது நாமும் ஜெபித்து மற்றவர்களையும் ஜெபிக்க தூண்டுகின்றோம். இதனால் ஜெபம் இரட்டிப்பு  ஆகின்றது . தாவீது  அரசன்  பாடல்களினால்  சவுலின் துன்பம் விலகியது , மேலும்  தாவீது  வெற்றி  பெற்றார் . இறைவனுக்கு  மிகவும் நெருங்கிய  நண்பராகும்  பேறுபெற்றார். சின்னப்பரும் ராயப்பரும்   ஜெயிலில் பாடல்களால் ஜெபித்தார்கள்  . அதனால் இறைவனால்  அற்புதமாக விடுதலை  பெற்றார்கள் .  ஜோசுவாவின் பாடல்களால்  எரிக்கோ  மதில்கள்  உடைந்தன. இதனால்  இஸ்ரேல்  காப்பாற்றப்பட்டார்.

பாடல்  குழுவில் சேர்ந்து  பாடுவது  ஓர்  அருள்  பணியாகும். பங்கு  மக்களின்  ஆன்ம வழிபாட்டுக்கு  உதவும் ஓர்  அரிய  பணியாகும் . விண்ணகத்தை  மண் ணகத்திற்கு  கொண்டு  வருவதற்கு ஏற்ப  இறை அநுபவத்தை  இறை  மக்களுக்கு அள்ளித்தரும்  ஓர்  வரப்ரசாதம் ஆகும். பாடல்  குளுவில்   பாடுவது  ஓர்  இறை  பணியாகும். இதனால் இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறுவோம் என்பது உறுதியாகும்.

பாடல்கள்  தனி  ஜெபத்திலும் , குழுவாக ஜெபிக்கவும் உதவும்  ஓர்  அருள்  கருவியாகும். தனி    ஜெபங்களில்  பாடல்கள் உடல் , உள்ள , அன்ம  பலன்கள் பெற்றுத் தருபவையாக அமைகின்றது. குழுவாகப்  பாடும் போது திருச்சபைக்கே பலன்  வாய்க்கச்  செய்யும் அருள்  வரம்  ஆகின்றது.

இறை பாடல்களை கேட்டுப்  பயனடையும்  போதும் ஜெப சிந்தனை  மேலோங்குவதை  நாம்  உணரலாம். இதனால் பாடல்கள்  பாடும் போதும்  கேட்கும் போதும்  ஜெபமாக  மாறுகின்றது. இதனால்  அருள்  பலன்  இருமடங்காகிறது   என்று  அறிகின்றோம்.
   பாடல்களினால் ஜெபித்தல் இருமுறை ஜெபித்தல் ஆகும். பாடல்களால்  இறைவனை  துதிப்போமாக.

தமிழ் பாடல்கள்
https://www.youtube.com/watch?v=hPkbMj0cGGs&index=8&list=PL398E49CEA0877DA9


No comments:

Post a Comment