11/8/14

முதல் சனிக்கிழமை பக்தி ஓர் அருள் வரம் மற்றும் நம் பாரம்பரியம் ஆகும்


முதல் சனிக்கிழமை பக்தி ஓர் அருள் வரம் மற்றும்  நம் பாரம்பரியம் ஆகும் 
பருவமழை பொளியும் பருவ காலம். காலைப்  பனியும்  இதமான மாலைத் தென்றலும்  நமை வருடிதத் தரும் இனிமையான நவம்பர் மாதம்.  பெரியசாமிபுரம்  சுற்றியுள்ள பனையும், புன்னை காடுகளும் , அலையாடும்  காயல் கடலைகளும்  கவிபாடி இருகரம் விரித்து, இறைமகனை மன்றாடும்,  என்  அன்னை இருதயத்தாய் பாதம் பணியும் அருளின் நேரம். அன்றாடம்  அலுவல்கள் பல புரிந்து அன்னையின் பாதத்தில் அமர்ந்து  வாழும் எளிய மற்றும் இனிய மேலும் பக்தியில் திளைத்த மக்கள் வாழும் புண்ணிய பூமியில் வீ ற்றிருக்கும்  பங்கு பெரியசாமிபுரம் இருதயன்னை பங்கு ஆகும் . இங்கே , கிழக்கு , வடக்கு , மேற்கு மற்றும் தெற்கு திசைகள் எங்கும் அன்னையின் அருள் ஆழுகை ஆட்சி செய்யும் அற்புதம் கோடி . அதனை வார்த்தைகளில் எழுத முடியாத மகிமையுடையது  இருதய அன்னையின்  அழகு. 

இந்தப் பங்கில், கிழக்கு தெருவையொட்டி ஓர் அமைதியான வனம் அமைந்துள்ளது. அஃது தந்தை பர்னபாஸ் அமைத்த வளைவு வழியாய் தொடங்கி  பரந்து விரிந்த நந்தவனம்  போல் காட்ச்சி அளிக்கும் ஓர் அருள் வனம் ஆகும். அங்கே ஜெபமாலை அன்னையின் ஆட்சி அருள் மலரும் அன்பு  வனம் ஆக அமைந்து இருப்பது , ஜெபமாலை  அன்னை  ஆலயம். இந்த ஆலயத்தை வருடம் ஒருமுறை நான் சென்று தரிசித்து பயனடைவது வழக்கம். இந்த  புனித ஆலயத்தில் ஓர் அமைதி நம்மை தேடித்  தழுவிக் கொள்ளவதை  நாம் அனுபவிக்கலாம். அன்னையின் பிரசன்னத்தை  நாடி  அக்கம்  பக்கம்  இருந்து  எளிய மக்கள் வந்து போவது  வழக்கம் . போனமுறை  நான்  சென்ற போது  அன்னையின் ஆலயத்தில் பங்கு மக்களும் குருவும்  சேர்ந்து ஜெபமாலை அன்னைக்கு செய்யும் முதல் சனிக்கிழமை பக்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது .அருமையான  முதல் சனிக்கிழமை பக்தி கொண்டாட்டம். மாலை ஜெபம் , பாட்டுத்  திருப்பலி , ஜெபமாலை , சிலுவைப்பாதை  அருள் கொண்டாட்டங்கள் அன்னையின் அருளை அள்ளித்தரும்  ஓர் வரப்பிரசாதமாக அமைகிறது .  அதன்பின்  மக்கள் ஒன்றாக அமர்ந்து அன்னையின் பாதத்தில் சமபந்தி போசனம் செய்கிறார்கள். மிகவும் ரம்மியமான நிகழ்வு , என்  மனதில்  நின்ற  ஓர் அருளின்  நேரம்.  இந்த  அரிய நிகழ்ச்சி அங்கே ஒவ்வொரு  முதல் சனிக்கிழமைகளில் நடக்கின்றது. 

முதல் சனிக்கிழமை பக்தி முயற்சிகள் நம் பாரம்பரியம் ஆகும் . முதல் சனிக்கிழமை பக்தி பலவகையான  ஆன்ம காரியங்களையும்  பலன்களையும் அள்ளித்தரும்  ஓர்  வழிபாடு ஆகும். திருப்பலி  காண்பது,  ஜெபமாலை  ஜெபிப்பது, மற்றும்  பாவசங்கீர்த்தனம்  செய்வது  முதல் சனிக்கிழமை பக்தி  முயற்சிகளாக  புனிதர்களும் நம் முன்னோர்களும்  கடைப்பிடித்தார்கள். நாமும்  முதல் சனிக்கிழமை பக்தி கொண்டாட்டங்களில் கலந்து பயன் பெறுவோம்.

இந்த மாதம் முதல் சனிக்கிழமை இங்கு அமெரிக்க  நகரம் மெம்பிஸில் நாங்கள் மக்நிபிகாட் நாள் கொண்டாடினோம்.  


No comments:

Post a Comment