11/16/14

காத்திருப்பு ஜெபம் விடுதலையளிக்கும் விசுவாச தியானம் ஆகும்

காத்திருப்பு  ஜெபம்  விடுதலையளிக்கும்  விசுவாச தியானம் ஆகும்


மாணவர்கள்  பரிட்சைக்குப்பின்  தேர்வின்  விடைக்காக  காத்திருக்கிறார்கள்.
பட்டம்  பெற்றவர்  நல்ல  ஓர்  வேலைக்காக  காத்திருக்கிறார்கள். மணமகனும்  மணமகளும் திருமண நாளுக்காக காத்திருக்கிறார்கள். திருமணமானவர்கள்  தங்கள் குழந்தைளுக்காகவும் அவர்களின் வாழ்வின் வளர்ச்சிகளுக்காகவும் வால் நாளெல்லாம்  வழ்ந்திருக்கிறார்கள். இப்படியாக மானிட வாழ்வு ஒரு காத்திருப்பு வாழ்வாகும் .

காத்திருப்பில் நம்பிக்கையுண்டு, காத்திருப்பில்  பலனுண்டு, காத்திருப்பில் சாதனையுண்டு , காத்திருப்பில் சோதனையுண்டு , காத்திருப்பில்  சஞ்சலம் உண்டு , ஆனால் காத்திருப்பில் இறைவன் துணையுண்டு .
காத்திருப்பில் இலக்கு உண்டு, காத்திருப்பில் இனிமையுண்டு , காத்திருப்பில் எதிர்பார்ப்பு  உண்டு , காத்திருப்பில் திடன்  உண்டு , காத்திருப்பில் திருப்தியுண்டு , காத்திருப்பில் உழைப்பு  உண்டு , காத்திருப்பில் அனுசரணையுண்டு, காத்திருப்பில் பொறுமையுண்டு , காத்திருப்பில் அன்பு  உண்டு , மேலும்  காத்திருப்பில்  ஆழமான  விசுவாசமுண்டு.

காத்திருப்பில்  ஆழமான  விசுவாசம்  நிறைந்த  ஜெபம் உண்டானால்  அஃது  ஓர் பலமான  அருள்வரம் ஆகும் . காத்திருப்பு  ஜெபம்  விடுதலையளிக்கும்  விசுவாச தியானம் ஆகும். காத்திருப்பு  ஜெபம் இறைவனின்  சித்தத்தில்  தனி மனித  ஆன்மாவை  வழி  நடத்தும்  வல்லமையான  ஜெபம்  ஆகும் . காத்திருப்பு  ஜெபம் ஓர் தொடர்  ஜெபமாக  அமையும்போது  அஃது  ஒருவரின்  வாழ்வை  ஓர் ஜெப  வாழ்வாக  மாற்றும் அற்புத ஜெபம்  ஆகும் .

காத்திருப்பு  ஜெபம் நம்  பாரம்பரியம்  ஆகும் . தானியேலின்  காத்திருப்பு  ஜெபம் சிங்கத்தின்  வாயினின்று விடுதலையளித்தது . தானியெலின்   நண்பரின் காத்திருப்பு  ஜெபம், எரி  நெருப்பு  சூளையிலிருந்து  காத்தது. ஆபிரகாமின்  காத்திருப்பு  ஜெபம்  அவரின்  சந்ததி  தந்தது  மேலும்  காத்தது. யாக் கோபின் காத்திருப்பு  ஜெபம் உரிமையையும்  விடுதலையும்  தந்தது. தாவீதின்  காத்திருப்பு  ஜெபம்  விசுவாச  வெற்றியை  ஈந்தது , கோலியா த்திடமிருந்தும்  காத்து, கோலியாத்தை வீ ழ்த்தியது. இப்படியாக அநேக  உதா ரணங்கள் விவிலியத்தில்  நாம்  காணலாம் . எல்லா  உதாரண  ஜெபங்களிலும் இறைவனின்  அன்பும் , நம்பிக்கையும் , சமாதானமும், அரவணைப்பையும் , உதவியையும்  நாம்  காணலாம். எல்லா  ஜெபங்களிலும்  இறை  பிரசன்ன வழி  நடத்துதலையும், பராமரிப்பையும்  நாம்  காணலாம் . எல்லா  ஜெபங்களிலும்  இறைவனின்  சித்தமான  விடுதலை  அருள் பலானாக நாம்  காண்கின்றோம் .இதனால் காத்திருப்பு  ஜெபம்  விடுதலையளிக்கும்  விசுவாச தியானம் ஆகும்.

காத்திருப்பு  ஜெபம்  நம்  பாரம்பரியம்  ஆகும் . நவநாள்  ஜெபங்கள் காத்திருப்பு  ஜெபத்திற்கு  ஓர்  எடுத்துக்காட்டாகும்.


        

No comments:

Post a Comment