திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்:
எளியவர் ஏற்றம் பெற/ தன்னை ஏணியாக்கியவர்/, ஆணிகளால் அறைபட்டு நிற்கிறார்/. வன்முறையே கூடாது என்றவரை//, வன்முறை வளைத்துக்கொண்டது/. அமைதி புறாக்களை/ உலகம் சிதைத்து/, வதைத்து/ சித்திரவதை செய்து/ கொண்றுவிடுகிறது/. வாழ்நாளில் வாழெடுக்காத இந்த முள்முடி மன்னர்/ காயப்பட்டதால் வரலாறே காயப்பட்டது/. கண்ணுக்குப் புலப்படாத ஊர்ந்து போகிற எறும்புக்குக்கூட/ வாழ்கிற உரிமை உண்டு/. கருத்துக்களுக்கும் மறுத்துரைக்க இயலாதவர்கள்/ எப்போதும் நாடுவது வன்முறை/. பூமியின் அழுக்கை சலவை செய்ய வந்த சமூகவாதிகளை/ உலகத்திலே வைக்கக் கூடாது என்கிற வன்முறை வாய்ப்பாட்டுக்கு/ இனி முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?/ ஆயுதம்/ தமிழ் எழுத்தில் மட்டும் போதும்/. வாழ்வில் வேண்டாம்/. வாழ்விக்கும் வான்மழை போதும்/, வாழ்வை குழைக்கும் குண்டு மழை வேண்டாம்/. வறியோரை வலியோர் வதைக்கலாம் என்கிற/ வக்கிர சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்/. இந்த செம்மறியின் ரத்தத்தில்/ பூமி/ தம்மை சுத்தம் செய்து கொள்ளட்டும்.
. -ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்.
நண்பருக்காய் உயிர் தருதல், உலகினிலே உயர்ந்ததென்றார்
உலகம் பிடித்திட, இயேசு உயிர்கொடுத்தாரே
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
No comments:
Post a Comment