திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவின் உடல் கல்லறையில்:
கல்லறை/, இது/ காலம் வழங்குகிற கல்வி அறை/. ஆறடி நிலப்பரப்பில்/ அமைந்துவிடுகிற சமத்துவக்கூடம்/. உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கியவர்களும்/ இங்கேதான் அடங்கிபோகிறார்கள்/. உள்ளங்கை அளவிற்குகூட உட்கார இடம் இல்லாமல்/, தெருகோடியில் நின்றவர்களும்/ இங்கேதான் இடம்பிடித்தார்கள்/. இந்த உலகம்/ வந்துபோகிறவர்களின் யாத்திரைத்தளம்/. நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு/ செல்வம் சேர்ப்பதையே வாழ்வென்று எண்ணியவர்கள்/ கல்லறைகளில் அடங்கிபோனார்கள்/. நகைகளை இரவல் வாங்குகிற உலகில்/, கல்லறையை இரவல் வாங்கியவர் இயேசு/. தடாகத்தாமரை இலையில்/, ஒட்டாமல் ஓடுகிற தண்ணீர் துளிகளைப்போல/ வாழ்பவர்களின் கல்லறைகளுக்குக்கூட இதயத்துடிப்பிருக்கும்/. மனித நாடகத்தில்/ கல்லறை கடைசிக்காட்சி/. நாடகத்தை முடித்துக்கொண்டு/ யதார்த்த வாழ்விற்கு திரும்புகிறவர்களை/, இந்த கடைசிகாட்சிக் கட்டிப்போடமுடியாது/. முட்டை ஓட்டை எட்டி உதைத்துக்கொண்டு/ வெளியே எட்டிப்பார்க்கிற கோழிகுஞ்சிக்கு/ ஓடு தேவையில்லையே!
கரன்சி நோட்டை எண்ணிப்பார்க்கிற சில மனிதர்களுக்கு/, தங்கள் வாழ்க்கையை/ ஒருமுறையேனும் எண்ணிப்பார்க்கிற நினைப்பே வருவதில்லை/. விரல்களை விற்று மோதிரம் வாங்கி/ பழகிவிட்ட இவர்கள்/, வீணைகளை கூட விரகாக்கிவிடுகிரார்கள்/. மனிதர்களே/ உங்கள் கல்லறைகளுக்குக்கூட/ உயிர் துடிப்பிருக்கவேண்டும்.
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
No comments:
Post a Comment