திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு தன் அன்னையை சந்தித்தல்:
வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுகிற அகராதி/ "அம்மா"/. அம்மாவின் ஆசி மட்டும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால்/, உலக உருண்டையே அவர் உள்ளங்கைகளில்/ உருளுகிற/ கோளிகுண்டுதான்/. அன்னை/ மாற்று குறையாத தங்கம்/. அவளுக்கு மாற்றாக/ உலகில் ஏதும் இல்லை/, அவள் ஊட்டுகின்ற பாலில்/ வீரம் கரைந்து இருக்கும்/. தியாகம் நிறைந்து இருக்கும்/. பாசம் உறைந்து இருக்கும்/. அன்னை மரியாள்/ இயேசுவிற்குக் கிடைத்த/ அற்புத புதையல்/. தம் திட்டத்தை செயல்படுத்த/ இறைவனே தேடி எடுத்த/ மாணிக்கப் பெட்டகம் அல்லவா?/ தன் உள்ளத்தை வாள் ஊடுருவினாலும்/, உலகத்தை விடுதலை ஊடுருவ வேண்டும் என்ற கனவு வரிகளை/ விழிகளில் எழுதி/ கல்வாரிக்கு/ மகனை அனுப்பி வைக்கிறாள்/. இனி/ எல்லாத் தலைமுறையும்/ இவளை பேருடையாள்/ என்றுதானேப் போற்றும்
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
தோழமைதான் வாழ்கையே, தோள்க் கொடுத்தால் பிறக்கும் வழி
சீமோன் வடிவிலே, உதவி உதயமானதே
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
No comments:
Post a Comment