சிலுவைப்பாதை 3ம் ஸ்தலம்
திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்:
வாழ்க்கை என்பது/ ஒரு தடகள ஓட்டம்/. இந்த ஓட்டத்தில் வென்றிட/, விழுவதுகூட/ வெற்றி முயற்சிதான்/. விழுவதால்தான் வீரனுக்கே விலாசம் கிடைக்கிறது. தாயகம் காக்கக்/ காயபடுவதும் வீரம்தான்/. இலட்சிய வீரன் இடறி விழுகிறபோது/, இலட்சியம் எழுந்து நிற்கிறது/. இலட்சியம் விழுந்து விட்டால்/, வரலாறே வடுபட்டுவிடும்/. இயேசு விழுந்தாலும்/, இயேசுவின் இலடச்சியங்களுக்கு/ எந்த சேதாரமும் இல்லை/. அழகையின் ஆசை வார்த்தைகள்/, அப்பம் உண்டவர்களின்/ அலங்காரக் கோரிக்கைகள்/, சீடர்களின் சிங்கார கனவுகள்/. இவைகளால்/ இயேசு தடுமாறியதே இல்லை/. சலனங்களை சமாளித்துவிட்டால்/, வானமே வசப்படும்/. வேங்கையோடு மோத வேண்டிய நீ/, ஆந்தையின் அலறலைக் கண்டு/ அரண்டுவிடலாமா?
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
அன்னைமரி விடை கொடுக்க, கண்ணீர் துளி இடைமறிக்க
உறவு தடுத்தது, அங்கே கடமை ஜெயித்தது.
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
No comments:
Post a Comment