ஏளனம், ஏகாந்தம் , புறக்கணிப்பு , ஒருபுறம் . தனிமை , தவிப்பு , தள்ளாட்டம் , துயரம் , துன்பம் மறுபுறம் . சிப்பாய்களின் சலசலப்பு , பரிசேயர் , சதுசேயர் மற்றும் பொய் சான்று கூறியோரின் வஞ்சகம் ஒருபுறம் . துயருற்று யேசுவுக்காக அழுவோரின் அங்கலாய்ப்பு மறுபுறம் . எங்கும் குளப்பம், எங்கும் பீதி நிறைந்திருக்க, சிப்பாய்கள் இயேசுவை தரதரவென இழுத்து , அவரது ஆடைகளை பிடுங்கி எறிந்தனர் , நிர்வாண கோலம் கொண்ட யேசுவுக்கு உடல் வாதையுடன் தாங்கவொண்ணா அவமானம் சூழ்ந்து கொண்டது . கடிய மனதுடன் கொடிய சேவகர்கள் கடமை செய்ய , இயேசுவை கல்தூணில் கட்டி அடிக்கலானர். சாட்டை அடிகள் பட்டுத் வலியால் துடித்தார் இயேசு . சாட்டையின் ஒவ்வொரு அடியிலும் உடலின் சதைகள் கிளிந்தன , இரத்தம் பீறிட்டு தெறித்தது, இயேசு மனித சுபாவ வலிகளுக்கு தன்னை முழுமையாய் கையளித்தார்.
இந்த தேவரகசியத்தை தியானிக்கும் போது , மனித துன்பங்கள் , துயரங்கள், வேதனைகள் , வலிகள், உதவியற்ற நிலைமைகள் , சூழ்நிலைகள் , கைவிடப்பட்ட தருணங்கள் மற்றும் மானிட உடல், உள்ள , ஆன்ம வாதைகளை இயேசு தன்மீது ஏற்றுக்கொண்டார் . சாட்டையடிகளின் வேதனைகளை அன்பின் பரிசாக மாற்றிக்கொண்டார் , இதனால் அன்பினால் விளையும் வேதனைகளை ஏற்றுக்கொள்ள நமக்கு முன்மாதிரிகையனார். நாம் அன்பு செய்யும் நம் குடும்பத்தில் சகிப்பு , மன்னிப்பு , தியாகம் , இதனால் விளையும் வேதைகளை எசுவுக்காக ஏற்றுக்கொள்ள இறைமகன் தன்னை கசையடிகளுக்கு கையளித்தார்.
No comments:
Post a Comment