3/4/15

சிலுவைப்பாதை 5ம் ஸ்தலம்: இயேசுவிற்கு சீமோன் தோள் கொடுத்தல்:

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவிற்கு சீமோன் தோள் கொடுத்தல்:

way of the cross - station 5 - United Tamil Catholics


பாரமுள்ள சிலுவைகள் நடுவிலும்/,நெஞ்சில் ஈரமுள்ள மனிதர்கள் உணடு என்பதும் உயர்ந்த உதாரணம்/ சீமோன்/. தோழமை/ தோள் கொடுப்பதிலே தொடங்க வேண்டும்/. வாய்மொழியோடு நின்றுவிட்டால்/, வகையற்று போய்விடும்/. பளபளக்கிற பாதரசச் சொற்கள்/ சராசரிகளுக்கு உண்ணுகிற/ பருக்கைகள் ஆவதில்லை/. ஊருக்கெல்லாம் அறிவித்துவிட்டு செய்கிற விளம்பர உதவிகளைவிட/, ஆபத்தில் உதவுவது/ சிறப்பானது/. தாய்ப்பாலே விளையாகிப்போன உலகில்/, வசதி இருக்கிறபோது மொய்ப்பதும்/, வறுமையாகிரபோது ஓடுவதும்/ உறவின் இலக்கணம் என்றாகிவிட்டது/. காசு வாங்காமலே வீசுகிற காற்றைப்போல/, பலனைப் பாராமல் பணியை செய்தால்/, சீமோனைப் போல/ சிறக்கலாமே. .

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

சோகம் வந்து துள்ளி எழ, குருதி வெள்ளம் கோலமிட
துடைத்தார் ரொனிக்கம் அவர் மனித மாணிக்கம்.

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

No comments:

Post a Comment