சிலுவைப்பாதை முதலாம் ஸ்தலம்
https://www.youtube.com/watch?v=kgHv_W2DLrI
கல்வாரிக் குன்றில் காணிக்கையானவா
சிலுவை மரத்தில் வாழ்வு சொன்னவா
என் இதய அதிர்வுகள்
அது உனது பாதப் பதிவுகள்
உனது பாதப் பதிவுகள்
கழுமரம் எங்காவது பூப்பூக்குமா?/ பூத்தது/, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்/ கல்வாரிக் குன்றிலே/ கழுமரத்திலே/ வானகதிற்கும் வையகத்திற்கும் நடுவே/ ஒரு மனிதப் பூ/ மலர்ந்தது/. குருதியில் குளித்த அந்த பூதான்/ இயேசு பெருமான்/. அக்கிரமக்காரர்களின்/ அநியாயக்காரர்களின்/ கதைகளை முடிப்பதற்காக/ நிமிர்ந்த சிலுவை/ அன்று ஒரு அவமானச் சின்னம்/ இயேசு பெருமான் அந்த சிலுவையை சுமந்ததால்/ அதில் மரணத்தைத் தழுவியதால்/ ஒரு அவமானச் சின்னம்/ ஆராதனைக்குறியச் சின்னமாக ஆனது/. சண்டாளர்களும் பழித்த/ ஒரு சிலுவையின் முன்னால்/ சக்கரவர்த்திகளும் மண்டியிட்டார்கள்/. உழுத நிலம் போல/ அந்த சிலுவையில் கிடந்த உடல்/ அதை நினைக்கிறவர்களின் உள்ளங்களை எல்லாம்/ இன்றைக்கும் உழுதுகொண்டே இருக்கிறது/. நாடு கடந்து வந்த நதியான/ இயேசு பெருமானின் பாடுகளை/ குறிப்பாக அவர் சிந்திய இரத்தத்தை/ நெஞ்சிலே வைத்து/ நினைவிலே போற்றுகிற பெருமக்கள்/ பேறுபெற்றவர்கள்/. இந்த சிலுவை பாதையில்/ கலந்துகொண்டும்/, கலந்து கொள்ள முடியாமல் போன/, இயேசுவின் பாடுகளை தியானிக்கின்ற ஒவ்வொருவரின் உடலிலும்/, உள்ளத்திலும்/ இயேசுவின் ரத்தம் கலந்து பாய்ந்து/ அனைவரது வாழ்க்கையையும்/ வரலாறு ஆக்கட்டும். இப்போது கண்முன்னே விரிகிறது கல்வாரி.
இறைவன்/ தனது இருக்கையிலிருந்து கற்பிக்கிற வேதம்/ மனிதனின் இதயத்தில் நுழைய மறுத்தபோது/ இறைவனே இறங்கி வந்து வேதமானார்/ சிலுவை மரத்தில்/ பாடமானார்/. வருடம் தோறும் வந்து போகிற தவக்காலம்/ இயேசுவிற்காக கண்ணீர் வடிக்கின்ற/ அழுகை காலமல்ல/ வறியோரின் கண்ணீர் துடைக்கின்ற கருணை காலம்/ இது வருத்தம் கொள்கின்ற நாட்கள் அல்ல/ வாழ்வில்/ திருத்தம் எற்படுத்திகொள்கிற நாட்கள்/ சிலுவை பாடுகளை சிந்திக்கின்றபோது/ கல்வாரிக்குன்றில் காயப்பட்ட இயேசுவோடு/ கைக்கோர்த்துகொண்டு நடக்கிறதுபோல் இருக்கிறது/. வாருங்கள் சேர்ந்து நடப்போம்.
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய் |
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ? | - 2
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
வறியவரின் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளில்
நீதி இல்லையே, வறியோர் ஜெயிப்பதில்லையே!
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
நீதி மன்ற தீர்ப்பு/. இது/ வளியோருக்கு வசதியாக வளைகிற தென்னங்கீற்று/. சிபாரிசுக்கு ஆளில்லாததால்/ இயேசுவிற்கு இந்த சிலுவை தீர்ப்பு/. மேல் முறையீட்டு கதவுகளே அமைக்கப்படாத கறுப்புத் தீர்ப்பு/. நடைமுறையில்/ வறியவரின் வழக்கென்றால்/ நீதிமன்ற வாதத்திர்க்குகூட/ முடக்கு வாதம் வந்து விடுகிறது/. பொய் சாட்சி சொல்ல/ வாடகை மனிதர்கள்/ வரிசையில் நிற்கிறார்கள்/. நீதியின் கண்களை கட்டிக்கொண்டு/ விறகில் வெண்ணை தேடுகிற/ கண்துடைப்பு விசாரணைகள்/. விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பு எழுதுவது/, உலகில் வழக்கு/. ஆனால்/, இயேசுவின் வழக்கில் மட்டுமே/ தீர்ப்பு எழுதபட்டபிறகே/, விசாரணைகள் கண் விழிக்கின்றன/. அரசியல்வாதியின் தீர்ப்பு/, இலட்சியவாதியின் முன்/ முனை முறிந்து போகும்.
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்.
செம்மறிபோல் பழி சுமந்து சிலுவைமரம் தோளில் ஏற்றி
நடந்து போகிறார், உலகை நடத்த போகிறார்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
No comments:
Post a Comment