3/2/15

சிலுவைப்பாதை 2ம் ஸ்தலம்: இயேசுவின் தோளில் சிலுவை

சிலுவைப்பாதை 2ம்  ஸ்தலம்

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவின் தோளில் சிலுவை:

way of the cross - station 2 - United Tamil Catholics


குற்றவாளி சிலுவை சுமப்பதுண்டு/. சிலுவையை சுமப்பதினால்/ ஒருவர் குற்றவாளி ஆகிவிடமுடியாது/. இலட்சிய போராளிகளுக்கு/ சிறைக்கூடம் கூட/ பள்ளிகூடம்தான்/. தியாகிகளை அடைக்காத்ததால்தான்/, சிறைச்சாலைகளுக்கேச் சிறப்பு கிடைத்தது/. இயேசு சுமந்ததால்தான்/, சிலுவைக்கே சிறப்பு வந்தது/. சிலுவை/, இது இரண்டு மரத்துண்டுகளின் இணைப்பு அல்ல/. விண்ணையும், மண்ணையும்/ இணைக்க வந்த உறவுக்கோடு/. இயேசுவின் சிலுவை/ உலகிற்கு மீட்பானது/. இன்றைக்கு எத்தனை எத்தனை சிலுவைகள்/, அடக்குமுறைகள்/, அடிமைத்தனங்கள்/, சுரண்டல்கள்/, சாதி மத மோதல்கள்/, வறுமை/, பட்டினிகள்/. உலகில் தோளில் உட்கார்ந்திருக்கிற இந்த சிலுவைகளை இறக்கி வைத்திட/, மனிதர்களே எழுந்து வாருங்கள்.

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

மரச்சிலுவை உடலழுத்த, மனச்சிலுவை நெஞ்சழுத்த
தரையில் விழுகிறார், தனியே தனக்குள் அழுகிறார்.

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

No comments:

Post a Comment