திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு உயிர் நீத்தல்:
மரணம்/, மனித வாழ்வில்/ அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றது/. உடலில் பழுதான உறுப்புகளை மாற்றுகிற அளவிற்கு/ அறிவியல் வளர்ந்திருக்கிறது/. பிரிந்து போன உயிருக்கு பதிலாய்/ மாற்று உயிர் பொருத்துகிற வித்தையை/ மனிதன் இன்னமும்/ கண்டிடவில்லை/. உயிருக்கு மாற்று இல்லைதான்/, ஆனால் லட்சிய வீரர்/ உயிருக்கு மாற்றாய்/, கொள்கையை நேசிக்கிறார்/. உயிரை விற்று/ கொள்கையை வாங்குகிறார்/. சிலருக்கு சாவில் தள்ளுபடி வாழ்வாகவும்/, வாழ்வோ மலிவு விலை சாவாகவும் ஆகிவிட்டது/. ஏசுவுக்கு உயிரை விட/, லட்சியம் பெரிதாக தெரிந்தது/. போராளியின் மரணத்தில்/ போராட்டம் வெற்றி பெரும் என்பது/ வரலாறு சொல்லுகிற பாடம்/. உடலை கொள்ளுகிரவர்களால்/ ஆன்மாவை அசைக்கக்கூட முடியாது/. கொள்கை உடையவர்/ கொஞ்சகாலம்தான் உயிர் வாழ்வர்/. கோழைக்கு மரணம்/ தவணை முறையில் வருகிறது/. வாழ்ந்த நாட்கள் அல்ல வரலாறு/, வாழ்ந்த முறையே வரலாறு/. முப்பத்து மூன்று ஆண்டில்/ தன் மூச்சை முடித்துக்கொண்ட இயேசு/ இரண்டாயிரம் ஆண்டுகளாய்/ இன்னமும் உயிர் வாழ்வது/ மரணம் அவரை வெற்றி கொள்ளவில்லை/ என்பதன் அர்த்தம்தானே?
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
அன்னைமடித்தொட்டில் கட்ட கண்ணீர் துளி மெட்டுகட்ட
இறுதி தாலாட்டு இது மீட்பின் தாலாட்டு
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
No comments:
Post a Comment