3/20/15

கர்த்தர் முள்முடி சூட்டபட்டதை தியாப்னிபோமாக!

கர்த்தர்  முள்முடி சூட்டபட்டதை  தியாப்னிபோமாக!

முள்முடி கொண்ட சிரசு , தாளா வலியுடை வாதை
உள்ளம் கொள்ளும் அன்பு வல்லான் இறை அன்பு
பழிக்கும் நண்பர் பராமுகமுடை சுற்றம்
கொந்தளிக்கும் வஞ்சக பொய் சூழ்ச்சியுடை  தலைவர்கள்   விதைத்தார்  வஞ்சகம்
கல்நெஞ்சுடை  சேவகர்  கையில்
பொல்லா அவமானம் வாதை யுற்றார் இயேசு
யேசுவே  என்மேல்  இரக்கமாயிரும்

கடவுள் சிரசு முள்ளால் சொல்லால்
கயவன்  எனக்காய் குனிந்ததோ?
கனிந்த  முகம்  புண்ணானதே
கடும் பாவி  எனக்காய் 
கருணை பார்வை குருதி நிறைந்ததே
கண்மூடி தனமான  என் அகங்கார  போக்கால்
யேசுவே  என்மேல்  இரக்கமாயிரும் 

என்  தலைக்கனம்  போக்க
தலை  தாழ்ந்தார்  யேசு
என்  எண்ணம்  மனம் சுமை  நீக்க
தலை முள்முடி  தரித்தார்  யேசு
வணங்கா  அகம் என் பாவம் போக்க
வானவர்  வணங்கும் சுதன்
வணங்கி சேவகர்  கை முள்முடி ஏற்றார்
யேசுவே  என்மேல்  இரக்கமாயிரும்!

மனதால்  வஞ்சக  பாவம்  பரிவாரம்
வன்மை  சூழ்ச்சி  நிறை  தன்மையுடை
மானிட  மன  பாவங்கள்  போக்க
பரிகார பரிசுத்த  செம்மறி
பரிகாசம்  ஏற்றார்  மன வேதனை  தரித்தார்
யேசுவே  என்மேல்  இரக்கமாயிரும்!

வணங்கிய  தலையில் பிணங்கிய முள்முடி
வீங்கிய  முகம் விம்மிய  ரத்தம்
சூட்டெரிக்கும்  சூரியன்  வெம்மையிலும்
தாளா து  சுட்டதே  கைவிட்டு
காட்டிகொடுத்த  மானிட  மடமை
கொடுமை கயவர்கள்  கையில்  கைவிடப்பட்ட  தனிமை
தடியடி  வதைதரும்  வேதனையிலும்
கொடியதாய்  வலித்ததே அவமானம்
முள்ளின்  கூரிய  வலியிலும்
மேலாக  வலித்தே ஏளன நயவஞ்சக  சூழ்ச்சிகள்
சுற்றம் உற்றார்  மாற்றார் ஏளன பேச்சுக்கள்
யேசுவே  என்மேல்  இரக்கமாயிரும்!



No comments:

Post a Comment