3/13/15

பதின்மூன்றாம் தலம்: இயேசுவின் உடல் மரியன்னையின் மடியில்

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவின் உடல் மரியன்னையின் மடியில்:

way of the cross - station 13 - United Tamil Catholics


அம்மாவுக்கும், பிள்ளைக்கும்/ அப்படி ஒரு உறவு/. பூமி புரிந்துகொள்ள முடியாத உறவு/. தொப்புள் கொடியில் தொடங்கிய பந்தம்/ முடிவே இல்லாமல் தொடர்கிறது/. இந்த உறவிற்கு மட்டும் தான்/ முற்றுபுள்ளி இருப்பதில்லை/. மரித்த நிலையிலும்/ இயேசுவை மடியில் கிடத்துவது/ அன்னை மரியாளுக்கு ஆனந்தமாய் இருந்தது/. உயிரை காத்திட/ கொள்கைகளை விட்டுகொடுக்கும்/ கோழை மகனை/ இவர் பெறவில்லையே!/ வானத்து மடியில் கிடக்கும் நிலவைப்போல/ இயேசு மரியாளின் மடியில் தலைசாய்த்திருக்கிறார்/. அம்மாவின் மடிக்கு ஈடாக/ உலகில் எந்த இடமும் இல்லை/. அவள் பாடுகிற தாலாட்டுக்கு இணையான பாட்டை/ யாரும் இசைத்திட இயலாது/. குழந்தை வயிற்றில் இருக்கும்போதும்/, உலகில் நடமாடுகிறபோதும்/ ஒன்றாகவே நினைத்து/ தன் நெஞ்சிலே சுமக்கிற பெருமாட்டி/. அம்மாவை/ பிள்ளைகள் மறந்துபோவார்கள்/, ஆனால்/ அம்மாவுக்கோ தூக்கத்திலும் கூட/ பிள்ளைகளின் நினைவே/ விழிவாசல் ஓரம் விழித்திருக்கிறது/. அவள் ரத்தத்தை பாலக பருகிய குழந்தைகள்/, வயோதிக காலத்தில் அவளை ஒதுக்கிவிடுகிரார்கள்/. மனைவி கணவனை விவகாரத்து செய்துவிடலாம்/. ஆனால்/ தாய் ஒருபோதும் தன் பிள்ளையை/ உதறிவிடுவதில்லை/. அம்மா/, அவள் இரக்கத்தின் கவிதை. 

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய் |
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ? | - 2
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய் 


http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

No comments:

Post a Comment