3/7/15

கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக !

கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை  தியானிப்போமாக !

ஏகாந்தம் , தனிமை , ஏக்கம் , தாகம் , பயம் , படபடப்பு , என  எண்ணற்ற  மன  தா க் கங்களுக்கு  தள்ளப்பட்டார்  இயேசு . மனித உருவில் இறைமகன் இயேசு  மானிட  மன  சுமைகளை  சுமந்து  நின்றார். காட்டிக் கொடுக்கும் நண்பன் , கைவிட்டு  ஓடிப்போகும்   நண்பர்கள் , நடப்பதை  அறியாது  தனிமையில்  விட்டுவிட்டு  அயர்ந்து  தூங்கும்  சீடர்கள். இவர்கள்  மத்தியில்,  நடக்கவிருக்கும்  சிலுவைப்  பாடுகள்  நினைவுகள்  சித்திரவதை செய்ய, இறைமகன் , மனிதனாகவும் , இறைவனாகவும்  வேதனைகளை  சந்தித்தார். முழுமையான  மனிதனாய்    மனம் , உள்ளம் , உடல் , ஆன்மாவில்  வேதனை  கொண்டு  ஆறுதலற்ற  நிலைமைக்கு  தள்ளப்பட்டார்  இறைமகன் . மனிதனின் வேதனைகளை  முழுமையாய்  சந்தித்து , தன்  இறைத்தன்மையை  முழுமனதுடன்  தியாகம்  செய்து , வேதனைகளில்  இறைவனைத்  தேட  சித்தமானார்  இறைமகன் .

தனிமையின்  கோர தாண்டவத்தில்  இறைதுணையை  நாடினார் . தனியாக  ஜெபித்தார் . இறைவனை  மானிட  நிலையில்  வேண்டினார் . பலனாக  ஜெபத்தின்போது  எல்லா  மானிடருக்கும்  தரப்படும்  இறை  துணையைப்  பெற்றார் . துணிந்து  எழுந்து  சிலுவைப்  பாடுகளுக்கு  தன்னை  அர்பணித்தார்  இறைமகன் .

இந்த துக்க  தேவரகசியம்  ஓர்  விடுதலைப்  பயணமாகும் . இந்த  முதல்  துக்க தேவரகசியமான , கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை  தியானிக்கும்  போது , இதனை  உணர்ந்து  ஜெபிக்கும்  போது , இறைமகனின்  தியாகம் , இறை  சித்தத்தை  ஏற்று , ஓர் மனிதனாக  இறைவனுக்கு  தன்னை  கீழ்ப்படித்திய  விந்தையான  பரம  அன்பு  நமக்கு  ஓர் எடுத்துகாட்டாக  அமைகின்றது . இதனால்  நம்  மனதில்  இருக்கும்  ஆணவம்  அகன்று  தாழ்ச்சி  என்ற  புண்ணியம்  தோன்ற  வழி  பிறக்கும் . இறைமகனே  அன்பிற்காக  தனை  தாழ்த்தும்  போது , நாம்  எம்மார்த்திரம். நம்  வாழ்வில்   நாம்  நேசிப்பவர்கள், நமை  நேசிக்காதவர்கள், இவர்களை  மன்னித்து    தொடர்ந்து  இறைவனுக்காக  அன்பு  செய்ய  இறைமகனின்  வழி நடந்து  ஜெபித்து  வாழ  துணிவு  பிறக்கும்.

மற்றும்  தொடர்ந்து  இந்த முதல் தேவ  இரகசியத்தை  தியானிக்கும்  போது , கெத்சமனி  தோட்டம்  நம்  நினைவில்  சஞ்சரிக்கின்றது. இஃது  நம்மை, முதல்  ஆதம் , ஏவாள்  வாழ்ந்த சிங்கார  வனத்தை  நினைவு படுத்துகின்றது. ஆதம்  ஏவாளின்   சிங்காரத்  தோட்டத்தில் , கீழ்ப்படியாமையால்  செய்த, முதல் பாவமான  ஜென்மப்   பாவம் போக்கவந்த  செம்மரி, இப்போது   கெத்சமணியில்   ரத்த வியர்வை வியர்க்கலானர். சிங்காரமாக  வாழப்  படைக்கப்  பட்ட  மனிதன்  சிங்காரத்  தோட்டத்தை  பாவத்தால்  துறந்தான். அந்தப்  பாவத்திற்குப்  பரிகாரமாக  இறைமகன் கேத்சமனியில்  துயரப்படலானார் . சிங்கார  வனத்தில்  மானிட  கீழ்படியாமை பாவமானது ,, கேத்சமினியில்  இறைமகனின்  கீழ்படிதலால்,  மனிதன்  மீட்பின்  அன்பு  தியாகமானது . மீட்பின்  விடுதலை  பயணம்  தொடங்கப் பட்டது.

மேலும் , இந்த  தேவரகசியத்தை  தியானிக்கும்  போது , நம்  கவனம்  இயேசுவின்  ஜெபத்தையும் , அவரின்  துக்கத்தையும்  நமக்கு  தெளிவு  செய்கின்றது . இஃது மனிதரான  நமக்கு, முன்மாதிரிகையாக  அமைகின்றது . துன்ப வேளையில்  இயேசு  ஜெபித்தார் , இறைசித்ததிற்காக  மன்றாடினார். இதுபோன்று , நாமும்  நம்  சூழ்நிலைகளில் இறைவனை  நோக்கி  ஜெபிக்கவும் , இறைசிதத்தை  வேண்டி  ஜெபிக்கவும் , நமை  தாழ்த்தி  பிறரை  அன்பு  செய்து  வாழவும்  நமக்கு  ஓர்  எடுத்துகாட்டாக  அமைகின்றது.

மேலும்  தொடர்ந்து  தியானிக்கும்  போது நம்  கவனம்  இயேசு  சீடர்களை  தமக்காக  விழித்திருந்து  ஜெபிக்கச்  சொன்ன  நிகழ்வு  நமக்கு  புலப்படுகின்ற்றது. இறைமகன்  தன்  நண்பர்களை  தம்முடன்  விழித்திருந்து  ஜெபிக்க   அழைத்தார் . இந்த நிகழ்வு , நமக்காக  மற்றவர்கள்  ஜெபிப்பது  எவ் வ ளளுவு    அவசியம்  என்பதை  வெளிப் படுத்துகிறது. மன்றாட்டுச்  ஜெபத்தின்  அவசியத்தை , ஒருவர்  மற்றவருக்காக  ஜெபிக்கும்  பிரத் தனையின்  அவசியத்தை  இறைவன்  நமக்கு  உணர்த்துவது  வெளிப் படுகின்றது.

 கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை  தியானிப்போமாக ! கீழ்ப்படிதல் , தாழ்ச்சி , இறைசித்தம்  அறிதல் , தனிமனித  ஜெபம் , மற்றும்  குடும்ப ஜெபம் , பிறர்  நமை  தாங்கி  ஜெபிக்கும்  மன்றாட்டு  ஜெபம் , இறைதுணையின்  வல்லமை  இவற்றை  நாம்  ஆழமாக  தியனிப்போமாக!

jesus in the garden of gethsemane photo: Jesus praying in Gethsemane untitledJesusprayingtotheFatherintheGarden.jpg


No comments:

Post a Comment