கிறிஸ்துமஸ் பாடல்கள்
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
12/23/15
11/19/15
ஆண்டவரே, உமது ராஜ்யம் வருவதாக! உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக ! ஆமென்!
எங்கள் பரலோக பரலோகத் தந்தையே !
எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவே !
எங்கள் பலமும் ஞானமும் ஆன பரிசுத்த ஆவியானவரே !
உங்கள் உண்மை, நம் வாழ்வில் வருக!
, உங்கள் சக்தி, எ மது தேவைகளில், எம் மீட்பாக வாருங்கள்,
உங்கள் கருணை, எங்கள் குடும்பங்களில் வருக!,
உன் அன்பு , எங்கள் இதயங்களில் வருக!,
உங்கள் அமைதி, உலகத்தில் வருக!
உங்கள் மன்னிப்பும் இரக்கமும்,
எம் வாழ்வில் வருக!
ஓ இறைவனே இரங்கும்!
மனித, அப்பாவி பாடுகளில் இரங்கும்!
இறைவா! உலக பிளவுகளில் இருந்து எ ம்மை விடுவித்து,
அச்சம், போர்கள், மற்றும் ஆணவம், பொல்லா ப்புகளில்
இருந்து எ ம்மை விடுவிக்க ,
ஆண்டவரே, உமது ராஜ்யம் வருவதாக!
உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக !
ஆமென்!

உலகின் மிக உயர்ந்த சமாதான தேவனுக்கு மகிமையும்! பூமியில் அமைதி!
உலகின் மிக உயர்ந்த சமாதான தேவனுக்கு மகிமையும்! பூமியில் அமைதி! ஒவ்வொரு கண்டத்திலும் அமைதி! ஒவ்வொரு நாட்டிலும் அமைதி! ஒவ்வொரு சமூகத்தின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக! ஒவ்வொரு குடும்பமும் அமைதி! பூமியில் அனைத்து தனி நபர்கள் சமாதானம்
6/25/15
வளன் பிறந்த சூதேய நாட்டின் தலைமைப் பதியாகிய எருசலேம் நகரத்தின் சிறப்பைக் கூறும் பகுதி.
முதற் காண்டம் | 61 |
|
தேம்பாவணி
முதலாவது
|
நாட்டுப் படலம்
|
தேம்பாவணியின் 3615 பாடல்களும் 36 படலங்களாக உட்பிரிவு
பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொன்றும் பன்னிரு படலங்கள் கொண்ட
மூன்று பாகங்களாக முதற்கண் வெளியிட்டோர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
காண்டமென்று எண்ணிக்கைப் பெயரிட்டுள்ளனர். முடி சூட்டுப் படலம்,
131-ஆம் பாடலிலும், பாவுரை பதிகத்தும் புறவுரை ஆசிரியத்தும் படலத்
தொகையும் பாடல் தொகையும் குறிக்கப்பட்டுள்ளன; காண்டம் பற்றிய
விவரமே இல்லை. நூலின் தன்னிறைவு கொண்ட பெரும் பிரிவே
காண்டம் எனக் கொள்ளத்தக்கது. அதனோடும் இக்காண்டப்பிரிவு
பொருந்தவில்லை. எனவே, தேம்பாவணிக்குக் காண்டப் பிரிவு
இல்லையென்று கொள்க.

படலம் என்பது காப்பிய உட்பிரிவாய்த் தன்னிறைவு கொண்டு,
அடுத்து வரும் படலத்தோடு கதைத் தொடர்பு கொண்டு நிற்பது.
இப்படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் இயற்கை வளத்தை
இணைத்துக் கூறும் பகுதி.
மழை வளம்
அடுத்து வரும் படலத்தோடு கதைத் தொடர்பு கொண்டு நிற்பது.
இப்படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் இயற்கை வளத்தை
இணைத்துக் கூறும் பகுதி.
மழை வளம்
- மா, கூவிளம், -விளம், -விளம், -மா
1 |
புள்ளு லாம்விசும் பிடைதொறும் பொரும்படை பொருவ வெள்ளு லாமழை வெண்கொடி யுருக்கொடு விளங்கித் தெள்ளு லாந்திரை திளைப்பவுண் டெழுந்துயர் பரந்து வள்ளு லாங்கரு மதகரி இனமெனத் தோன்ற. |
புள் உலாம் விசும்பு இடை தொறும் பொரும் படை பொருவ வெள் உலாம் மழை வெண் கொடி உருக் கொடு விளங்கி, தெள் உலாம் திரை திளைப்ப உண்டு, எழுந்து உயர் பரந்து வள் உலாம் கரு மத கரி இனம் எனத் தோன்ற. |
பறவைகள் பறந்து உலாவும் வானத்தில் வெண்ணிறமாக இடந்தோறும்
உலாவும் மேகங்கள், போருக்கு அணிவகுத்த படை போலவும்,
வெண்ணிறத்துணிக்கொடியின் உருவத்தைக் கொண்டும் விளங்கின. பின்
அவை அசைந்து உலாவும் தெளிந்த கடல் நீரை மிகுதியாகக் குடித்து,
எழுந்து உயர்வானத்தில் பரந்து, வலிமையோடு காட்டில் உலாவும் கரிய
மத யானையின் கூட்டம் போல் தோன்றின.

6/22/15
வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி உரையாசிரியர் பேராசிரியர் வி.மரிய அந்தோணி: நகரப் படலம்
இரண்டாவது
|
நகரப் படலம்
|
வளன் பிறந்த சூதேய நாட்டின் தலைமைப் பதியாகிய எருசலேம்
நகரத்தின் சிறப்பைக் கூறும் பகுதி.
நகரத்தின் சிறப்பைக் கூறும் பகுதி.
எருசலேம் பெருமை
-விளம், -மா, தேமா, - விளம், -மா, தேமா
1 |
மெய்வ்வழி மறைநூ னீங்கி வியனுல கினிதென் றின்னா வவ்வழி வுற்ற தென்ன வதிந்தெமை யளித்துக் காக்கச் செவ்வழி யுளத்த தூயோன் றெரிந்தமா நகரி தென்றா லிவ்வழி பின்ன ருண்டோ வெருசலே நகரை வாழ்த்த. |
மெய் வழி மறை நூல் நீங்கி, வியன் உலகு இனிது என்று, இன்னா வவ்வு அழிவு உற்றது என்ன, வதந்து எமை அளித்துக் காக்கச் செவ் வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் இவ் வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த? |
பரந்த இவ்வுலக வாழ்க்கையே இனிதென்று மதித்து, வேத நூல்
நாட்டிய உண்மையான வழியை விட்டு விலகியதனால், பாவமாகிய
துன்பத்தினால் கவரப்பட்டு இவ்வுலகம் அழிவுக்கு ஆளாகிய தென்று கண்டு,
செம்மையான வழியிலேயே செல்லும் உள்ளத்தைக் கொண்ட தூயவனாகிய
ஆண்டவன் தானே இவ்வுலகிற்கு வந்து தங்கியிருந்து நம்மையெல்லாம்
மீட்டுக் காக்கவென்று தெரிந்து கொண்ட பெரிய நகரம் இது என்றால்,
எருசலேம் நகரை வாழ்த்த இந்த முறைமைக்குப் பின்னரும் சிறந்த
வேறொன்று உண்டோ?

வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி உரையாசிரியர் பேராசிரியர் வி.மரிய அந்தோணி: நாட்டுப் படலம்
முதலாவது
|
நாட்டுப் படலம்
|
தேம்பாவணியின் 3615 பாடல்களும் 36 படலங்களாக உட்பிரிவு
பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொன்றும் பன்னிரு படலங்கள் கொண்ட
மூன்று பாகங்களாக முதற்கண் வெளியிட்டோர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
காண்டமென்று எண்ணிக்கைப் பெயரிட்டுள்ளனர். முடி சூட்டுப் படலம்,
131-ஆம் பாடலிலும், பாவுரை பதிகத்தும் புறவுரை ஆசிரியத்தும் படலத்
தொகையும் பாடல் தொகையும் குறிக்கப்பட்டுள்ளன; காண்டம் பற்றிய
விவரமே இல்லை. நூலின் தன்னிறைவு கொண்ட பெரும் பிரிவே
காண்டம் எனக் கொள்ளத்தக்கது. அதனோடும் இக்காண்டப்பிரிவு
பொருந்தவில்லை. எனவே, தேம்பாவணிக்குக் காண்டப் பிரிவு
இல்லையென்று கொள்க.
பெற்றுள்ளன. இவற்றை ஒவ்வொன்றும் பன்னிரு படலங்கள் கொண்ட
மூன்று பாகங்களாக முதற்கண் வெளியிட்டோர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
காண்டமென்று எண்ணிக்கைப் பெயரிட்டுள்ளனர். முடி சூட்டுப் படலம்,
131-ஆம் பாடலிலும், பாவுரை பதிகத்தும் புறவுரை ஆசிரியத்தும் படலத்
தொகையும் பாடல் தொகையும் குறிக்கப்பட்டுள்ளன; காண்டம் பற்றிய
விவரமே இல்லை. நூலின் தன்னிறைவு கொண்ட பெரும் பிரிவே
காண்டம் எனக் கொள்ளத்தக்கது. அதனோடும் இக்காண்டப்பிரிவு
பொருந்தவில்லை. எனவே, தேம்பாவணிக்குக் காண்டப் பிரிவு
இல்லையென்று கொள்க.
படலம் என்பது காப்பிய உட்பிரிவாய்த் தன்னிறைவு கொண்டு,
அடுத்து வரும் படலத்தோடு கதைத் தொடர்பு கொண்டு நிற்பது.
இப்படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் இயற்கை வளத்தை
இணைத்துக் கூறும் பகுதி.
மழை வளம்
அடுத்து வரும் படலத்தோடு கதைத் தொடர்பு கொண்டு நிற்பது.
இப்படலம் வளன் பிறந்த சூதேய நாட்டின் இயற்கை வளத்தை
இணைத்துக் கூறும் பகுதி.
மழை வளம்
- மா, கூவிளம், -விளம், -விளம், -மா
1 |
புள்ளு லாம்விசும் பிடைதொறும் பொரும்படை பொருவ வெள்ளு லாமழை வெண்கொடி யுருக்கொடு விளங்கித் தெள்ளு லாந்திரை திளைப்பவுண் டெழுந்துயர் பரந்து வள்ளு லாங்கரு மதகரி இனமெனத் தோன்ற. |
புள் உலாம் விசும்பு இடை தொறும் பொரும் படை பொருவ வெள் உலாம் மழை வெண் கொடி உருக் கொடு விளங்கி, தெள் உலாம் திரை திளைப்ப உண்டு, எழுந்து உயர் பரந்து வள் உலாம் கரு மத கரி இனம் எனத் தோன்ற. |
பறவைகள் பறந்து உலாவும் வானத்தில் வெண்ணிறமாக இடந்தோறும்
உலாவும் மேகங்கள், போருக்கு அணிவகுத்த படை போலவும்,
வெண்ணிறத்துணிக்கொடியின் உருவத்தைக் கொண்டும் விளங்கின. பின்
அவை அசைந்து உலாவும் தெளிந்த கடல் நீரை மிகுதியாகக் குடித்து,
எழுந்து உயர்வானத்தில் பரந்து, வலிமையோடு காட்டில் உலாவும் கரிய
மத யானையின் கூட்டம் போல் தோன்றின.
உலாவும் மேகங்கள், போருக்கு அணிவகுத்த படை போலவும்,
வெண்ணிறத்துணிக்கொடியின் உருவத்தைக் கொண்டும் விளங்கின. பின்
அவை அசைந்து உலாவும் தெளிந்த கடல் நீரை மிகுதியாகக் குடித்து,
எழுந்து உயர்வானத்தில் பரந்து, வலிமையோடு காட்டில் உலாவும் கரிய
மத யானையின் கூட்டம் போல் தோன்றின.
http://www.tamilvu.org/library/l4310/html/l4310fir.htm
6/10/15
வீரமாமுனிவர் Father Constantine Joseph Beschi எழுதியவர்: Dr.Ramani Naidu
வீரமாமுனிவர்
Father Constantine Joseph Beschi
Father Constantine Joseph Beschi
எழுதியவர்: Dr.Ramani Naidu
வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் Joseph பெஸ்கி என்பதாகும். அவர் 8.11.1680 அன்று இத்தாலியில் காஸ்திகிலியோன் என்ற இடத்தில் பிறந்தவர். 1709ல் சேசுசபைப் பாதிரியாரானபின் -1710ல் தமிழகத்துக்கு வந்தார். இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.
எனினும் இன்றைய கிருத்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து.
திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.
பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்
முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்
நகரினை ஒக்கும் வீடே
இந்தப் பாடல் ஜெருசலேம் நகரை வர்ணிக்கிறது. காப்பியத் தலைவர் வருணணை வளவனாரை வர்ணிக்கும் இந்தப் பாடலின் பாங்கில் வெளிப்படுகிறது.
அன்பு வைத்த உயிர்நிலை அ·திலார்க்
கென்பு தோலுடல் போர்த்ததென றன்புடை
இன்பு தோய்த்த நிலையெனத் தானிவன்
துன்பு காய்ந்த உயிர்த்துணை யினான்

ஒலிக்குறிப்புகளைத் தம் பாடலில் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.
வளனார் தேவத்தாயார் திருமணம் குறித்தது இந்தப் பாடல்.
முடுகு முரசொலி முடுகு முழவொலி
முடுகு முருகொலி முடிவிலாக்
கடுகு பறையொலி கடுகு கலமொலி
கடுகு கடலொலிக னிவெழாத்
தொடுகு குழலொளி கொடுகு குரலொலி
தொடுகு துதியொலி தொடுதலாற்
படுகு முகிலொலி படுகு கடலொலி
படுத லிலமண மாயதே.

6/9/15
வீரமாமுனிவரின் தேம்பாவணி : புனித சூசையின் புகழ் பாடும் அரிய புத்தகம்
வீரமாமுனிவரின் தேம்பாவணி; புனித சூசையின் புகழ் பாடும் அரிய புத்தகம்
http://www.tamilvu.org/library/l4310/html/l4310ind.htm
http://www.tamilvu.org/library/l4310/html/l4310ind.htm
5/5/15
5/3/15
தூய ஆவியே வாரும்!
தூய ஆவியே வாரும் !
துணையாக வாரும் -உம்
தூய கரங்களால் எமை தழுவி
தயவாய் காத்திடும்
துள்ளும் அலையின் சக்தியே
எளியார் எமை பலப்படுத்த வாரும்
பாயும் நதியின் பலமே-எம்
பயம் நீக்கி காத்திட வாரும்
எரியும் நெருப்பு தணலின் உருவே
இருளின் பிடியை தகர்ப்பவரே!
அருளின் கொடைகளால் எம்மை
நிரப்ப வாரும்!
துணையாக வாரும் -உம்
தூய கரங்களால் எமை தழுவி
தயவாய் காத்திடும்
துள்ளும் அலையின் சக்தியே
எளியார் எமை பலப்படுத்த வாரும்
பாயும் நதியின் பலமே-எம்
பயம் நீக்கி காத்திட வாரும்
எரியும் நெருப்பு தணலின் உருவே
இருளின் பிடியை தகர்ப்பவரே!
அருளின் கொடைகளால் எம்மை
நிரப்ப வாரும்!
4/25/15
அருட்தந்தை ரத்னராஜ் திருப்பலி : தூய பனிமயமாதா திருத்தலம் : தூத்துக்குடி
https://www.youtube.com/watch?v=Patfi4nlXyU
https://www.youtube.com/watch?v=ej5vj7qLq1k
4/19/15
Fr. Doss,Cap Roman Catholic Tamil Dance Song
https://www.youtube.com/watch?v=Vb_ppJ9s70s
Fr. Doss,Cap Roman Catholic Tamil Dance Song
4/18/15
4/13/15
தமிழ் ஜெபப் புத்தகம்
தமிழ் ஜெபப் புத்தகம்
https://play.google.com/store/apps/details?id=com.moonstarinc.tpb&hl=en
பரிசுத்த ஆவியானவரே எம்மில் வாரும் !
பரிசுத்த ஆவியானவரே எம்மில் வாரும் !
https://www.youtube.com/watch?v=ca7vGgbjzuU
https://www.youtube.com/watch?v=ca7vGgbjzuU
4/12/15
4/11/15
திருமணம் இறைவனின் அருள்வரம் ! திருக்குடும்பம் இறைவனின் உறைவிடம்!
திருமணம் இறைவனின் அருள்வரம் !
திருக்குடும்பம் இறைவனின் உறைவிடம்
4/4/15
கிறிஸ்து உயிர்ப்பின் நல்வாழ்த்துக்கள் !
கிறிஸ்து உயிர்ப்பின் நல்வாழ்த்துக்கள் !
https://www.blogger.com/blogger.g?blogID=1712872916758711867#editor/target=post;postID=38279221803210672
https://www.blogger.com/blogger.g?blogID=1712872916758711867#editor/target=post;postID=38279221803210672
3/30/15
3/23/15
புனித வாரம் புனிதமாய் அனுசரிப்போம் புண்ணிய பலன்கள் பெற்றிடுவோம்
புனித வாரம் புனிதமாய் அனுசரிப்போம்
புண்ணிய பலன்கள் பெற்றிடுவோம்
மன்னிக்கும் வாரம்
மனஸ்தாப வாரம்
பாவ மன்னிப்பின் வாரம்
ஆன்ம சுத்திகரிப்பின் வாரம்
புனித வாரம்
மனமாற்றத்தின் வாரம்
மனம் மாறுதலின் வாரம்
மனங்கள் தேற்றுதலின் வாரம்
புனித வாரம்
மன்றாட்டின் வாரம்
பரலோக வாரம்
பரிசுத்த வாரம்
பரலோக தந்தையின்
அன்பின் வாரம்
புண்ணிய வாரம்
தர்மம் செய்யும் வாரம்
ஏழைக்கு உதவும்
புனித வாரம்
அருளின் வாரம்
கிருபையின் வாரம்
அன்பின் வாரம்
புனித வாரம்
புண்ணிய பலன்கள் பெற்றிடுவோம்
மன்னிக்கும் வாரம்
மனஸ்தாப வாரம்
பாவ மன்னிப்பின் வாரம்
ஆன்ம சுத்திகரிப்பின் வாரம்
புனித வாரம்
மனமாற்றத்தின் வாரம்
மனம் மாறுதலின் வாரம்
மனங்கள் தேற்றுதலின் வாரம்
புனித வாரம்
மன்றாட்டின் வாரம்
பரலோக வாரம்
பரிசுத்த வாரம்
பரலோக தந்தையின்
அன்பின் வாரம்
புண்ணிய வாரம்
தர்மம் செய்யும் வாரம்
ஏழைக்கு உதவும்
புனித வாரம்
அருளின் வாரம்
கிருபையின் வாரம்
அன்பின் வாரம்
புனித வாரம்
இயேசு சிலுவையில் அறையுண்டு மரித்ததை தியானிப்போமாக !
தந்தையே உம் அன்பு என் அடைக்கலம்
அப்பா எனக்காக உயிர் துறந்தீர்
அன்பால் என்னை விடுவித்தீர்
ஆயிரம் நன்றி சொல்வேன்
வெற்றி பாயிரம் பாடிடுவேன்
இயேசு என்னை மீட்டார்
அவரே என் நண்பனாய் அருகில் இருக்க
நான் யாருக்கும் அஞ்சிடேன்
சாவின் கொடுக்குகளின் சங்கிலிகளை தகர்த்தார்
மரித்தார் யேசு எனக்காய்
உயிர்த்தார் இயேசு எனக்காய்
இப்புவி வாழ்வில் அவர் இறப்பும் உயிர்ப்பும்
எடுத்துரைத்து மீட்படைவேன்
அல்லேலுயா ! அல்லேலுயா ! அல்லேலுயா !
ஆமென் ! அல்லேலுயா !
இயேசு சிலுவை சுமந்ததை தியானிப்போமாக !
என்னையா கோலமிது என் இயேசு ராஜா
என்னையா கோலமிது என் இயேசு ராஜா
தோளில் சிலுவை நீ சுமந்தாய்
உன் சிந்தையில் என்னை சுமந்தாய் ஐயா
சிந்தினா ய் ரத்தம் எல்லாம்
என் சிந்தை உமக்கே ஐயா
என்னையா கோலமிது என் இயேசு ராஜா
என்னையா கோலமிது என் இயேசு ராஜா !
3/20/15
கர்த்தர் முள்முடி சூட்டபட்டதை தியாப்னிபோமாக!
முள்முடி கொண்ட சிரசு , தாளா வலியுடை வாதை
உள்ளம் கொள்ளும் அன்பு வல்லான் இறை அன்பு
பழிக்கும் நண்பர் பராமுகமுடை சுற்றம்
கொந்தளிக்கும் வஞ்சக பொய் சூழ்ச்சியுடை தலைவர்கள் விதைத்தார் வஞ்சகம்
கல்நெஞ்சுடை சேவகர் கையில்
பொல்லா அவமானம் வாதை யுற்றார் இயேசு
யேசுவே என்மேல் இரக்கமாயிரும்
கடவுள் சிரசு முள்ளால் சொல்லால்
கயவன் எனக்காய் குனிந்ததோ?
கனிந்த முகம் புண்ணானதே
கடும் பாவி எனக்காய்
கருணை பார்வை குருதி நிறைந்ததே
கண்மூடி தனமான என் அகங்கார போக்கால்
யேசுவே என்மேல் இரக்கமாயிரும்
என் தலைக்கனம் போக்க
தலை தாழ்ந்தார் யேசு
என் எண்ணம் மனம் சுமை நீக்க
தலை முள்முடி தரித்தார் யேசு
வணங்கா அகம் என் பாவம் போக்க
வானவர் வணங்கும் சுதன்
வணங்கி சேவகர் கை முள்முடி ஏற்றார்
யேசுவே என்மேல் இரக்கமாயிரும்!
மனதால் வஞ்சக பாவம் பரிவாரம்
வன்மை சூழ்ச்சி நிறை தன்மையுடை
மானிட மன பாவங்கள் போக்க
பரிகார பரிசுத்த செம்மறி
பரிகாசம் ஏற்றார் மன வேதனை தரித்தார்
யேசுவே என்மேல் இரக்கமாயிரும்!
வணங்கிய தலையில் பிணங்கிய முள்முடி
வீங்கிய முகம் விம்மிய ரத்தம்
சூட்டெரிக்கும் சூரியன் வெம்மையிலும்
தாளா து சுட்டதே கைவிட்டு
காட்டிகொடுத்த மானிட மடமை
கொடுமை கயவர்கள் கையில் கைவிடப்பட்ட தனிமை
தடியடி வதைதரும் வேதனையிலும்
கொடியதாய் வலித்ததே அவமானம்
முள்ளின் கூரிய வலியிலும்
மேலாக வலித்தே ஏளன நயவஞ்சக சூழ்ச்சிகள்
சுற்றம் உற்றார் மாற்றார் ஏளன பேச்சுக்கள்
யேசுவே என்மேல் இரக்கமாயிரும்!
3/19/15
சரணம் நம்பினேன் நாதா
https://www.youtube.com/watch?v=wdJUEHTEJ3I
சரணம் நம்பினேன் நாதா
https://www.youtube.com/watch?v=I61rdGTsfwM
சரணம் நம்பினேன் நாதா
https://www.youtube.com/watch?v=I61rdGTsfwM
3/13/15
இரண்டாவது துக்க தேவரகசியம் : இயேசு கற்தூணில் கட்டி அடிக்கப் பட்டதை தியானிப்போமாக !
ஏளனம், ஏகாந்தம் , புறக்கணிப்பு , ஒருபுறம் . தனிமை , தவிப்பு , தள்ளாட்டம் , துயரம் , துன்பம் மறுபுறம் . சிப்பாய்களின் சலசலப்பு , பரிசேயர் , சதுசேயர் மற்றும் பொய் சான்று கூறியோரின் வஞ்சகம் ஒருபுறம் . துயருற்று யேசுவுக்காக அழுவோரின் அங்கலாய்ப்பு மறுபுறம் . எங்கும் குளப்பம், எங்கும் பீதி நிறைந்திருக்க, சிப்பாய்கள் இயேசுவை தரதரவென இழுத்து , அவரது ஆடைகளை பிடுங்கி எறிந்தனர் , நிர்வாண கோலம் கொண்ட யேசுவுக்கு உடல் வாதையுடன் தாங்கவொண்ணா அவமானம் சூழ்ந்து கொண்டது . கடிய மனதுடன் கொடிய சேவகர்கள் கடமை செய்ய , இயேசுவை கல்தூணில் கட்டி அடிக்கலானர். சாட்டை அடிகள் பட்டுத் வலியால் துடித்தார் இயேசு . சாட்டையின் ஒவ்வொரு அடியிலும் உடலின் சதைகள் கிளிந்தன , இரத்தம் பீறிட்டு தெறித்தது, இயேசு மனித சுபாவ வலிகளுக்கு தன்னை முழுமையாய் கையளித்தார்.
இந்த தேவரகசியத்தை தியானிக்கும் போது , மனித துன்பங்கள் , துயரங்கள், வேதனைகள் , வலிகள், உதவியற்ற நிலைமைகள் , சூழ்நிலைகள் , கைவிடப்பட்ட தருணங்கள் மற்றும் மானிட உடல், உள்ள , ஆன்ம வாதைகளை இயேசு தன்மீது ஏற்றுக்கொண்டார் . சாட்டையடிகளின் வேதனைகளை அன்பின் பரிசாக மாற்றிக்கொண்டார் , இதனால் அன்பினால் விளையும் வேதனைகளை ஏற்றுக்கொள்ள நமக்கு முன்மாதிரிகையனார். நாம் அன்பு செய்யும் நம் குடும்பத்தில் சகிப்பு , மன்னிப்பு , தியாகம் , இதனால் விளையும் வேதைகளை எசுவுக்காக ஏற்றுக்கொள்ள இறைமகன் தன்னை கசையடிகளுக்கு கையளித்தார்.
நாம் மனதால் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக, இயேசு அவமானப்பட்டார். நாம் உடலால் செய்த பாவங்களுக்காக, இயேசு கசையடி தாங்கினார் .
https://www.youtube.com/watch?v=gC0YeIxWr0o
கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக !
கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக !
தனிமையின் கோர தாண்டவத்தில் இறைதுணையை நாடினார் . தனியாக ஜெபித்தார் . இறைவனை மானிட நிலையில் வேண்டினார் . பலனாக ஜெபத்தின்போது எல்லா மானிடருக்கும் தரப்படும் இறை துணையைப் பெற்றார் . துணிந்து எழுந்து சிலுவைப் பாடுகளுக்கு தன்னை அர்பணித்தார் இறைமகன் .
இந்த துக்க தேவரகசியம் ஓர் விடுதலைப் பயணமாகும் . இந்த முதல் துக்க தேவரகசியமான , கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை தியானிக்கும் போது , இதனை உணர்ந்து ஜெபிக்கும் போது , இறைமகனின் தியாகம் , இறை சித்தத்தை ஏற்று , ஓர் மனிதனாக இறைவனுக்கு தன்னை கீழ்ப்படித்திய விந்தையான பரம அன்பு நமக்கு ஓர் எடுத்துகாட்டாக அமைகின்றது . இதனால் நம் மனதில் இருக்கும் ஆணவம் அகன்று தாழ்ச்சி என்ற புண்ணியம் தோன்ற வழி பிறக்கும் . இறைமகனே அன்பிற்காக தனை தாழ்த்தும் போது , நாம் எம்மார்த்திரம். நம் வாழ்வில் நாம் நேசிப்பவர்கள், நமை நேசிக்காதவர்கள், இவர்களை மன்னித்து தொடர்ந்து இறைவனுக்காக அன்பு செய்ய இறைமகனின் வழி நடந்து ஜெபித்து வாழ துணிவு பிறக்கும்.
மற்றும் தொடர்ந்து இந்த முதல் தேவ இரகசியத்தை தியானிக்கும் போது , கெத்சமனி தோட்டம் நம் நினைவில் சஞ்சரிக்கின்றது. இஃது நம்மை, முதல் ஆதம் , ஏவாள் வாழ்ந்த சிங்கார வனத்தை நினைவு படுத்துகின்றது. ஆதம் ஏவாளின் சிங்காரத் தோட்டத்தில் , கீழ்ப்படியாமையால் செய்த, முதல் பாவமான ஜென்மப் பாவம் போக்கவந்த செம்மரி, இப்போது கெத்சமணியில் ரத்த வியர்வை வியர்க்கலானர். சிங்காரமாக வாழப் படைக்கப் பட்ட மனிதன் சிங்காரத் தோட்டத்தை பாவத்தால் துறந்தான். அந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக இறைமகன் கேத்சமனியில் துயரப்படலானார் . சிங்கார வனத்தில் மானிட கீழ்படியாமை பாவமானது ,, கேத்சமினியில் இறைமகனின் கீழ்படிதலால், மனிதன் மீட்பின் அன்பு தியாகமானது . மீட்பின் விடுதலை பயணம் தொடங்கப் பட்டது.
மேலும் , இந்த தேவரகசியத்தை தியானிக்கும் போது , நம் கவனம் இயேசுவின் ஜெபத்தையும் , அவரின் துக்கத்தையும் நமக்கு தெளிவு செய்கின்றது . இஃது மனிதரான நமக்கு, முன்மாதிரிகையாக அமைகின்றது . துன்ப வேளையில் இயேசு ஜெபித்தார் , இறைசித்ததிற்காக மன்றாடினார். இதுபோன்று , நாமும் நம் சூழ்நிலைகளில் இறைவனை நோக்கி ஜெபிக்கவும் , இறைசிதத்தை வேண்டி ஜெபிக்கவும் , நமை தாழ்த்தி பிறரை அன்பு செய்து வாழவும் நமக்கு ஓர் எடுத்துகாட்டாக அமைகின்றது.
மேலும் தொடர்ந்து தியானிக்கும் போது நம் கவனம் இயேசு சீடர்களை தமக்காக விழித்திருந்து ஜெபிக்கச் சொன்ன நிகழ்வு நமக்கு புலப்படுகின்ற்றது. இறைமகன் தன் நண்பர்களை தம்முடன் விழித்திருந்து ஜெபிக்க அழைத்தார் . இந்த நிகழ்வு , நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது எவ் வ ளளுவு அவசியம் என்பதை வெளிப் படுத்துகிறது. மன்றாட்டுச் ஜெபத்தின் அவசியத்தை , ஒருவர் மற்றவருக்காக ஜெபிக்கும் பிரத் தனையின் அவசியத்தை இறைவன் நமக்கு உணர்த்துவது வெளிப் படுகின்றது.
கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக ! கீழ்ப்படிதல் , தாழ்ச்சி , இறைசித்தம் அறிதல் , தனிமனித ஜெபம் , மற்றும் குடும்ப ஜெபம் , பிறர் நமை தாங்கி ஜெபிக்கும் மன்றாட்டு ஜெபம் , இறைதுணையின் வல்லமை இவற்றை நாம் ஆழமாக தியனிப்போமாக!
பதினான்காம் தலம்: இயேசுவின் உடல் கல்லறையில்
திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவின் உடல் கல்லறையில்:
கல்லறை/, இது/ காலம் வழங்குகிற கல்வி அறை/. ஆறடி நிலப்பரப்பில்/ அமைந்துவிடுகிற சமத்துவக்கூடம்/. உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கியவர்களும்/ இங்கேதான் அடங்கிபோகிறார்கள்/. உள்ளங்கை அளவிற்குகூட உட்கார இடம் இல்லாமல்/, தெருகோடியில் நின்றவர்களும்/ இங்கேதான் இடம்பிடித்தார்கள்/. இந்த உலகம்/ வந்துபோகிறவர்களின் யாத்திரைத்தளம்/. நிரந்தரம் என்று நினைத்துக்கொண்டு/ செல்வம் சேர்ப்பதையே வாழ்வென்று எண்ணியவர்கள்/ கல்லறைகளில் அடங்கிபோனார்கள்/. நகைகளை இரவல் வாங்குகிற உலகில்/, கல்லறையை இரவல் வாங்கியவர் இயேசு/. தடாகத்தாமரை இலையில்/, ஒட்டாமல் ஓடுகிற தண்ணீர் துளிகளைப்போல/ வாழ்பவர்களின் கல்லறைகளுக்குக்கூட இதயத்துடிப்பிருக்கும்/. மனித நாடகத்தில்/ கல்லறை கடைசிக்காட்சி/. நாடகத்தை முடித்துக்கொண்டு/ யதார்த்த வாழ்விற்கு திரும்புகிறவர்களை/, இந்த கடைசிகாட்சிக் கட்டிப்போடமுடியாது/. முட்டை ஓட்டை எட்டி உதைத்துக்கொண்டு/ வெளியே எட்டிப்பார்க்கிற கோழிகுஞ்சிக்கு/ ஓடு தேவையில்லையே!
கரன்சி நோட்டை எண்ணிப்பார்க்கிற சில மனிதர்களுக்கு/, தங்கள் வாழ்க்கையை/ ஒருமுறையேனும் எண்ணிப்பார்க்கிற நினைப்பே வருவதில்லை/. விரல்களை விற்று மோதிரம் வாங்கி/ பழகிவிட்ட இவர்கள்/, வீணைகளை கூட விரகாக்கிவிடுகிரார்கள்/. மனிதர்களே/ உங்கள் கல்லறைகளுக்குக்கூட/ உயிர் துடிப்பிருக்கவேண்டும்.
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
பதின்மூன்றாம் தலம்: இயேசுவின் உடல் மரியன்னையின் மடியில்
திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசுவின் உடல் மரியன்னையின் மடியில்:
அம்மாவுக்கும், பிள்ளைக்கும்/ அப்படி ஒரு உறவு/. பூமி புரிந்துகொள்ள முடியாத உறவு/. தொப்புள் கொடியில் தொடங்கிய பந்தம்/ முடிவே இல்லாமல் தொடர்கிறது/. இந்த உறவிற்கு மட்டும் தான்/ முற்றுபுள்ளி இருப்பதில்லை/. மரித்த நிலையிலும்/ இயேசுவை மடியில் கிடத்துவது/ அன்னை மரியாளுக்கு ஆனந்தமாய் இருந்தது/. உயிரை காத்திட/ கொள்கைகளை விட்டுகொடுக்கும்/ கோழை மகனை/ இவர் பெறவில்லையே!/ வானத்து மடியில் கிடக்கும் நிலவைப்போல/ இயேசு மரியாளின் மடியில் தலைசாய்த்திருக்கிறார்/. அம்மாவின் மடிக்கு ஈடாக/ உலகில் எந்த இடமும் இல்லை/. அவள் பாடுகிற தாலாட்டுக்கு இணையான பாட்டை/ யாரும் இசைத்திட இயலாது/. குழந்தை வயிற்றில் இருக்கும்போதும்/, உலகில் நடமாடுகிறபோதும்/ ஒன்றாகவே நினைத்து/ தன் நெஞ்சிலே சுமக்கிற பெருமாட்டி/. அம்மாவை/ பிள்ளைகள் மறந்துபோவார்கள்/, ஆனால்/ அம்மாவுக்கோ தூக்கத்திலும் கூட/ பிள்ளைகளின் நினைவே/ விழிவாசல் ஓரம் விழித்திருக்கிறது/. அவள் ரத்தத்தை பாலக பருகிய குழந்தைகள்/, வயோதிக காலத்தில் அவளை ஒதுக்கிவிடுகிரார்கள்/. மனைவி கணவனை விவகாரத்து செய்துவிடலாம்/. ஆனால்/ தாய் ஒருபோதும் தன் பிள்ளையை/ உதறிவிடுவதில்லை/. அம்மா/, அவள் இரக்கத்தின் கவிதை.
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய் |
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ? | - 2
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
உனது பாத பதிவுகள், எனது வாழ்வின் வேதங்கள்
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
பன்னிரண்டாம் தலம்: இயேசு உயிர் நீத்தல்
திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு உயிர் நீத்தல்:
மரணம்/, மனித வாழ்வில்/ அதிர்வுகளை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றது/. உடலில் பழுதான உறுப்புகளை மாற்றுகிற அளவிற்கு/ அறிவியல் வளர்ந்திருக்கிறது/. பிரிந்து போன உயிருக்கு பதிலாய்/ மாற்று உயிர் பொருத்துகிற வித்தையை/ மனிதன் இன்னமும்/ கண்டிடவில்லை/. உயிருக்கு மாற்று இல்லைதான்/, ஆனால் லட்சிய வீரர்/ உயிருக்கு மாற்றாய்/, கொள்கையை நேசிக்கிறார்/. உயிரை விற்று/ கொள்கையை வாங்குகிறார்/. சிலருக்கு சாவில் தள்ளுபடி வாழ்வாகவும்/, வாழ்வோ மலிவு விலை சாவாகவும் ஆகிவிட்டது/. ஏசுவுக்கு உயிரை விட/, லட்சியம் பெரிதாக தெரிந்தது/. போராளியின் மரணத்தில்/ போராட்டம் வெற்றி பெரும் என்பது/ வரலாறு சொல்லுகிற பாடம்/. உடலை கொள்ளுகிரவர்களால்/ ஆன்மாவை அசைக்கக்கூட முடியாது/. கொள்கை உடையவர்/ கொஞ்சகாலம்தான் உயிர் வாழ்வர்/. கோழைக்கு மரணம்/ தவணை முறையில் வருகிறது/. வாழ்ந்த நாட்கள் அல்ல வரலாறு/, வாழ்ந்த முறையே வரலாறு/. முப்பத்து மூன்று ஆண்டில்/ தன் மூச்சை முடித்துக்கொண்ட இயேசு/ இரண்டாயிரம் ஆண்டுகளாய்/ இன்னமும் உயிர் வாழ்வது/ மரணம் அவரை வெற்றி கொள்ளவில்லை/ என்பதன் அர்த்தம்தானே?
-ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்
அன்னைமடித்தொட்டில் கட்ட கண்ணீர் துளி மெட்டுகட்ட
இறுதி தாலாட்டு இது மீட்பின் தாலாட்டு
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
பதினோராம் தலம்: இயேசு சிலுவையில் அறையப்படுதல்
திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு சிலுவையில் அறையப்படுதல்:
எளியவர் ஏற்றம் பெற/ தன்னை ஏணியாக்கியவர்/, ஆணிகளால் அறைபட்டு நிற்கிறார்/. வன்முறையே கூடாது என்றவரை//, வன்முறை வளைத்துக்கொண்டது/. அமைதி புறாக்களை/ உலகம் சிதைத்து/, வதைத்து/ சித்திரவதை செய்து/ கொண்றுவிடுகிறது/. வாழ்நாளில் வாழெடுக்காத இந்த முள்முடி மன்னர்/ காயப்பட்டதால் வரலாறே காயப்பட்டது/. கண்ணுக்குப் புலப்படாத ஊர்ந்து போகிற எறும்புக்குக்கூட/ வாழ்கிற உரிமை உண்டு/. கருத்துக்களுக்கும் மறுத்துரைக்க இயலாதவர்கள்/ எப்போதும் நாடுவது வன்முறை/. பூமியின் அழுக்கை சலவை செய்ய வந்த சமூகவாதிகளை/ உலகத்திலே வைக்கக் கூடாது என்கிற வன்முறை வாய்ப்பாட்டுக்கு/ இனி முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?/ ஆயுதம்/ தமிழ் எழுத்தில் மட்டும் போதும்/. வாழ்வில் வேண்டாம்/. வாழ்விக்கும் வான்மழை போதும்/, வாழ்வை குழைக்கும் குண்டு மழை வேண்டாம்/. வறியோரை வலியோர் வதைக்கலாம் என்கிற/ வக்கிர சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்/. இந்த செம்மறியின் ரத்தத்தில்/ பூமி/ தம்மை சுத்தம் செய்து கொள்ளட்டும்.
. -ஒரு பர.அருள்.திரி.
எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன.
ஆமென்.
நண்பருக்காய் உயிர் தருதல், உலகினிலே உயர்ந்ததென்றார்
உலகம் பிடித்திட, இயேசு உயிர்கொடுத்தாரே
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx
Subscribe to:
Posts (Atom)