வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்
கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில், பாரம்பரியத்தில் நாம் பலவகையான அருள் பொகிஷங்களை காணலாம். அவற்றில் நவநாள் ஜெபங்களும் ஒன்றாகும்.
ஜூலை மாத கொடை வெயில் மண்டையை பிளக்கிறது . வேளாங்கன்னியில் 10.30 திருப்பலியை முடித்து, 12 மணிக்கு தங்கும் அறையை நோக்கி நானும் என் குடும்பமும் நடந்து கொண்டிருந்தோம். நடந்தோம? இல்லை வெயில் தங்காது ஓடிக் கொண்டிரிருந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் மக்கள் எங்கும் நிறைந்து வழிந்தார்கள் . தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்றுவதில் சுருசுருப்பாக இருந்தார்கள். வெயிலோ மழையோ அவர்கள் கண்டுகொள்ளவில்லை , என் பார்வை உச்சி வெய்யிலில் முழந்தாழிட்டு நடக்கும் பக்தர்கள் பக்கம் சென்றது. என் உள்ளம் நம்பிக்கையின் அனுபவம் கொண்டது. அப்போது ஒரு அருமையான எண்ணம் என் மனதை வருடியது . அந்த எண்ணமானது இப்படியாக இருந்தது. அங்கே நான் காணும் பக்தர்கள் ஒவ்வோருவரும் ஓர் புதுமை. ஒவ்வோரு பக்தரும் பல்வேறு வேண்டுதல்களின் சாட்சி , நம்பிக்கையின் சாட்சி , புதுமையின் சாட்சி , அவர்கள் யாவரும் கண்காணும் விசுவாச நற்செய்தியா ளர்கள், அற்புத உயிருள்ள வேத சாட்சிகள்.
வெயிலை மறந்தேன் அங்கே கொஞ்சம் நேரம் நின்று நான் முதன்முறையாக என்னை மறந்து என் தனிப்பட்ட குடும்ப மன்றாட்டை விடுத்து , அங்கே முழந்தாழிட்டுச் செல்லும் திரியாத்திரை பக்தர்களுக்காக , அவர்தம் வேண்டுதல்களுக்காக மனம் உருகி செபித்தேன்.
திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்.
தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம், அப்போது அங்கே கிறிஸ்தவர்கள் அல்லாத பிரமதத்து சகோதர்கள் அதிகமாய், குடும்பம் குடும்பமாய் , சந்தோஷமாய், மாதாவை காண வேகமாய் சென்றுகொடிருந்தர்கள். அவர்களை காணும் போது , என் விசுவாசாம் மிகவும் சிறியதாக மாறியது. திருச்சபையின் மகிமையும் அதன் மாபெரும் சேவையும் கண்கூடாக விளங்கியது. இப்போது நான் அவர்களுக்காகவும் செபித்தேன். இவற்றையெல்லாம் மனதில் ஏந்திக்கொண்டு நடந்த நான், பாரமாக நினைத்த என் கவலைகள், வேண்டுதல்கள், ஒன்றுமில்லாதது போன்று தோன்றியது. பாரமான மனதோடு சென்ற நான் லேசான மனதோடு, மிகுந்த நம்பிக்கையோடு தங்கும் அறையை அடைந்தேன்.
திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நம் விசுவாசத்தை ஆழப்படுத்துவதை நாம் அறிவோம். அங்கே நம் ஜெபங்கள் உலகத் திருச்சபையோடு சேரும் போது நாம் நம்மை புனிதர்களின் விசுவாசத்தோடு இணைக்கும் அற்புதம் நிகழ்கிறது. இதானால் குறைந்த நம் விசுவாசம் பலமடங்காகப் பெருகுவது ஓர் அதிசயம் ஆகும். திரியாத்திரை நவநாள் ஜெபங்கள் நலன் பயக்கும் அருள் வரங்கள்.
நற்செய்தி தியானம் நன்மை பயக்கும் அருள் ஜெபமாகும் . அனுதினமும் நற்செய்தி தியானித்தல் பெரும்நன்மை விளையும் என்பது புனிதர்களின் வாக்கு , மற்றும் தாய்த் திருட்சபையின் வாழ்வாகும் . திருட்சபையின் அருள்வாழ்வின் அதாரம் திருப் பலியாகும். அக்தே, தலைசிறந்த ஜெபமாகும் . திருப்பலியின், முதன்மைப் பாகம் விவில்யத் தியானம் என்றால் அஃது மிகையாகது . அன்றாடம் திருவிவிலியத் தியானத்தை ஊ க்கிவிப்பது திருப்பலியகும்.
நற்செய்தி தியானத்தை நாம் எங்கும் எப்போதும் செய்யலாம் . அஃது ஓர் எளிமையான, இனிமை யா ன அனுபவச் ஜெபம் ஆகும் . பல புனிதர்கள் நாள் முழுவதும் நற்செய்தி தியானத்தில் செலவழித்துள்ளர்கள். துறவியர்கள் , கன்னியர்கள் , சந்நியாசிகள், நற்செய்தி தியானத்தை தங்கள் ஜெபமாக மேற்கொள்கிறார்கள். காட்டில் மற்றும் பாலை வனங்களிலும் துறவியர்கள் நற்செய்தி தியானத்தை நடத்தினார்கள் அதனை தங்கள் வாழ்வின் குரி யாகக் கொண்டார்கள் . ஏன் , திருச்சபையை எதிரிகள் அழிக்க முற்பட்ட ஆதி காலத்தில், திருச்சபையின் துறவியர்கள் பாலைவனத்தில் தஞ்சம் கொண்டு நற்செய்தி தியானத்தை மேற்கொண்டார்கள் . இதனால் திருச்சபை வேர்கொண்டு வளர்ந்தது. இதனால் நற்செய்தி தியானம் எனும் ஜெபம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் காணப் படுகிறது.
புனித பிரான்சிஸ் அசிசி, புனித இன்னாசியர் மற்றும் எல்லாப் புனிதர்களும் நற்செய்தி தியானத்தை கடைப் பிடித்து வாழ்ந்தார்கள் . பல புனிதர்கள் நற்செய்தி தியானத்தை தங்கள் வாழ்வாக மாற்றிக் கொண்டார்கள் , இதனால் முக்தி பேறு அடைந்தா ர்கள். ஒருசில புனிதர்கள் நற்செய்தி யை தியானித்து , அதில் ஒருசில வசனங்களை தங்கள் வாழ்வில் , பேச்சில் , நடவடிக்கைகளில் பின்பற்றினார்கள் , இதனால் அவர்கள் நற்செய்தியை பிரதிபலித்தார்கள், வாழ்வில் அசாத்திய காரியங்கள் , அற்புதங்கள் கண்டார்கள் . பரிசுத்த ஆவியின் நண்பர்கள் அனார்கள். புனித அந்தோனியார் இதற்கு ஓர் உதாரணம் ஆவார்.
புனிதர்கள் மட்டும்மல்லாது , சாதாரண மக்களாகிய நம்மையும் தாய் திருச்சபை நற்செய்தி தியானத்தை நம் வாழ்வில் கடைபிடிக்க அழைப்பு விடுக்கிறது என்பதை இரண்டாம் வாத்திகன் சங்கம் உணர் த்துகிறது.
நற்செய்தி தியானம் என்பது , நல்லதோர் விதையை , நம் உள்ளமாகிய நிலத்தில் விதைப்பதுக்கு சமம் ஆகும் . உள்ளத்தில் நற்செய்தி தியானம் செய்தால் உள்ளம் பரிசுத்தமாகும் , மற்றும் அமைதி கொள்ளும் வழி பிறக்கும்.
எல்லாச் செயல்களுக்கும், பிறப்பிடமானது உள்ளம் என்பதால் நற்செய்தி தியானம் செய்யும் உள்ளம் நல்ல செயல்களை உருவாக்கும் உறைவிடமாக மாறும் மேன்மை பெறும். இதனால் அன்றாடம் விதைக்கப்படும் நற்செய்தி தியானம் மிகவும் அவசியமாகும், வாழ்வில் நன்மை பயக்கும் கனியாகும்.
நற்செய்தி தியானம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் அன்பையும் அரவணைப்பையும் உணரச் செய்யும் வல்லமை கொண்டது . இதனால் வாழ்வில் நெருக்கடி வேழைகளில் உற்ற துணையாக உடனிருந்து தேற்றும் அருமருந்தாகும். உள்ளம் கலக்கம் கொண்ட நேரங்களில் தெளிவான சிந்தனைகளை உருவாக்கும். வாழ்வின் தேடல்களில் வழிகாட்டும் ஒளியைத் தரும் கலங்கரை விளக்காகும்.
நற்செய்தி ஓர் வீரிய வாழ் ஆகும் , மேலும் , இருபுறமும் கருக்கு கொண்ட வாழ் ஆகும் . அஃது அறிவிப் பவரையும் கேட்போரையும் வழிபடுத்தும் அருள் வாக்கு ஆகும் என்று விவிலியம் விளம்புகிறது. சோதனை வேழைகளில் சக்தி தரும் , துவண்ட நேரங்களில் நம்பிக்கையூட்டும், புரியாத சூழல்களில் சீரிய சிந்தனை தருவது நற்செய்தி தியானம் ஆகும். இதனால் நற்செய்தி தியானம் செய்வோம் பலன் பெறுவோம்.
ஜெபமாலை ஓர் அருள்மாலை. அனுதினமும் ஜெபிப்பதால் கிடைக்கும் கோடி அற்புதம் . புனிதர்களின் வரலாற்றில் ஜெபமாலை ஜெபித்ததினால் பெற்ற அருள்வரங்களை நாம் கண்கூடாக காணலாம் . அன்னை கன்னி மரி நமக்காக நம்மைக் காக்க, அருள் வரங்களை நாம் ஜெபித்து கண்டிட, அருளிச்செய்த தவ மாலை.
பாத்திமா நகரில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி தந்த அன்னை, அவர்கள் வழியாக, உலகிற்கு நற்சேதி சொன் னார். லூர்து நகரில் பெர்னதிர்கு தோன்றிய அன்னை , ஜெபமலையின் உன் னதத்தை, உலகம் அறிந்திடச் செய்தார் . இன்னும் டொமினிக் சாவியோ, டொன்போஸ்கோ போன்ற புனிதர்கள் ஜெபமலையின் பக்கிதியைப் போற்றி வளர்த்தார்கள். புனித பியோ , தினமும் , பல மணி நேரங்கள் ஜெபமாலை செய்வதில் செலவிட்டார். மேலும் , இன்றும் , உலகமெங்கும் கோடிகணக்கான கத் தோலிக்க கிறிஸ்தவர்கள் ஜெபமாலை செய்து பயன் பெறுகிறார்கள் .
ஜெபமாலை அலைகயை வெல்லும் சக்தி தரக் கூடிய ஜெபம் என்றும் , புனிதர்கள் கருதுகிறார்கள் . இன்றைய அவசர உலகில் ஜெபமாலை ஜெபிக்க நேரம் இல்லை என்று பலர் எண்ணலாம். ஆனால் , ஜெபமாலையை எந்நிலையிலும் , எங்கும் சொல்லலாம் . ஜெபமாலையை மனதிலும் சொல்லலாம் , சத்தமாகவும் சொல்லலாம் . தனியாகவும், குழுவாகவும், குடும்பமாகவும் சொல்லலாம் . ஜெபமாலை ஓர் அரிய பெரிய மேலும் எளிய ஜெபம் ஆகும்.
ஜெபமாலை விவிலியத்தின் வழி வந்த அடிப்படையான விசுவாச ஜெபம் ஆகும். இதன் தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது தேவ அருள் பிரசன்னம் நம்மை சூழ்ந்து கொள்வதைக் காணலாம். இன்னும் சில நேரங்களில், ஜெபமாலை நம்மை பக்திப் பரவசமாக் கும் வல்லமை கொண்டதாய் தோன்றுகிறது. மற்றும் பல வேழைகளில் இச்ஜெபம் , நம்மை பாவ சூழ்நிலைகளில் இருந்து காக்கும் வல்லமை கொண்ட ஜெபமாகத் திகழுகிறது. இன்னும் பல நேரங்களில் நம்மை ஆபத்திலிருந்து, நோயிலிருந்தும் , பசாசின் சூழ்ச்சிகளிலிருந்தும் காப்பாற்றும் அரும் மருந்தாக விளங்குகின்றது.
தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, தானாக இதயத்தில் அமைதி உண்டாகக் காணலாம். சந்தோஷ தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறை மகிமை , இறை அன்பு , இறை மகிழ்வு , நம்மைத் தழுவிக்கொள்ள உணரலாம். இந்த தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, திருக்குடும்பத்தை முழுமையாகத் தரிசிக்கலாம். அவர்களில் , திரித்துவ தேவனையும் , அவர்தம் அன்பையும் உணரலாம் . துக்கத் தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறைவனின் , அன்பையும், தியாகத்தையும் , பாடுகளையும், மீட்பையும் கண்டு உணரலாம் . இந்த தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது , தேவ நம்பிக்கை , வல்லமை , வாழ்வில் நம்பிக்கை , துன்பத்தில் ஆதரவு , துயரத்தில் தேறுதல் , நோயில் சுகம் , தனிமையில் துணை , தோல்வியில் உயர்வு , வேதனையில் சாதனை , போன்ற வரங்கள் கனியக் காணலாம் . இதனால் இறை நம்பிக்கை மேல்லோங்குகிறது , அவநம்பிக்கை விலகிச் செல்லுகிறது . மகிமை நிறை தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறை மகிமையும் அவர்தம் மறுருபமும் நம்மை மகிழச்செய்கிறது. ஒளியின் தேவ இரகசியங்களைத் தியானிக்கும்போது, இறைவனின் அருட்ப்பணியும், அவர்தம் தோழமையும் , நற்செய்தியும், நம்மை மகிழச் செய்கிறது .
இப்படியாக தேவ இரகசியங்களைத் தியானித்து ஜெபமாலை செய்வது சாலச்சிறந்த ஜெபமாகும் . எப்போதும் ஜெபமாலை ஜெபிப்போம். நம் அன்னை மரியின் பரிந்துரையால் வாழ்வில் மகிழ்வாய் வாழ்வோம் .