11/25/12

திவ்விய நன்மை

ஆண்டின் பொதுக்காலம்
17ஆம் வாரம்

திவ்விய நன்மை
"அப்போது சேசுநாதர் அப்பங்களை எடுத்து, நன்றியறிந்த தோத்திரஞ் சொன்னபின்: பந்தியமர்ந்தவர்களுக்குப் பரிமாறினார்" (அரு. 6: 11)
இன்றைய சுவிசே'த்தில் அப்பங்களைப் பலுகச் செய்த அதே தெய்வீக வல்லமைதான் தேவ நற்கருணைத் தேவதிரவிய அனுமானத்தில் அப்பத்தையும் இரசத்தையம் கிறிஸ்துநாதருடைய சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றுகிறது. இ;;ப்புதுமையானது ஆண்டவர் ஏற்படுத்தப் போகிற தேவ நற்கருணைக்கு ஒரு முன்னடையாளமாகவும் மக்களை அதற்குத்; தயாரிப்பதற்காகவுமே நிகழ்த்தப்பட்டது.
நமதாண்டவர் ஏற்படுத்திய ஏழு தேவதிரவிய அனுமானங்களும் தம்மிலே புனிதமாயிருப்பதுடன், அவைகளைப் பெறுவோருக்குப் புனிதத்தின் சாதனங்களாகவும் இருக்கின்றன. அவைகளுள் ஒன்றே ஒன்றுதான் மகாப் பரிசுத்த தேவதிரவிய அனுமானம் என அழைக்கப்படுகிறது. மற்றெல்லாம் தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டிருந்து, அதை வழங்கும் வாய்க்காலாகவும் இருந்தாலும், இம்மகாப் பெரிய தேவதிரவிய அனுமானம் வரப்பிரசாதங்களுக்குச் சொந்தக்காரரையே தன்னுள் கொண்டு, சகல வரப்பிரசாதங்களின் வற்றாத ஊறணியாக இருக்கிறது. அதுதான் தேவ நற்கருணை.

தேவ வரப்பிரசாதம் என்றால் என்ன? 
நாம் மோட்சம் அடைவதற்காக கிறிஸ்தநாதருடைய பேறுபலன்களை முன்னிட்டு சர்வேசுரன் நமக்கு இலவசமாகக் கொடுக்கும் சுபாவத்தக்கு மேற்பட்ட வரமே தேவ வரப்பிரசாதம் ஆகும்
தேவதிரவிய அனுமானம் ஆவதென்ன?
நமது ஆத்துமங்களை அர்ச்சிப்பதற்குத் தேவ வரப்பிரசாதத்தைக் கொடுக்கும்படியாக சேசு கிறிஸ்தநாதரால் ஏற்படுத்தப்பட்ட வெளியரங்கமான அடையாளமே தேவதிரவிய அனுமானம்.
திவ்விய நற்கருணை ஆவதென்ன? 
அப்ப இரச குணங்களுக்குள் சேசு கிறிஸ்துநாதருடைய திருச் சரீரமும் இரத்தமும் ஆத்துமமும் தேவசுபாவமும் அடங்கியுள்ள தேவதிரவிய அனுமானம்.
திவ்விய நன்மை வாங்கக் கடமை உண்டா? 
ஆம், புத்தி விபரம் அறிந்த சகல கிறிஸ்தவர்களுக்கும் கடமை உண்டு. ஏனெனில்:
1. நமதாண்டவர் கற்பித்திருக்கிறார்: "மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், நிங்கள் மனுமகனுடைய மாமிசத்தைப் புசியாமல் இருந்தால், உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்கமாட்டீர்கள்" (அரு. 6: 54).
2. திருச்சபையின் கட்டளை: "பாஸ்கு காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்ளுகிறது".
திவ்விய நன்மை வாங்குவதினால் ஆத்தமத்துக்கு உண்டாகும் நன்மைகள் எவை?
1. சேசுநாதருடன் ஜீவிக்கும்படி நம்மை அவருடன் ஒன்றிக்கிறது "என் மாமிசத்தைப் புசிக்கிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன்" (அரு. 6: 57).
2. நம்மை தேவ ஜீவியத்திற்குப் பங்காளி ஆக்குகிறது. அதனால் அவருடைய தேவ சுபாவத்தை ஒருவிதமாய் அடைகிறோம் "நான் பிதாவினால் ஜீவிக்கிறது போல, என்னைப் புசிக்கிறவனும் என்னால் ஜீவிப்பான்" (அரு. 6: 58).
3. தேவ இ';டப்பிரசாதத்தையும் தேவ சிநேகத்தையும் காப்பாற்றி, அவைகளின் உருக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
4. அற்பப் பாவங்களை மன்னிக்கும், பாவத்துக்கு உண்டான அநித்திய தண்டனையைக் குறைக்கும்.
5. ஆசாபாசம் முதலிய துர்இச்சைகளைத் தணிக்கும். ஏனெனில், சேசுநாதர் நமது மாமிசத்தைத் தமதாகப் பாவித்து ஓர் வகையிலே தம்முடைய மாமிசத்துக்கு ஒத்ததாக்கி அதிலே தகாத பற்றுதல்கள் வராதபடிப் பாதுகாக்கிறார். புனித அல்போன்ஸ் லிகோரியார் சொல்லுகிறபடி: "ஒருவனுடைய இருதயத்தில் துர்க்குணம் எவ்வளவு வேரூன்றியிருந்தாலும், அடிக்கடி பக்தியோடு திவ்விய நன்மை வாங்குவதினால் ஒழிந்து போகாத துர்க்குணம் ஒன்றுமில்லை".
6. தந்திர சோதனைகளை ஜெயித்து, சாவான பாவத்தில் விழாதபடி பாதகாத்து, நமது கடமைகளை சரிவர அனுசரிப்பதற்கு விசே' உதவி பண்ணும்.
7. நற்செயல்களைச் செய்யத் திடனளித்து, கடைசிவரை இ';டப்பிரசாதத்தில் நிலைத்துநிற்க உதவி புரிந்து, ஞான இன்பத்தையும் சந்தோ'த்தையும் பெறுவிக்கும்.
8. நம்முடைய துன்பங்களில் ஆறுதல் கொடுத்து, நமக்கு நேரிடும் வாதைகளைப் பொறுமையோடும் சந்தோ'த்தோடும் ஏற்றுக்கொள்ளச் செய்யும்.
9. கடைசியாய் உலக முடிவில் நாம் மகிமையாய் உயிர்த்தெழுந்திருக்க உரிமை அளிக்கும் "என் மாமிசத்தைப் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவியம் உண்டாகும், கடைசிநாளில் நான் அவனை உயிர்ப்பிப்பேன்" (அரு. 6: 55).
திவ்விய நன்மை வாங்குவதினால் சரீரத்துக்கு உண்டாகும் நன்மைகள் எவை?
சேசு நாதருடைய திருச்சரீரத்தைத் தொட்டதினால் வயாதியஸ்தர்கள் குணமடைந்தார்கள் (லூக். 8: 44). நற்கருணையின் குணங்களுக்குள்ளே சேசுநாதர் மறைந்திருக்கிறபடியால் அவருடைய சரீரத்துக்கு அதுபோன்ற சக்திகள் குறைந்துபோகவில்லை. சாகக்கிடந்த அநேகர் நன்மை வாங்கியவுடன் முழு சுகம் அடைந்துள்ளனர்.
தினந்தோறும் திவ்விய நன்மை வாங்கலாமா? 
ஆம், ஆத்தும குருவின் ஆலோசனையைக் கெட்டு, சாவான பாவமில்லாத கிறிஸ்தவர்கள் யாவரும் சுத்த கருத்துடன் தினந்தோறும் நன்மை வாங்கலாம்.
சுத்த கருத்து ஆவதென்ன? வாடிக்கையாக அல்லாமல், முகத்தாட்சணியம் முதலிய லௌகீகக் கருத்துக்களை அகற்றி, சர்வேசுரனுக்குப் பிரியப்படுவதற்காகவும் அவருக்கு நம் நேசத்தைக் காண்பித்து, அவருடைய சித்தத்துக்கு அமைந்து நடப்பதற்காகவும், நமது ஆத்துமத்தை இரட்சிக்கும் ஆசையோடும், சேசுநாதரோடு ஒன்றிப்பை அதிகரிக்கும் ஆசையோடும், அந்தப் பரம மருந்தினால் நமது துர்க்குணங்களைத் திருத்திக் கொள்வதற்காகவும் திவ்விய நன்மை வாங்குவது சுத்த கருத்தாகும்.
திவ்விய நன்மை உட்கொள்ளுவதற்கு ஆயத்தம்: 
ஆத்தும அயத்தம். சரீர ஆயத்தம் ஆகிய இரண்டு வகை ஆயத்தம் உண்டு.
ஆத்தும ஆயத்தம் ஆவதென்ன? ஆத்துமம் சாவான பாவம் இல்லாமல், பரிசுத்தமாய் இருக்கத்தக்தாக நல்ல பாவசங்கீர்த்தனம் செய்திருக்க வேண்டியது.
சாவான பாவத்தோடு இரப்பவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யமுடியாவிட்டால் திவ்விய நன்மை வாங்கவே கூடாது. இதனாலே எவ்வித துன்பம் நேரிடுவதாய் இருந்தபோதிலும், நன்மை வாங்கி தேவ துரோகம் கட்டிக்கொள்வதைவிட சாகத் தயாராய் இருக்கவேண்டும். இன்னும் தன் துர்வழக்கங்களைத் திரத்திக்கொள்ள முழு மனதுள்ளவனாய் இருக்கவேண்டும்.
சாவான பாவத்தோடு நன்மை வாங்குகிறவர்கள் தேவ துரோகம் என்னும் கனமான பாவம் கட்டிக்கொள்வதோடு, "தன் சாபத்தைத் தானே உட்கொள்கிறான்" (1கொரி. 11: 29) என்கிறார் புனித சின்னப்பர்.
உத்தம விதமாய் நன்மை உட்கொள்வது எப்படி?
கூடின மாத்திரம் பூசை கண்டு, தன் சக்திக்கும் அந்தஸ்துக்கும் அலுவல்களுக்கும் ஏற்றார்ப்போல் வெகு கவனத்துடன் ஆயத்தம் செய்தபின், நாம் யாரை வாங்கப் போகிறோமென்று சற்று நேரம் பக்தியோடும் கவனத்தோடும் தியானிக்க வேண்டும். தேவ மாதாவின் விசுவாசம், நம்பிக்கை, தேவ சிநேகம், தாழச்சியுடன், ஆசை, மனஸ்தாபம் ஆகிய முயற்சிகளை நமது மனதில் எழுப்பவேண்டும்.
சரீர ஆயத்தம் ஆவதென்ன? 
நன்மை வாங்குவதற்குமுன் மூன்று மணி நேரம் போஜனப் பதார்த்தம் போன்ற திடப்பொரள் ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறது.
ஒரு மணி நேரம் போதையில்லாப் பானங்கள் (தேனீர், காப்பி, பால், குளிர் பானம் போன்றவை) அருந்தாமல் இருக்கிறது.
தண்ணீர் எப்பொழுதும் குடிக்கலாம். நோயாளிகள். முரண அவஸ்தையல் இருக்கிறவர்கள் உபவாசம் அநுசரியாமல் நன்மை வாங்கலாம்.
திவ்விய நன்மை வாங்குகிறதெப்படி? 
அங்கும் இங்கும் பராக்குப் பார்க்காமல், அடக்க ஒடுக்கத்துடன் கைகுவித்து, திவ்விய நற்கருணைக் கிராதியை அணுகி, பக்தியோடு முழங்காலிலிருந்து, தலையைப் பின்னாலே சற்று சாய்த்து, வாயை சற்று திறந்து, நாக்கானது கீழ் உதட்டில் படும்படியாக நீட்டவேண்டும். நற்கருணை வாங்கியபின் பல்லாலே மெல்லாமல் அதை மெதுவாய் விழுங்கவேண்டியது. நன்மை வாய்க்குள் ஒட்டிக்கொண்டால், கையினால் தொடாமல், நாக்கினால் உள்ளெ போகும்படிச் செய்யவேண்டும்.
திவ்விய நன்மை உட்கொண்டபின்: எழுந்திருந்து கை குவித்துக்கொண்டு, அங்குமிங்கும் பாராமல், மகா ஒடக்க வணக்கத்துடன் இடத்துக்குப்போய், நாம் யாரை உட்கொண்டிருக்கிறோமென்று சற்றுநேரம் பக்தியோடு தியானித்து, விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம், ஆராதனை முதலிய முயற்சிகளைச் செய்து, நன்றி செலுத்தி, வேண்டிக்கொள்ள வேண்டும்.
சேசுநாதரிடம் நாம் எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும்? 
நமக்கு வேண்டிய ஆறுதல், உதவி, நற்குணம், உத்தமதனம் முதலியவைகளைக் கேட்டு அடைகிறதற்கு அதுவே ஏற்ற சமயம்.
நம்முடைய இரட்சணியத்துக்கும். நம்மைச் சார்ந்தவர்களுடைய இரட்சணியத்துக்கும் அவசியமான வரப்பிரசாதங்களையும், இன்னும் முக்கியமாய்க் கடைசிவரையில் நிலைமையாய் இருக்க அவசியமான வரத்தையும் கேட்க வேண்டும்.
திருச்சபையின் தேவைகளுக்காகவும், அது தன் விரோதிகளிடம் ஜெயங்கொள்ளவும், மரித்த விசுவாசிகள் இளைப்பாற்றி அடையவும். பாவிகளும் திருச்சபைக்குப் புறம்பாய் இருக்கிறவர்களும் மனந்திரும்புவதற்காகவும் மன்றாட வேண்டும்.
ஆசை நன்மை ஆவதென்ன? 
தேவ நற்கருணை வாங்கமுடியாத சமயத்தில் சேசு கிறிஸ்துநாதர் தன்னிடத்தில் எழுந்தருளி வரும்படியாக விரம்பி வேண்டிக்கொள்வதுதான. ஆசை நனமை. அது நமது ஆத்துமத்தை சேசுநாதரோடு ஒன்றிப்பதாகிய ஞானக் கனியை விளைவிக்கிறபடியால் ஆசை நன்மையை ஞான நன்மை என்றும் அழைக்கிறோம்.
தேவ நற்கருணை சந்திப்பு: நம் உறவினர்கள், சிநேகிதர்களின் வீட்டக்குப் போய் அவர்களை வாழ்த்தி. ஆவர்களோடு பெசி உரையாடுகிறது எப்படியோ, அப்படியே கோவிலுக்குப் போய் தேவ நற்கருணைப் பெட்டியிலிருக்கிற சேசுநாதரை சந்தித்து வணங்கி, அவரோடு பெசுவதும் அவர் பேசுவதைக் கேட்பதும் தேவ நற்கருணை சந்திப்பு ஆகும்.
முடிவு: 
தினந்தோறும் பூசை கண்டு நன்மை வாங்கி. அடிக்கடி தேவ நற்கருணை சந்தித்து, நறகருணை ஆண்டவருக்கு தேவாராதனை செலுத்தவேண்டும்.
ஏனெனில், பரிசுத்த கன்னிமரியம்மாளிடத்தில் நின்று பிறந்து, நமக்காகச் சிலுவையில் அறையுண்டு, மரித்து உயிர்த்துப் பரலோகத்துக்கு ஆரோகணமாகி, பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரன்தானே தேவ நற்கருணையில் எழுந்தருளி இருக்கிறபடியால், அதில் அவருடைய திருச் சரீரமும் இரத்தமும் ஆத்துமமும் தேவசுபாவமும் மெய்யாகவே அடங்கியிருக்கிறது. ஆகையால் தேவ நற்கருணைக்குத் தேவ ஆராதனை செலுத்தவேண்டும்.
எப்படி என்றால்,
1. தேவ நற்கருணைக்கு முன்பாக இருக்கும் பொழுது பேச்சு, சிரிப்பு, விளையாட்டு முதலிய அவசங்கைகளை விலக்கி, பக்தியோடும் தாழ்ச்சியோடும் சேசுநாதருக்கு வணக்கம் செலுத்துவதினால் நற்கருணைக்குத் தேவ ஆராதனை செலுத்தவேண்டும்.
2. பாத்திமாவில் மாதா கற்றுக் கொடுத்த சம்மனசு ஜெபங்களை நெற்றி தரையில் படும்படியாகத் தெண்டனிட்டு சொல்லி நற்கருணைக்குத் தேவ ஆராதனை செலுத்தவேண்டும்.
3. நற்கருணை ஆசீர்வாதத்திலும், திவ்விய நற்கருணை பவனியிலும் பங்கு பெற்று பகிரங்கமாக நற்கருணைக்குத் தேவ ஆராதனை செலுத்தவேண்டும்.
பாத்திமா சம்மனசு ஜெபங்கள்:
1. என் தேவனே. உம்மை விசுவசிக்கிறென், உம்மை ஆராதிக்கிறேன். உம்மை நம்புகிறேன, உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதியாதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்க்காகவும், உம்மை நேசியாதவர்க்காகவும் உமது மன்னிப்பைக் கேட்கிறேன்.
2. மகா பரிசுத்த திரித்துவமே, பிதாவே, சுதனே, பரிசுத்த ஆவியே. உம்மை மிகவும் ஆராதிக்கிறேன். உலகமெங்கிலுமுள்ள தேவ நற்கருணைப் பேழைகளிலிருக்கும் சேசு கிறிஸ்துநாதருடைய விலைமதிக்கப்படாத திரச்சரீரத்தையும் இரத்தத்தையும் ஆத்துமத்தையும் தெய்வீகத்தையும், அவருக்கு எதிராகச் செய்யப்படும் நிந்தை, துரோகம். ஆலட்சியத்தக்குப் பரிகாரமாக, உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். சேசுவின் திரு இருதயத்தினுடையவும் மரியாயின் மாசற்ற இருதயத்தினுடையவும் அளவற்ற பேறுபலன்களைப் பார்த்து நிர்ப்பாக்கியப் பாவிகளை மனந்திருப்பும்படி மன்றாடுகிறேன். ஆமென்.
பணி. பங்கிராஸ் எம். இரா

No comments:

Post a Comment