12/20/13

முந்த முந்த இறைவனை தேடினால் மற்ற எல்லாம் தானாக நல்லதாய் அமையும் என்பது இறை வாக்கு: . கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

கிறிஸ்துமஸ் திருநாள் தர்ம காரியங்களின் பொன்னாள் . உலகமெங்கினும் மக்கள் புண்ணிய கிரியைகள் புரியும் திருநாள் . செல்வந்தர்கள் ஏழைகளைத்  தேடிச் சென்று பணிபுரியும் திருநாள் கிறிஸ்துமஸ் திருநாள் என்றால் அஃது மிகையாகது .

ஆனால், நல்ல பணிகள் செய்யும் பொழுது, இறைச் சிந்தையோடு , இறையன்போடு , இறைவனுக்காக , செய்ய  நாம் அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் , இறையன்பு இல்லாத பணி , நிலையான பணியாக மாறிட வாய்ப்புக்கள் மிகவும் அரிது . மாறாக செய்கின்ற பணியே தனி மானிட பெருமையாக மாறி , தனி மனித அன்மாவை தலைக் கர்வத்தில் ஆழ்த்தி  விடும் அபாயம் நேரிடிலாம். இதனால் , சேவை செய்யும் யாவரும் இறைவனுடன் , இறைவனுக்காக , இறைசிந்தையுடன் சேவையைச் செய்ய அழைக்கப்   படுகின்றோம் . இதனால் , செய்யும் சேவைகள் , ஏழைகளில் இறைவனைக்  காணச் செய்யும்.


இன்றைய உலகில் மானிடப் பணி  செய்ய அநேகம் பேர் முன் வருகின்றார்கள் . அஃது ஓர் வரப்ரசாதம். அனால் இறைபணி செய்பவர்களும் , இறை பயம்  கொண்டவர்களும்  அரிதாகி வருகின்றார்கள் . இறைவன் இருக்கின்றார் என்பதை நம்புவர்கள் குறைந்து கொண்டிருக்கும் காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருகின்றோம் . இறை பயம் இல்லாமையினால் குடும்பங்களில் , சமுதாயத்தில் , வாழ்வில் குழப்பங்கள்  ஏராளம். 

இத்தகைய சூழலில் நம் மனதில் இறைவனுக்கு முதலிடம் தருவது மிகவும் அவசியம் ஆகும் . இன்றைய சூழலில் தனி மனித இறையுணர்வு நிறைந்த வாழ்வு  மிகவும் அவசியம் ஆகும் . இறை பயம் நிறைந்த வாழ்வு ஓர் அன்பு வாழ்வு , ஓர் அற்புத வாழ்வு , ஓர் பயனுள்ள  வாழ்வு , ஓர் அர்ப்பண வாழ்வு , ஓர், தர்ம வாழ்வு  ஆகும் . இத்தகைய வாழ்வு உலக இருளில் ஓர் ஒளியாய் அமையும் , ஓர் புண்ணியமாக மாறும் வாய்ப்புக் கொண்டதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று உலகிற்கு மிகவும் இன்றியமையாத அவசியம்  இறை பயம் கொண்ட மனிதர்கள் . இறையுணர்வு  கொண்ட சேவை செய்யும் மனிதர்கள் . கிறிஸ்துமஸ் காலம் ஓர் புண்ணிய காலம் , இறை பிரசன்னத்தை  உலகிற்கு எடுத்துச் சொல்ல ஏற்ற காலம் . நம் தர்ம சேவைகளுடன் நம் குடுபங்களில் இறை பயம் நிலவிட விதை விதைப்போம் . நம் வீட்டு சிறுவர்களில் இறைபயம் நிலவிட இறைவுணர்வு நிலவிட பாடுபடுவோம் . அஃது நம் வீட்டிற்கு , திருச்சபைக்கு , சமுதாயதிற்கு , நம் செய்யும் புண்ணிய சேவை ஆகும் .

முந்த முந்த இறைவனை தேடினால் மற்ற எல்லாம் தானாக நல்லதாய் அமையும் என்பது இறை வாக்கு . இதனால் இந்த கிறிஸ்துமஸ் திருநாளின்  திருபயணத்தில் இறைவனைத் தேடிச் சென்று சேவை செய்வதையும் , இறை  பிரசன்னத்திற்கு முதலிடம் தருவதையும் முதன்மையான நோக்கமாக கொள்வோமாக.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment