12/20/13

முந்த முந்த இறைவனை தேடினால் மற்ற எல்லாம் தானாக நல்லதாய் அமையும் என்பது இறை வாக்கு: . கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

கிறிஸ்துமஸ் திருநாள் தர்ம காரியங்களின் பொன்னாள் . உலகமெங்கினும் மக்கள் புண்ணிய கிரியைகள் புரியும் திருநாள் . செல்வந்தர்கள் ஏழைகளைத்  தேடிச் சென்று பணிபுரியும் திருநாள் கிறிஸ்துமஸ் திருநாள் என்றால் அஃது மிகையாகது .

ஆனால், நல்ல பணிகள் செய்யும் பொழுது, இறைச் சிந்தையோடு , இறையன்போடு , இறைவனுக்காக , செய்ய  நாம் அழைக்கப்படுகின்றோம். ஏனெனில் , இறையன்பு இல்லாத பணி , நிலையான பணியாக மாறிட வாய்ப்புக்கள் மிகவும் அரிது . மாறாக செய்கின்ற பணியே தனி மானிட பெருமையாக மாறி , தனி மனித அன்மாவை தலைக் கர்வத்தில் ஆழ்த்தி  விடும் அபாயம் நேரிடிலாம். இதனால் , சேவை செய்யும் யாவரும் இறைவனுடன் , இறைவனுக்காக , இறைசிந்தையுடன் சேவையைச் செய்ய அழைக்கப்   படுகின்றோம் . இதனால் , செய்யும் சேவைகள் , ஏழைகளில் இறைவனைக்  காணச் செய்யும்.


இன்றைய உலகில் மானிடப் பணி  செய்ய அநேகம் பேர் முன் வருகின்றார்கள் . அஃது ஓர் வரப்ரசாதம். அனால் இறைபணி செய்பவர்களும் , இறை பயம்  கொண்டவர்களும்  அரிதாகி வருகின்றார்கள் . இறைவன் இருக்கின்றார் என்பதை நம்புவர்கள் குறைந்து கொண்டிருக்கும் காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருகின்றோம் . இறை பயம் இல்லாமையினால் குடும்பங்களில் , சமுதாயத்தில் , வாழ்வில் குழப்பங்கள்  ஏராளம். 

இத்தகைய சூழலில் நம் மனதில் இறைவனுக்கு முதலிடம் தருவது மிகவும் அவசியம் ஆகும் . இன்றைய சூழலில் தனி மனித இறையுணர்வு நிறைந்த வாழ்வு  மிகவும் அவசியம் ஆகும் . இறை பயம் நிறைந்த வாழ்வு ஓர் அன்பு வாழ்வு , ஓர் அற்புத வாழ்வு , ஓர் பயனுள்ள  வாழ்வு , ஓர் அர்ப்பண வாழ்வு , ஓர், தர்ம வாழ்வு  ஆகும் . இத்தகைய வாழ்வு உலக இருளில் ஓர் ஒளியாய் அமையும் , ஓர் புண்ணியமாக மாறும் வாய்ப்புக் கொண்டதாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று உலகிற்கு மிகவும் இன்றியமையாத அவசியம்  இறை பயம் கொண்ட மனிதர்கள் . இறையுணர்வு  கொண்ட சேவை செய்யும் மனிதர்கள் . கிறிஸ்துமஸ் காலம் ஓர் புண்ணிய காலம் , இறை பிரசன்னத்தை  உலகிற்கு எடுத்துச் சொல்ல ஏற்ற காலம் . நம் தர்ம சேவைகளுடன் நம் குடுபங்களில் இறை பயம் நிலவிட விதை விதைப்போம் . நம் வீட்டு சிறுவர்களில் இறைபயம் நிலவிட இறைவுணர்வு நிலவிட பாடுபடுவோம் . அஃது நம் வீட்டிற்கு , திருச்சபைக்கு , சமுதாயதிற்கு , நம் செய்யும் புண்ணிய சேவை ஆகும் .

முந்த முந்த இறைவனை தேடினால் மற்ற எல்லாம் தானாக நல்லதாய் அமையும் என்பது இறை வாக்கு . இதனால் இந்த கிறிஸ்துமஸ் திருநாளின்  திருபயணத்தில் இறைவனைத் தேடிச் சென்று சேவை செய்வதையும் , இறை  பிரசன்னத்திற்கு முதலிடம் தருவதையும் முதன்மையான நோக்கமாக கொள்வோமாக.

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

12/18/13

கைத்தட்டுங்கள் மேளம் கொட்டுங்கள்

கைத்தட்டுங்கள் மேளம் கொட்டுங்கள்
களிப்புடனே ஆடிப்பாடி மகிழ்ந்திடுங்கள்
யேசு நம்மில்  இருக்கின்றார்
ஜீவனாக இருக்கின்றார்
ஆவியாக இருக்கின்றார்
ஆனந்தத்தில் ஆடுங்கள்

வார்த்தையாக வருகின்றார்
ஜீவ  வார்த்தையாக வருகின்றார்
ஆவியாலே ஆட்கொண்டு - நம்மை
அணைத்து நடப்பார் பயமில்லை
யேசு நம்மில்  இருக்கின்றார்
ஜீவனாக இருக்கின்றார்
ஆவியாக இருக்கின்றார்
ஆனந்தத்தில் ஆடுங்கள்


ஆவியாக வருகின்றார் - ஜீவ
ஆவியாக வருகின்றார்- தந்தை
அன்பினாலே ஆட்கொண்டு - நம்மை
அணைத்து நடப்பார் பயமில்லை
யேசு நம்மில்  இருக்கின்றார்
ஜீவனாக இருக்கின்றார்
ஆவியாக இருக்கின்றார்
ஆனந்தத்தில் ஆடுங்கள்

மனிதனாக வருகின்றார் - ஒரு
குழந்தையாக பிறந்துள்ளார்
நம்முடனே  கடவுளாக - நம்மை
நடத்தி  வாழ்வார் பயமில்லை
யேசு நம்மில்  இருக்கின்றார்
ஜீவனாக இருக்கின்றார்
ஆவியாக இருக்கின்றார்
ஆனந்தத்தில் ஆடுங்கள்






12/17/13

கிறிஸ்துமஸ் பயணம் : கண்மணியே கனிமலரே !

கிறிஸ்துமஸ் பயணம் : கண்மணியே கனிமலரே !

கண்மணியே கனிமலரே !
விண்மதியே கண்ணுரங்காய் !
ஆரோ ஆரோ ஆரோ ஆரோ !
ஆரோ ஆரிரரோ  ஆரோ ஆரிரரோ  

வானவர்கள் வாழ்த்துரைத்து 
வழிவழியாய் வணங்கிடினும் 
வையமதில் படைப்பெல்லாம் 
வாழ்த்துக்களால் புகழ் பாட 
வந்தாய் என்னைத் தேடி 
தந்தாய் உன்னை எனக்காய் 
தந்தாய் உந்தன் பாதம் 
தந்தேன் என்னை உனக்காய் 

என்ன தவம் நான் செய்தேன் 
என் இதயம் நீ வரவே 
என்ன தவம் நான் செய்தேன் 
என்னை தேடி நீ வரவே 
வந்தாய் என்னைத் தேடி 
தந்தாய் உன்னை எனக்காய் 
தந்தாய் உந்தன் பாதம் 
தந்தேன் என்னை உனக்காய் 


12/16/13

ஒரு சொல்லால் உலகம் செய்தாய் இறைவா

ஒரு சொல்லால் உலகம் செய்தாய் இறைவா
கருவறையில் என்னை அழைத்தாய் தந்தாய் - உன்
குருதியினால் என்னை மீட்க - கன்னி
மரியின்  பாலன் பிறந்தார்
பாடுகிறேன் திருப் பலாகா
தேடுகிறேன்  உன் அருட்க்காட்சி
நாடுகிறேன்  உன் தஞ்சம் பாலகா
தேடுகிறேன்  உன்  மாட்சி


உன் இன்முக  புன்னகையால் - என்
உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டாய்
பிள்ளை மழலை  அருட்புன்னகையால்- என்விழி
தளுபட்ச் செய்தாய் திருப்பாலககா
  பாடுகிறேன் திருப் பலாகா
தேடுகிறேன்  உன் அருட்க்காட்சி
நாடுகிறேன்  உன் தஞ்சம் பாலகா
தேடுகிறேன்  உன்  மாட்சி









கிறிஸ்துமஸ் திருப்பயணம்

கிறிஸ்துமஸ் திருப்பயணம்
கிறிஸ்துவ வாழ்வின் அருட்ப் பயணம்
திரித்துவ தேவனின் அன்பு மணம்
பாரில்  எங்கும் தங்கும்  மணம்
கிறிஸ்துமஸ் திருக்காட்சி

திருட்சபை பிறப்பின் கிறிஸ்துமஸ்
அருட்சபை மகிழும் அன்புத் திருநாள்
மார்கழி திங்கள் நட்சத்திரம்
பாரில் உதித்த  அதிசய நன்னாள்
 கிறிஸ்துமஸ் திருக்காட்சி

வெட்டவெளி கொட்டும் பனியில்
கொட்ட விளித்து   காவல்
படப்பகலென பால் நிலாவில்
பாடும் ஆயர் கூட்டமதில் - உதித்த
கிறிஸ்துமஸ் திருக்காட்சி

மாட்டுத் துறை  படுத்துறங்க
பாட்டுத் பறை வானவர் முழங்க - தேவ
ஏட்டின் மறை வாக்கின் - முறை
பாட்டின் திருச்சுதன்  அருட்காட்சி
 கிறிஸ்துமஸ் திருக்காட்சி

அன்னை  கன்னி  மரியின்  திருப்பயணம்
தந்தை  சூசையின் தவப் பயணம்
பாலன்  இயேசு அருங்காட்சி
உலகம்  காணும் உன்னத மாட்சி
 கிறிஸ்துமஸ் திருக்காட்சி





12/14/13