கிறிஸ்துமஸ் திருநாள் மீட்பின் திருநாள் ஆகும் : நம்மோடு கடவுள் !
- "26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."
அன்பின் இறைவன், அனாதி தேவன், அன்புத் தந்தை நம்மை மீட்ட நாள் கிறிஸ்துமஸ் நன்னாள் ஆகும். இறைவன் மனிதன் மீது கொண்ட அன்பு அளவிட்டு கூற இயலாது. இதனை நாம் இறைவனின் படைப்பில் காணலாம். இறவன் தாம் படைத்த உலகம் , உயிரனங்கள் யாவையும் தன வார்த்தையால் உருவாக்கினர். இதனால் படைப்பு யாவும் இறைமகன் சாயலை தாங்கியுள்ளன. ஆனால் மனிதனைப் படைக்கும் போது தந்தை தன வார்த்தையால், சித்தத்தால் , தன் சாயலால், தன் ஆவியால் உருவாக்கினர் . இதனை நாம் அதியகமத்தில் முதலாம் அதிகாரத்தில் காணலாம். இதனால் மனிதன் உடல், பொருள், அன்மா என்ற மூன்று கூறுகள் கொண்டவனகாகப் படைக்கப் பட்டான். இதனால் மனிதன் திருத்துவ தேவனின் சாயலைப் பெற்றவனான். மனிதன் புனித சாயல் கொண்டிருந்தான். மனிதன் இறைவனின் பிரசன்த்தையும், பராமரிப்பையும், அன்பையும் பெற்றவனாய் இருந்தான். அதியகமத்தில் இறைவனின் படைப்பை தியானிக்கும்போது, இறைவன் எல்லாப் படைப்புக்கு பின் மனிதனைப் படைத்த விதம், அவர் ஓர் தந்தையாக உலகை மனிதனின் வரவிற்கு ஏற்பாடு செய்வது போல் தோன்றுகின்றது. எத்துணை அன்பு கொண்ட நம் தந்தை , நம்மை தம் சாயலில் உருவாக்கிய தந்தை, நம்மை தனியாக விடவில்லை, நம்மோடு வந்து தங்கிட்டார் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில். இதனால் நாம் இம்மானுவேல் நம்மோடு கடவுள் என்று போற்றுகின்றோம்.
பாடல்கள்
https://www.youtube.com/watch?v=Li1J8eQsreA
https://www.youtube.com/watch?v=Li1J8eQsreA
No comments:
Post a Comment