"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."
கிறிஸ்தமஸ் பண்டிகை மாபெரும், உன்னத அன்பின் தினம். பரலோக தந்தை தன்னைத் தந்த தினம். வானமும், பூமியும், அண்ட சரசரங்கள் அனைத்தும் படைத்தது, காத்து வருகின்ற தேவன், நம் மீது கொண்ட அன்பினால் தன்னை மானிடனாக மாற்றிய அன்பின் தினம், மானிடம் காணாத, வரலாறு காணாத அன்பின் திருநாள்.
சாவே அறியாத இறைவன் தன்னை, நம்மீது கொண்ட அன்பினால் தன்னை அழியும் மானிடனாக உருவாக்கிய நன்னாள். எங்கும் நிறைந்த இறைவன் தன்னை தாமே வரலாற்றுக்குள் உட்படுத்திய உன்னத திருநாள். எல்லாம் வல்ல தந்தை தன்னை தரணிக்காக வலிமைஅற்ற மானிட குழந்தையாக உருவாக்கிய தவத்திருநாள். எல்லாம் அறிந்த இறைவன் தன்னை அறியாக் குழந்தையாய் உருவாக்கிய அன்பின் திருநாள் கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.
இதனால் கிறிஸ்துமஸ் இறைவனின் அன்புத் திருநாள் ஆகும்.
No comments:
Post a Comment