11/29/13

மலேசியா தமிழ் கிறிஸ்துவ நண்பர்களே வணக்கம் !

மலேசியா தமிழ் கிறிஸ்துவ நண்பர்களே வணக்கம் !

 அநேகம் பேர் என் ப்ளாக் பார்க்க வந்திர்கள். உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள் ! நான் பல வருடங்களுக்கு முன்பு கொந்தானில் பணிபுரிந்தேன் . என்னை அறிந்தவர்கள் பலர் இருப்பீர்கள். கொந்தானில் செயின்ட் தாமஸ் கதோலிக்க ஆலயம் மூன்று வருடங்களாக சென்றுள்ளேன். நண்பர்களே உங்களை இந்த ஊடகம் மூலம் சந்திப்பதில் கிறிஸ்துவுக்குள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் . தயவு செய்து பளோகில் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள் . அஃது எனது இந்த பணி செய்ய ஊக்கமாக அமையும் . அத்துடன் உங்களின் கருத்துகளும் பிறரை சென்றடையும். நன்றி !

கிறிஸ்துமஸ் திருநாள் மீட்பின் திருநாள் ஆகும்: நம்மோடு கடவுள் !


கிறிஸ்துமஸ் திருநாள்  மீட்பின் திருநாள் ஆகும் : நம்மோடு  கடவுள் ! 

அதியகமம் 1/26-28
    "26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

    27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

    28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."

அன்பின் இறைவன், அனாதி தேவன், அன்புத் தந்தை நம்மை மீட்ட நாள் கிறிஸ்துமஸ் நன்னாள் ஆகும். இறைவன் மனிதன் மீது கொண்ட அன்பு அளவிட்டு கூற இயலாது. இதனை நாம் இறைவனின் படைப்பில் காணலாம். இறவன் தாம் படைத்த உலகம் , உயிரனங்கள் யாவையும் தன வார்த்தையால் உருவாக்கினர். இதனால் படைப்பு யாவும் இறைமகன் சாயலை தாங்கியுள்ளன. ஆனால் மனிதனைப் படைக்கும் போது தந்தை தன வார்த்தையால், சித்தத்தால் , தன் சாயலால், தன் ஆவியால் உருவாக்கினர் . இதனை நாம் அதியகமத்தில் முதலாம் அதிகாரத்தில் காணலாம். இதனால் மனிதன் உடல், பொருள், அன்மா என்ற மூன்று கூறுகள் கொண்டவனகாகப் படைக்கப் பட்டான். இதனால் மனிதன் திருத்துவ தேவனின் சாயலைப் பெற்றவனான். மனிதன் புனித சாயல் கொண்டிருந்தான். மனிதன் இறைவனின் பிரசன்த்தையும், பராமரிப்பையும், அன்பையும் பெற்றவனாய் இருந்தான். அதியகமத்தில் இறைவனின் படைப்பை தியானிக்கும்போது, இறைவன் எல்லாப் படைப்புக்கு பின் மனிதனைப் படைத்த விதம், அவர் ஓர் தந்தையாக உலகை மனிதனின் வரவிற்கு ஏற்பாடு செய்வது போல் தோன்றுகின்றது. எத்துணை அன்பு கொண்ட நம் தந்தை , நம்மை  தம் சாயலில் உருவாக்கிய தந்தை, நம்மை தனியாக விடவில்லை, நம்மோடு வந்து தங்கிட்டார் இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில். இதனால் நாம் இம்மானுவேல் நம்மோடு கடவுள் என்று போற்றுகின்றோம்.

பாடல்கள்
https://www.youtube.com/watch?v=Li1J8eQsreA

https://www.youtube.com/watch?v=Li1J8eQsreA


நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். John 3/16 ( I have found a way to type in Tamil and I am excited)


"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

கிறிஸ்தமஸ் பண்டிகை  மாபெரும், உன்னத அன்பின் தினம். பரலோக தந்தை தன்னைத் தந்த தினம். வானமும், பூமியும், அண்ட சரசரங்கள் அனைத்தும் படைத்தது, காத்து வருகின்ற தேவன், நம்  மீது கொண்ட அன்பினால் தன்னை மானிடனாக மாற்றிய அன்பின் தினம், மானிடம் காணாத, வரலாறு காணாத அன்பின் திருநாள்.

சாவே அறியாத இறைவன் தன்னை, நம்மீது கொண்ட அன்பினால் தன்னை அழியும் மானிடனாக உருவாக்கிய நன்னாள். எங்கும் நிறைந்த இறைவன் தன்னை தாமே வரலாற்றுக்குள் உட்படுத்திய உன்னத திருநாள். எல்லாம் வல்ல  தந்தை தன்னை தரணிக்காக வலிமைஅற்ற  மானிட குழந்தையாக உருவாக்கிய தவத்திருநாள். எல்லாம் அறிந்த இறைவன் தன்னை அறியாக்  குழந்தையாய் உருவாக்கிய அன்பின் திருநாள்  கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.

இதனால் கிறிஸ்துமஸ் இறைவனின் அன்புத் திருநாள் ஆகும்.