அதிகாலை ஜெபித்தல் :இயற்கையோடு ஜெபித்தல் இன்பம் பயக்கும் ஓர் அற்புத ஜெபம் ஆகும்:உண்மையான அனுபவம்
காலாண்டுத் தேர்வு விடுமுறை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க , இயற்கை அன்னையின் தென்றலும் , கருமேக கூட்டங்களும் ஒன்றி குலாவிடும் இனிய வசந்த காலம் மலர்கிறது . கூவும் குயிலும் , அகவும் மயிலும் ,பாடும் வானம் பாடிகளும், தேன்சிட்டுக் குருவிகளும், கூடு கட்டி குஞ்சி பொறிக்கும் பறவைகளும், நாடு விட்டு நாடு செல்லும் பறவை கூட்டங்களும் வானத்தை அழகு செய்யும் உல்லாச காலம். இது வசந்த காலம். தென்மேற்கு பருவக்காற்றும், வடமேற்கு பருவக்காற்றும், ஓடும் ஆறும் , கொட்டும் அருவிகளும், தாவிக்குதிக்கும் கடலின் அருவிகளும் உற்சாகமாய் தோன்றும் ஓர் இன்ப காலம் . பூமியை வருடிக் கொடுக்கும் ஓர் வனப்பான வசந்த காலம். இந்துக்களின் சுப்ரபாதமும் , பஜனைகளும் , விழாக்களும் அணிவகுத்து சுற்றுபுறங்களை சுறுசுறுப்பாக மாற்றும் விழாக்காலம். அதிகாலையும் , அந்திவேளையும் அனுதினமும் ஐந்து வேளையும் பள்ளிவாசலின் தொழுகை வீசும் காற்றுடன் கலந்து கைகோர்க்கும் காலம். அதிகாலை ஆலய மணியோசையும் அனுதின ஜெபங்களும் அனுதின திருப்பலியும் , அன்னை மரியின் திருவிழாக்களும், அணிவகுத்து ஆண்டவனின் அருளை அவனிக்கு அள்ளித்தரும் காலம். எங்கும் எதிலும் எல்லா மதமும் அவர்தம் நம்பிக்கையை உலகுக்கு உண றச் செய்யும் காலம்.
அன்டன் அதிகாலையில் கண்விளித்து கடைமைகள் செய்ய தயார் ஆகின்றார் . அங்கே அப்போது வழக்கம்போல் கபிரியேல் தூதுவரும் , மைக்கேல் தூதுவரும் தங்கள் உலகச் சுற்றுபயணத்திற்காக வலம் வந்து கொண்டிருந்தார்கள்( இந்த வரி மட்டும் விசுவாச கற்பனை ) . மக்கள் ஜெபங்களை ஏற்று இறைவனிடம் இருந்து பதிலும், பலனும், நன்மையையும் பெற்றுத் தருவது இப்புனித தூதுவர்களின் அன்றாடப் பணியாகும். அதிகாலையில் அன்டன் வீட்டின் முகப்பில் இருக்கும் மாதா சுருபம் ஜொலிக்க , அதிகாலை தென்றல் இதமாக வீச அன்டன் தன் அனுதின ஜெபத்திற்கு ஆயத்தமானார் . உள்ள வீட்டில் வீற்றிருக்கும் இருதய ஆண்டவரின் படத்தின் முன்பாக நின்று அவர் தன் மன ஜெபத்தை தொடங்கி , பின் தலைவாயிலைத் திறந்து அன்னை மரி பாலனோடு காட்ச்சி தரும் வேளாங்கண்ணி மாத சுருபத்தின் முன்னால் நின்று மனதுருகச் ஜெபிகின்றார். தேவ தூதர்கள் அன்டனின் பக்தியால் ஈர்க்கப்பட்டு அவருக்குத் துணையாக பக்கம் வந்து நின்று ஆவலோடு அவரை பின்தொடர்ந்தனர்.
அதன் பிறகு அன்டன் மலர்த் தொட்டிகளுக்கு . தண்ணீர் உற்றிக் கொண்டே ஜெபமாலை ஜெபிக்கலானர். இன்று அவர் சந்தோஷ தேவரகசியங்களைத் தியானிக்கத் தொடங்கினார். அன்டன் தன் அதிகாலை வேலைகளோடு ஜெபம் செய்து விட்டு , பின் அனுதினமும் அதிகாலை திருப்பலிக்குச் சென்று தினமும் நன்மை வாங்குவது வழக்கம் உடைய ஓர் பக்திமான் . இஃது இவருக்கு கடந்த இருபது வருடபழக்கம். ஜெபம் செய்வதும் தன் குடும்பத் தேவைகளுக்காக மன்றாடுவதும் இவருடைய முழு நேர சேவையாக இவர் மாற்றிக்கொண்டார் என்றால் அஃது மிகையாகது . இவர் ஓர் ஜெபிக்கும் கணவர் , ஜெபிக்கும் தந்தை , ஜெபிக்கும் ஓர் விசுவாசி . மாதாவின் மீதும் , திருஇருதய ஆண்டவர் மீதும் , திருப்பலி திவ்ய நற்கருணை மீதும் மிகுந்த பக்தியுடைய ஓர் பக்திமான்.
அவர் முதல் தேவ ரகசியமான கபிரியேல் தூதன் மங்கள வார்த்தை சொன்னதை தியானிக்கலானார். அப்போது அவர் கபிரியேல் தூதன் மற்றும் அன்னை மரியாவையும் தேவ ரகசியத்தின் படி தியனிக் கலானர். அந்தக்கணம் அவரது உள்ளத்தில் ஓர் அருமையான எண்ணம் தோன்றியது . அதாவது அன்னை மரியும் தேவதூதனும் நம்மோடு சேர்ந்து ஜெபிக்கிறார்கள் என்ற புண்ணிய எண்ணம். அந்த எண்ணம் மனதிற்கு அறுதல் தந்தது . ஆம் தேவதூதர்கள், அன்னை மரியும் அவரோடு சேர்ந்து ஜெபிக்கலானர்கள்.
இரண்டாவது தேவரகசியத்தை ஜெபித்தார் . அப்போது அவர் கன்னி மரியையும் எலிசபெத் வீட்டாரையும் தியானித்தார் , இப்போது அன்னை மரி , தேவ தூதர்களோடு எலிசபெத்தும் , சக்கரியாவும் , யோவான் அருளப்பரும் சேர்ந்து ஜெபிக் கலானர்கள் அன்டனின் ஜெபமாலை தியானத்தில்.
மூன்றாவது தேவரகசியத்ததை மனதுருகத் தியானித்தார் . அப்போது அவரோடு பெத்லேகம் இடையர்கள் , கால்நடைகள் , விண்மீன்கள் , வானதூதர்கள் , மூன்று அரசர்கள், தந்தை சூசையப்பரும் சேர்ந்து கொண்டு ஜெபித்தார்கள் . இப்போது அன்டனின் தியானத்தில் வீடு நிறைய புண்ணிய புனிதர்கள் நிறைந்து காணப்பட்டனர் .
இப்போது அங்கே காதல் பறவைகள் இரைக்காக பாடின . அன்டன் அவைகளுக்கு இறை கொடுத்துகொண்டே , அன்றாடம் வீடு தேடி வரும் புறாக்களுக்கு இறை தூவினார் . பின் நான்காவது தேவரகசியத்தை தியானித்தார் . அப்போது திருக்குடும்பத்தோடும், தேவ தூதர்களோடும் , மற்றும் மேற்கூறிய புனிதர்களோடும் , கோயிலின் அன்னாளும் , சீமோனும் சேர்ந்து ஜெபிக்கலானர்கள் அன்டனின் தியானத்தில் .
ஐந்தாவது தேவரகசியத்தை தியனிக்கலானர் அன்டன் . தூரத்தில் கூவுகின்ற குயில் இனிமையாய் இசைக்க , இதமான கலைத் தென்றல் தேகத்தை வருட முல்லையும் ரோஜாவும் மணம் பரப்பி பூத்துக் குலுங்கி கண்ணுக்கும் வாசனைக்கும் இனிய விருந்து படைக்க , அன்டன் இறைவனுக்கு நன்றியோடு ஜெபிக்கலானர் . அப்போது அவர் தியானத்தில் அன்னை மரி , தந்தை சூசை , தேவ தூதர்கள், புனிதர்கள் , மற்றும் புதிதாய் யெருசலம் பயணிகள் , கோயில் குருக்கள் , புண்ணியவான்கள், சிறுவன் யேசுவும் ஜெபத்தில் சேர்ந்து கொண்டார்கள்.
இஃது ஓர் வல்லைமையான அனுபவமாக அமைந்தது . அன்டன் துணிவு கொண்டார் , நம்பிக்கை கொண்டார் , இறைவன் தன் வேண்டுதல் கேட்பார் என்று விசுவாசத்துடன் தன் வேண்டுதல்களை இறைவன் பாதத்தில் வைத்தார்.மேலும் எல்லாரின் ஜெபங்களுடன் அன்டன் தன் ஜெபத்தை இணைத்து இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு , அதிகாலை திருபலிக்குச் செல்ல அயத்தமாகச் சுருசுருப்படைந்தார். இந்த தியான அனுபவம் உன்னதமாய், உண்மையாய் , உக்கம் அளிப்பதாய் அன்டனுக்கு அமைந்தது . நெருக்கமான சூழ்நிலையில் மனதில் அமைதி, சந்தோசம், சமாதானம், தரும் தியானமாய் அமைந்தது. இவ்வேளையில் அன்டனும் அவர் மனைவியும் குடும்ப வேண்டுதல்களுக்காக உபவாச மேற்கொண்டிந்ருதர்கள். அன்டன் தன் மனைவியிடம் அவரது தியான அனுபவங்களை பகிர்ந்து மகிழ்ந்தார் . இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தி , இறைவன் அவர்கள் வேண்டுதலை சீக்கிரம் கேட்பார் என்று அமைதி கொண்டனர் .