முதற் காண்டம் | 61 |
|
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
முதற் காண்டம் | 61 |
|
முதலாவது
|
நாட்டுப் படலம்
|
1 |
புள்ளு லாம்விசும் பிடைதொறும் பொரும்படை பொருவ வெள்ளு லாமழை வெண்கொடி யுருக்கொடு விளங்கித் தெள்ளு லாந்திரை திளைப்பவுண் டெழுந்துயர் பரந்து வள்ளு லாங்கரு மதகரி இனமெனத் தோன்ற. |
புள் உலாம் விசும்பு இடை தொறும் பொரும் படை பொருவ வெள் உலாம் மழை வெண் கொடி உருக் கொடு விளங்கி, தெள் உலாம் திரை திளைப்ப உண்டு, எழுந்து உயர் பரந்து வள் உலாம் கரு மத கரி இனம் எனத் தோன்ற. |
|
இரண்டாவது
|
நகரப் படலம்
|
1 |
மெய்வ்வழி மறைநூ னீங்கி வியனுல கினிதென் றின்னா வவ்வழி வுற்ற தென்ன வதிந்தெமை யளித்துக் காக்கச் செவ்வழி யுளத்த தூயோன் றெரிந்தமா நகரி தென்றா லிவ்வழி பின்ன ருண்டோ வெருசலே நகரை வாழ்த்த. |
மெய் வழி மறை நூல் நீங்கி, வியன் உலகு இனிது என்று, இன்னா வவ்வு அழிவு உற்றது என்ன, வதந்து எமை அளித்துக் காக்கச் செவ் வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் இவ் வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த? |