வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
5/5/15
5/3/15
தூய ஆவியே வாரும்!
தூய ஆவியே வாரும் !
துணையாக வாரும் -உம்
தூய கரங்களால் எமை தழுவி
தயவாய் காத்திடும்
துள்ளும் அலையின் சக்தியே
எளியார் எமை பலப்படுத்த வாரும்
பாயும் நதியின் பலமே-எம்
பயம் நீக்கி காத்திட வாரும்
எரியும் நெருப்பு தணலின் உருவே
இருளின் பிடியை தகர்ப்பவரே!
அருளின் கொடைகளால் எம்மை
நிரப்ப வாரும்!
துணையாக வாரும் -உம்
தூய கரங்களால் எமை தழுவி
தயவாய் காத்திடும்
துள்ளும் அலையின் சக்தியே
எளியார் எமை பலப்படுத்த வாரும்
பாயும் நதியின் பலமே-எம்
பயம் நீக்கி காத்திட வாரும்
எரியும் நெருப்பு தணலின் உருவே
இருளின் பிடியை தகர்ப்பவரே!
அருளின் கொடைகளால் எம்மை
நிரப்ப வாரும்!
Subscribe to:
Posts (Atom)