வானமும் பூமியும்
வானமும் பூமியும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்;
தந்தை சுதன் தூய ஆவியுமாய்
நம்மில் உறவுடன் வாழ்கின்றார்!
பரிசுத்த ஆவியின் வல்லமையால்
திருமகன் மரியிடம் மனுவானார்;
மனிதரைப் புனிதராய் ஆக்கிடவே
புனிதராம் கடவுள் மனிதரானார்!
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்,
கல்லறை ஒன்றில் அடக்கப்பட்டார்;
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்,
மரணத்தின் மீது வெற்றி கொண்டார்!
பரலோகம் வாழும் தந்தையிடம்
அரியணை கொண்டு இருக்கின்றார்;
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய்த் திரும்பவும் வந்திடுவார்!
பரிசுத்த ஆவியை நம்புகிறோம்,
பாரினில் அவர் துணை வேண்டுகிறாம்;
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்று
பரிகார வாழ்வில் இணைந்திடுவோம்!
திருச்சபை உரைப்பதை நம்புகிறோம்;
புனிதர்கள் உறவை நம்புகிறோம்;
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை
விசுவாசப் பொருளாய் நம்புகிறோம்!
தூய நல் ஆவியாம் இறைவனையும்
தூயவராக்கும் ஒப்புரவையும்
புனிதராம் இயேசுவின் ஆட்சியையும்
புனித நல் வாழ்விற்காய் ஏற்கின்றோம்.
- ஆமென்!
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
8/14/11
8/13/11
செபம்
தாய்மை கொண்ட பெண்கள் செபம்:
கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது, வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும். நானோ பாவத்தில் பிறந்து எல்லா உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும். மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
பெற்றோரின் செபம்:
மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய் இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.
ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும் இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள் இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் அரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -ஆமென்.
பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்:
என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.
காவல் தூதரை நோக்கி செபம்:
எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே! தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -ஆமென்.
அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும் ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும் களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும், தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு:
எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும். நமது ஆலயத்தை யாதாமொருமன் அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே, சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும். என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன். உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் ! அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை. மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே ! தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக் கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும். உமது தோத்திரத்துக்கும் என் இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றிக் கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும், என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே நடக்கவும் தயைபுரியும். நான் என் புத்தி நினைவைத் திடமாய் ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப் பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும் மகா அருவருட்னே ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் புச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல் காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.
தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். - ஆமென்.
கணவன் மனைவியரின் செபம்:
கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் புனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன். பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும். தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்புள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும். பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாகவும் செய்தருளும். -ஆமென்.
மனைவியின் செபம்:
புனித இறைஅன்னையே! நீர் சூசையப்பரோடு வாழ்ந்தபோது அவரது மனங்கோணாமல் நடந்துகொண்டீரே. ஏவையினுடைய மாசு தங்காத நீர் இப்படி நடக்க, நான் கணவருக்கு எதிராக என் சொந்த விருப்பு, வெறுப்புகளை நிலைநாட்டி வாழ முயல்வது சரியல்ல என்பதை உணருகிறேன். ஆகையால் நான் இராக்கேலைப் போல என் கணவரின் அன்புக்குரியவளாயும், இரபெக்காளைப்போல பிரமாணிக்கம் உள்ளவளாகவும் இருக்க உமது திருக்குமாரனை மன்றாடும். மேலும் என் மாமனார் மாமியார் முதலான பெரியோர்களாலேயும் உறவினர் பலராலும் ஒருவேளை நேரிடக்கூடிய தொந்தரவுகளைப் பொறுமையோடு சகிக்கவும், பிள்ளைகளாலே வரக்கூடிய சஞ்சலங்களைப் பொறுக்கவும் தேவையான வரங்களை எனக்குப் பெற்றுத்தந்தருளும். -ஆமென்.
முதியோர்களின் செபம்:
ஆண்டவரே ! என் காலங்களெல்லாம் எவ்வகையாய் போனதென்று அறியேன். இப்போது தான் பிறந்து விளையாடி குடும்பக்காரியங்களை செய்துகொண்டிருந்ததாக என் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தச் சொற்ப காலத்தில் எத்தனை யோவிசை என் வாக்கினாலும் செயல்களினாலும் வீண் ஆசையினாலும் உமக்குத் துரோகம் செய்தேன். அப்போது எனக்கு கல்லறை கிட்டி வருகிறது. பயங்கரமான நடுத்தீர்வையிலே என்ன சொல்லப்போகிறேன் என்று அஞ்சுகிறேன். நான் செய்த பாவங்களினாலே என் புத்தியும் உள்ளமும் செய்த பாவங்களினாலே என் புத்தியும் உள்ளமும் அழுக்கடைந்து போயிருப்பதால் கடைசிகாரியங்களைத் தெளிவாய்ச் சரியாய் யோசித்து தியானிக்க முதலாய் அறியேன். ஆகையால் தேவரீர் என்பேரில் கிருபை கூர்ந்து நான் சாகுமுன் என் பாவங்களை நினைத்த அழுது பிரலாபித்து அவைகளுக்குப் பரிகாரமாக தவம் புரிந்து நல்ல மரணமடைய அனுக்கிரகம் செய்தருள உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.
நோயாளிகள் சொல்லத்தகும் செபம்:
ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில் தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.
மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும் சிலுவையில்
மரித்தார் என்று விசுவசிக்கிறேன். இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.
ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவி செய்யும்.
அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா, நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும்.
என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன். அவைகளை வெறுக்கிறேன். அவைகள் எல்லாவற்றிற்காகவும் மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும், நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும் கொண்டுள்ள என் இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன் என்கிறதினாலே மனஸ்தாபமாயிருக்கிறேன்.
ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன். தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.
ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல் ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.
என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும்.
நல்ல மரணத்துக்கு ஆயத்தம்:
நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாய் இருக்கிரபடியதாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல நினைவு இருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில் பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த, மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.
கொடிய நோய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்:
ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் !
ஓ வல்லபக் கடவுளே ! ஓ பரம தேவனே ! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர்பேரிலும் தயையாயிரும்.
என் இயேசுவே ! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். என்றென்றும் வாழும் தந்தையே ! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். -ஆமென்.

8/12/11
இன்றைய வசனம்
இன்றைய வசனம்
Verse of the day: I யோவான் 3:18
என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
இன்றைய வேதவாசிப்பு பகுதி
I இராஜாக்கள் 7 எரேமியா 33 மாற்கு 7

Subscribe to:
Posts (Atom)