3/13/15

பத்தாம் தலம்: இயேசுவின் ஆடைகள் உரியபடுதல்

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவின் ஆடைகள் உரியபடுதல்:

way of the cross - station 10 - United Tamil Catholics

ஆயக்கலைகளில்/ இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்/. அதுதான்/ அவமானங்களை சகித்துக்கொள்ளும் கலை/. அவமானங்களை சகிக்கக் கற்றுக்கொண்டால்/, உலகமும் பிரச்சினைகளும்/ ஒரு பொருட்டே இல்லை/. முள்முடி/, கசையடி/, வசைமொழி/ இவை எல்லாவற்றையும்விட/, இயேசுவுக்கு அதிக வேதனையை உருவாக்கியது/, அவரது ஆடைகளை பரித்தபோதுதான்/. ஆடை இல்லாமல்/ ஆளுக்கு மதிப்பில்லை/. ஆளில்லாமல்/ ஆடைக்கும் சிறப்பில்லை/. எனவேதான்/ ஆள்பாதி/ ஆடைபாதி/ என்கிறார்கள்/. கொலையைவிடக் கொடியது/ அவமானம்/. அடுத்தவருக்கு அவமானம் நேர்ந்தால்/, தனது மானம் காக்கப்படும் என்று நினைப்பது/ ஒருவித மனநோய்/. இந்த மனநோயாளிகள்/ அடுத்தவர்களை அவமானப்படுத்தி/ தமக்கு பெருமை சேர்க்க முயல்கிறார்கள்/. இயேசுவின் ஆடையை அவிழ்த்து/ அவமானப்படுத்தியது/ அன்றைய அதிகாரக் கூட்டம்/. இன்று/ ஆடையை கட்டி/ அவமானப்படுத்துகிறார்கள்/. வாழ் முளைத்த வதந்திகளை/ கால் முளைத்த கற்பனைகளால் கட்டி/ நேர்மையாளர்களின் மீது அணிகிறார்கள்/. கருவண்டு அமர்வதால்/ வெள்ளை சுவருக்கு சேதாரம் இல்லையே/. எச்சில் ஈரத்தில்லா/ தங்கம் துருபிடிக்கப்போகிறது ? 

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென் 

திருப்பி அறைதல் குற்றம் என்றார், திரும்பி கன்னம் காட்டச்சொன்னார்
அமைதி பரவவே, வேடர் அறைந்துவிட்டாரே
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

ஒன்பதாம் தலம்: இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகிறார் குப்புற விழுகிறார்:

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசு மூன்றாம் முறை தரையில் விழுகிறார் குப்புற விழுகிறார்:

way of the cross - station 9 - United Tamil Catholics


நதி/ நடந்து போகின்றது/. குறுக்கே நிற்கும் மணல் மேடுகளையும்/, தடுக்கவரும் நாணல் நாற்றுகளையும்/, இடித்துக்கொண்டு/ இடம் பெயர்கிறது/. காலில் குத்திய முள்ளுக்காக/ பயணத்தை ஒத்திப்போடுபவர்/ இலக்கு இடத்தை அடைய இயலாது/. நீரோட்டமும், போராட்டமும்/ தொய்வில்லாமல் தொடரவேண்டும்/. முயற்சிகள் இல்லாவிட்டால்/, முயல்களும் ஆமையாகிவிடும்/. தடைகள் இல்லாவிட்டால்/ வாழ்வே விரக்தியாகிவிடும்/. விதை விழாமல்/ மரம் கண் விழிப்பதில்லை/. லட்ச்சியவாதி/ தடைகளைக்கண்டு சோர்ந்துவிடக்கூடாது/, என்பதை இயம்பிடத்தான்/ இயேசு/ விழுந்த இடத்திலிருந்து/ எழுந்து நடக்கிறார்/. மனிதர்களே/ உங்களை வீழ்த்தும் ஆயுதங்களை/, அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்/. குடிபழக்கம்/, போதைப்பொருள்/, சூதாட்டம்/, ஊதாரித்தனம்/, வெட்டிப்பேச்சு/, புறங்கூறல்/ இவையெல்லாம்/ உங்களை வீழ்த்திட கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கின்றன/. ஆனால்/ விழுந்தவர்களை எழுப்பிவிட/, முயர்ச்சியும்/ தன்னம்பிக்கையும் மட்டுமே உண்டு.

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

அகிலத்திற்கு ஆடைத் தந்தார், அவமானம் அணிந்துகொண்டார்
துகிலைப் பரித்திட்டார், ஈனர் துயரம் கொடுத்திட்டார்.
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

எட்டாாம் தலம்: இயேசுவுக்கு எருசலேம் பெண்கள் தந்த ஆறுதல்:

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசுவுக்கு எருசலேம் பெண்கள் தந்த ஆறுதல்:

way of the cross - station 8 - United Tamil Catholics


ஆறுதல்/, இது வார்த்தைக்கு வசப்படாத இதயத்தின் முனகல்/. எருசலேம் நகரத்து பெண்களின் உள்ளத்தில் உதயமாகி/, விழி வெள்ளத்தில் நீச்சல் அடிக்கிற கருணையின் மொழியை/, காயப்பட்ட இயேசு கனிவோடு வாசிக்கிறார்/. அழுகைக்கு ஆறுதல் கூறுவதுண்டு/. ஆனால் இங்கு/, அழுகையே ஆருதலாகின்றது/. கரிசனைக்கொண்ட ஆறுதல்/ எந்த வடிவில் வந்தாலும்/, மனம் அதனை மோப்பம் பிடித்து விடுகிறது/. ஆறுதல்/ துன்ப தடுப்பு அல்ல/, துயரக் கடலின் துணை நிற்கிற துடுப்பு/. எருசலேம் பெண்களால்/ அழ மட்டுமே முடிந்தது/. அழுகை ஆர்ப்பாட்டமாகப் புறப்பட்டால்/ பெண்மை பெருமை பெரும்/. பெண்ணே/ நீ / இனி கண்ணில் நீர் எழுதிப் பார்க்காதே/. அடிமைத்தனம் நீச்சல் கற்றுக்கொள்ளும்.. நீ/ விழிகளில் நெருப்பெழுதக் கற்றுக்கொள். 

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

விதை விழுந்தால் விருட்ச்சமாகும், மழை விழுந்தால் செழுமையாகும்
வீழ்ச்சி இல்லையே, வீரன் சோர்வதில்லையே
இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 


http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

இரண்டாவது துக்க தேவரகசியம் : இயேசு கற்தூணில் கட்டி அடிக்கப் பட்டதை தியானிப்போமாக !

இரண்டாவது துக்க தேவரகசியம் : இயேசு கற்தூணில் கட்டி அடிக்கப்  பட்டதை  தியானிப்போமாக !

ஏளனம், ஏகாந்தம் , புறக்கணிப்பு , ஒருபுறம் . தனிமை , தவிப்பு , தள்ளாட்டம் , துயரம் , துன்பம்  மறுபுறம் . சிப்பாய்களின்  சலசலப்பு , பரிசேயர் , சதுசேயர்  மற்றும்  பொய்  சான்று  கூறியோரின்  வஞ்சகம்  ஒருபுறம் . துயருற்று  யேசுவுக்காக  அழுவோரின்  அங்கலாய்ப்பு  மறுபுறம் . எங்கும்  குளப்பம், எங்கும்  பீதி  நிறைந்திருக்க, சிப்பாய்கள்  இயேசுவை  தரதரவென  இழுத்து , அவரது  ஆடைகளை  பிடுங்கி  எறிந்தனர் , நிர்வாண  கோலம்  கொண்ட யேசுவுக்கு  உடல் வாதையுடன்  தாங்கவொண்ணா  அவமானம்  சூழ்ந்து  கொண்டது . கடிய  மனதுடன்  கொடிய  சேவகர்கள்  கடமை  செய்ய , இயேசுவை  கல்தூணில்  கட்டி  அடிக்கலானர். சாட்டை  அடிகள்  பட்டுத்  வலியால்  துடித்தார்  இயேசு . சாட்டையின்  ஒவ்வொரு   அடியிலும்  உடலின்  சதைகள்  கிளிந்தன , இரத்தம்  பீறிட்டு  தெறித்தது, இயேசு  மனித  சுபாவ  வலிகளுக்கு  தன்னை  முழுமையாய்  கையளித்தார்.

 இந்த தேவரகசியத்தை  தியானிக்கும்  போது , மனித  துன்பங்கள் , துயரங்கள், வேதனைகள் , வலிகள், உதவியற்ற  நிலைமைகள் , சூழ்நிலைகள் , கைவிடப்பட்ட  தருணங்கள்  மற்றும்  மானிட உடல், உள்ள , ஆன்ம  வாதைகளை  இயேசு  தன்மீது  ஏற்றுக்கொண்டார் . சாட்டையடிகளின்  வேதனைகளை  அன்பின்  பரிசாக  மாற்றிக்கொண்டார் , இதனால்  அன்பினால்  விளையும்   வேதனைகளை  ஏற்றுக்கொள்ள  நமக்கு  முன்மாதிரிகையனார். நாம்  அன்பு  செய்யும்  நம்  குடும்பத்தில் சகிப்பு , மன்னிப்பு , தியாகம் , இதனால்  விளையும்  வேதைகளை  எசுவுக்காக  ஏற்றுக்கொள்ள  இறைமகன்  தன்னை  கசையடிகளுக்கு கையளித்தார். 

3/7/15

கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை தியானிப்போமாக !

கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை  தியானிப்போமாக !

ஏகாந்தம் , தனிமை , ஏக்கம் , தாகம் , பயம் , படபடப்பு , என  எண்ணற்ற  மன  தா க் கங்களுக்கு  தள்ளப்பட்டார்  இயேசு . மனித உருவில் இறைமகன் இயேசு  மானிட  மன  சுமைகளை  சுமந்து  நின்றார். காட்டிக் கொடுக்கும் நண்பன் , கைவிட்டு  ஓடிப்போகும்   நண்பர்கள் , நடப்பதை  அறியாது  தனிமையில்  விட்டுவிட்டு  அயர்ந்து  தூங்கும்  சீடர்கள். இவர்கள்  மத்தியில்,  நடக்கவிருக்கும்  சிலுவைப்  பாடுகள்  நினைவுகள்  சித்திரவதை செய்ய, இறைமகன் , மனிதனாகவும் , இறைவனாகவும்  வேதனைகளை  சந்தித்தார். முழுமையான  மனிதனாய்    மனம் , உள்ளம் , உடல் , ஆன்மாவில்  வேதனை  கொண்டு  ஆறுதலற்ற  நிலைமைக்கு  தள்ளப்பட்டார்  இறைமகன் . மனிதனின் வேதனைகளை  முழுமையாய்  சந்தித்து , தன்  இறைத்தன்மையை  முழுமனதுடன்  தியாகம்  செய்து , வேதனைகளில்  இறைவனைத்  தேட  சித்தமானார்  இறைமகன் .

தனிமையின்  கோர தாண்டவத்தில்  இறைதுணையை  நாடினார் . தனியாக  ஜெபித்தார் . இறைவனை  மானிட  நிலையில்  வேண்டினார் . பலனாக  ஜெபத்தின்போது  எல்லா  மானிடருக்கும்  தரப்படும்  இறை  துணையைப்  பெற்றார் . துணிந்து  எழுந்து  சிலுவைப்  பாடுகளுக்கு  தன்னை  அர்பணித்தார்  இறைமகன் .

இந்த துக்க  தேவரகசியம்  ஓர்  விடுதலைப்  பயணமாகும் . இந்த  முதல்  துக்க தேவரகசியமான , கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை  தியானிக்கும்  போது , இதனை  உணர்ந்து  ஜெபிக்கும்  போது , இறைமகனின்  தியாகம் , இறை  சித்தத்தை  ஏற்று , ஓர் மனிதனாக  இறைவனுக்கு  தன்னை  கீழ்ப்படித்திய  விந்தையான  பரம  அன்பு  நமக்கு  ஓர் எடுத்துகாட்டாக  அமைகின்றது . இதனால்  நம்  மனதில்  இருக்கும்  ஆணவம்  அகன்று  தாழ்ச்சி  என்ற  புண்ணியம்  தோன்ற  வழி  பிறக்கும் . இறைமகனே  அன்பிற்காக  தனை  தாழ்த்தும்  போது , நாம்  எம்மார்த்திரம். நம்  வாழ்வில்   நாம்  நேசிப்பவர்கள், நமை  நேசிக்காதவர்கள், இவர்களை  மன்னித்து    தொடர்ந்து  இறைவனுக்காக  அன்பு  செய்ய  இறைமகனின்  வழி நடந்து  ஜெபித்து  வாழ  துணிவு  பிறக்கும்.

மற்றும்  தொடர்ந்து  இந்த முதல் தேவ  இரகசியத்தை  தியானிக்கும்  போது , கெத்சமனி  தோட்டம்  நம்  நினைவில்  சஞ்சரிக்கின்றது. இஃது  நம்மை, முதல்  ஆதம் , ஏவாள்  வாழ்ந்த சிங்கார  வனத்தை  நினைவு படுத்துகின்றது. ஆதம்  ஏவாளின்   சிங்காரத்  தோட்டத்தில் , கீழ்ப்படியாமையால்  செய்த, முதல் பாவமான  ஜென்மப்   பாவம் போக்கவந்த  செம்மரி, இப்போது   கெத்சமணியில்   ரத்த வியர்வை வியர்க்கலானர். சிங்காரமாக  வாழப்  படைக்கப்  பட்ட  மனிதன்  சிங்காரத்  தோட்டத்தை  பாவத்தால்  துறந்தான். அந்தப்  பாவத்திற்குப்  பரிகாரமாக  இறைமகன் கேத்சமனியில்  துயரப்படலானார் . சிங்கார  வனத்தில்  மானிட  கீழ்படியாமை பாவமானது ,, கேத்சமினியில்  இறைமகனின்  கீழ்படிதலால்,  மனிதன்  மீட்பின்  அன்பு  தியாகமானது . மீட்பின்  விடுதலை  பயணம்  தொடங்கப் பட்டது.

மேலும் , இந்த  தேவரகசியத்தை  தியானிக்கும்  போது , நம்  கவனம்  இயேசுவின்  ஜெபத்தையும் , அவரின்  துக்கத்தையும்  நமக்கு  தெளிவு  செய்கின்றது . இஃது மனிதரான  நமக்கு, முன்மாதிரிகையாக  அமைகின்றது . துன்ப வேளையில்  இயேசு  ஜெபித்தார் , இறைசித்ததிற்காக  மன்றாடினார். இதுபோன்று , நாமும்  நம்  சூழ்நிலைகளில் இறைவனை  நோக்கி  ஜெபிக்கவும் , இறைசிதத்தை  வேண்டி  ஜெபிக்கவும் , நமை  தாழ்த்தி  பிறரை  அன்பு  செய்து  வாழவும்  நமக்கு  ஓர்  எடுத்துகாட்டாக  அமைகின்றது.

மேலும்  தொடர்ந்து  தியானிக்கும்  போது நம்  கவனம்  இயேசு  சீடர்களை  தமக்காக  விழித்திருந்து  ஜெபிக்கச்  சொன்ன  நிகழ்வு  நமக்கு  புலப்படுகின்ற்றது. இறைமகன்  தன்  நண்பர்களை  தம்முடன்  விழித்திருந்து  ஜெபிக்க   அழைத்தார் . இந்த நிகழ்வு , நமக்காக  மற்றவர்கள்  ஜெபிப்பது  எவ் வ ளளுவு    அவசியம்  என்பதை  வெளிப் படுத்துகிறது. மன்றாட்டுச்  ஜெபத்தின்  அவசியத்தை , ஒருவர்  மற்றவருக்காக  ஜெபிக்கும்  பிரத் தனையின்  அவசியத்தை  இறைவன்  நமக்கு  உணர்த்துவது  வெளிப் படுகின்றது.

 கர்த்தர் ரத்த வியர்வை வியர்த்ததை  தியானிப்போமாக ! கீழ்ப்படிதல் , தாழ்ச்சி , இறைசித்தம்  அறிதல் , தனிமனித  ஜெபம் , மற்றும்  குடும்ப ஜெபம் , பிறர்  நமை  தாங்கி  ஜெபிக்கும்  மன்றாட்டு  ஜெபம் , இறைதுணையின்  வல்லமை  இவற்றை  நாம்  ஆழமாக  தியனிப்போமாக!

jesus in the garden of gethsemane photo: Jesus praying in Gethsemane untitledJesusprayingtotheFatherintheGarden.jpg


சிலுவைப்பாதை 7ம் ஸ்தலம்: இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்:

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர். 
இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார்:

way of the cross - station 7 - United Tamil Catholics

காயமும் களைப்பும்/, இயேசுவை கீழே தள்ளிவிட்டன/. சமூக மாற்றம் தேடுவோர்/, தடுமாற்றம் கொள்வது இயல்பானது/. காரணம்/, சோதனைகளில் இருந்துதான்/ சாதனையாளன் எழுகிறான்/. வருத்தங்கள் என்பவை/, வாழ்வில் திருத்தங்களை ஏற்படுத்த/ இறைவன் தருகிற வாய்ப்புகள்/. வீழ்ச்சிக்குக் கணக்குப் பார்கிறவன்/, எழுச்சியை எண்ணிப் பார்க்க இயலாது/. இரண்டாம் முறை விழுந்துவிட்டோம்/ என்று இயேசுவுக்கு எண்ணம் எழவில்லை/. எழுவதைப் பற்றியே அவருக்கு எண்ணம்/. தோல்விகள் தொடரும்போது/, வாழ்வு சோகத்தில் முடிகிறது/. நெருக்கடிகள் நேரக்கூடாதென்று/ மனம் மன்றாட்டு வாசிக்கிறது/. நெருக்கடிகள் மனிதரை நெறிப்படுத்துபவை/. காட்டாற்று வெள்ளத்தில் காயப்படுகிறக் கூழாங்கல்/, சீவப்பட்ட சிங்காரக்கல்லாய்/ மேசையில் அமர்வதை/ நீ பார்த்ததில்லையா?

. -ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்.

விழிகளிலே நீரெழுதி கருணை மொழி தந்த பெண்கள்
நேசம் ஏற்றிட்டார், இயேசு தேற்றி அனுப்பினார்

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?
 

http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx

3/5/15

சிலுவைப்பாதை 6ம் ஸ்தலம்:இயேசுவின் முகத்தைத் துடைக்கும் வெரோனிக்கா

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்.

அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர் 
இயேசுவின் முகத்தைத் துடைக்கும் வெரோனிக்கா:

way of the cross - station 6 - United Tamil Catholics

தூசு படிந்த கண்ணாடிபோல்/ இயேசுவின் முகம்/. உலக அழுக்குகளின் அடையாளமாய்/, இயேசுவின் முகத்தில்/ ரத்தமும் வியர்வையும் இடம்பிடித்துகொள்கின்றன/. முகத்தை மூடிகொல்கிற பிற்போக்கு சமுதாயத்தில்/, முகில் விடுத்து/ விழிக்கிளம்பும் முற்போக்கு முழுமதியாய்/, இயேசுவின் முகத்தைத் துடைக்கும் பெண்ணிலவு/ வெரோனிக்கா/. மண்ணுக்குத் தருகிற மரியாதைக்கூட/ பெண்ணுக்குத் தருவதில்லை/. இறைவன் மீட்டிய சங்கீதத்தில்/ தாளம் தப்பிய ராகங்களா இந்த பெண்கள்/. பெண்/, இவள் தெய்வீகத்தை மானுடத்தில் மொழி பெயர்கிறவள்/. இவள்/ பூமிக்குள் புதைந்து கிடக்கிற எரிமலை/, குழம்புகள் எழுந்தால்/ பிரபஞ்சம் தாங்காது/. வெரோனிக்கா வரப்புகளை உடைத்த வரலாற்று நதி/. கரைகளைப் பற்றி கவலைப்படாமல்/, பாய்ச்சல் சுவடுகளை பயணப் பாதையாய் ஆக்கிகொண்டவர்/. பெண்களுக்கு வெளிப்போட நினைக்கும் போலிகளே/, காற்றுக்கு கை விலங்கு போட முடியாது.

-ஒரு பர.அருள்.திரி. 

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மரித்த விசுவாசிகளின் ஆன்மாக்கள்
இறைவனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. 
ஆமென்

சோதனைகள் தொடர்ந்து வர, சோர்ந்து விழும் மானிடர்கள்
பாடம் பயின்றிட, இயேசு விழுந்து எழுகிறார்

இயேசுவே நீ எதற்காக சிலுவையை சுமந்து போகிறாய்
இயேசுவே நீ எனக்காக சிலுவையை சுமக்க வேண்டுமா ?


http://www.unitedtamilcatholics.org/Pages/WayOfTheCrossInTamil.aspx