11/8/14

முதல் சனிக்கிழமை பக்தி ஓர் அருள் வரம் மற்றும் நம் பாரம்பரியம் ஆகும்


முதல் சனிக்கிழமை பக்தி ஓர் அருள் வரம் மற்றும்  நம் பாரம்பரியம் ஆகும் 
பருவமழை பொளியும் பருவ காலம். காலைப்  பனியும்  இதமான மாலைத் தென்றலும்  நமை வருடிதத் தரும் இனிமையான நவம்பர் மாதம்.  பெரியசாமிபுரம்  சுற்றியுள்ள பனையும், புன்னை காடுகளும் , அலையாடும்  காயல் கடலைகளும்  கவிபாடி இருகரம் விரித்து, இறைமகனை மன்றாடும்,  என்  அன்னை இருதயத்தாய் பாதம் பணியும் அருளின் நேரம். அன்றாடம்  அலுவல்கள் பல புரிந்து அன்னையின் பாதத்தில் அமர்ந்து  வாழும் எளிய மற்றும் இனிய மேலும் பக்தியில் திளைத்த மக்கள் வாழும் புண்ணிய பூமியில் வீ ற்றிருக்கும்  பங்கு பெரியசாமிபுரம் இருதயன்னை பங்கு ஆகும் . இங்கே , கிழக்கு , வடக்கு , மேற்கு மற்றும் தெற்கு திசைகள் எங்கும் அன்னையின் அருள் ஆழுகை ஆட்சி செய்யும் அற்புதம் கோடி . அதனை வார்த்தைகளில் எழுத முடியாத மகிமையுடையது  இருதய அன்னையின்  அழகு. 

இந்தப் பங்கில், கிழக்கு தெருவையொட்டி ஓர் அமைதியான வனம் அமைந்துள்ளது. அஃது தந்தை பர்னபாஸ் அமைத்த வளைவு வழியாய் தொடங்கி  பரந்து விரிந்த நந்தவனம்  போல் காட்ச்சி அளிக்கும் ஓர் அருள் வனம் ஆகும். அங்கே ஜெபமாலை அன்னையின் ஆட்சி அருள் மலரும் அன்பு  வனம் ஆக அமைந்து இருப்பது , ஜெபமாலை  அன்னை  ஆலயம். இந்த ஆலயத்தை வருடம் ஒருமுறை நான் சென்று தரிசித்து பயனடைவது வழக்கம். இந்த  புனித ஆலயத்தில் ஓர் அமைதி நம்மை தேடித்  தழுவிக் கொள்ளவதை  நாம் அனுபவிக்கலாம். அன்னையின் பிரசன்னத்தை  நாடி  அக்கம்  பக்கம்  இருந்து  எளிய மக்கள் வந்து போவது  வழக்கம் . போனமுறை  நான்  சென்ற போது  அன்னையின் ஆலயத்தில் பங்கு மக்களும் குருவும்  சேர்ந்து ஜெபமாலை அன்னைக்கு செய்யும் முதல் சனிக்கிழமை பக்தி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் ஓர் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது .அருமையான  முதல் சனிக்கிழமை பக்தி கொண்டாட்டம். மாலை ஜெபம் , பாட்டுத்  திருப்பலி , ஜெபமாலை , சிலுவைப்பாதை  அருள் கொண்டாட்டங்கள் அன்னையின் அருளை அள்ளித்தரும்  ஓர் வரப்பிரசாதமாக அமைகிறது .  அதன்பின்  மக்கள் ஒன்றாக அமர்ந்து அன்னையின் பாதத்தில் சமபந்தி போசனம் செய்கிறார்கள். மிகவும் ரம்மியமான நிகழ்வு , என்  மனதில்  நின்ற  ஓர் அருளின்  நேரம்.  இந்த  அரிய நிகழ்ச்சி அங்கே ஒவ்வொரு  முதல் சனிக்கிழமைகளில் நடக்கின்றது. 

முதல் சனிக்கிழமை பக்தி முயற்சிகள் நம் பாரம்பரியம் ஆகும் . முதல் சனிக்கிழமை பக்தி பலவகையான  ஆன்ம காரியங்களையும்  பலன்களையும் அள்ளித்தரும்  ஓர்  வழிபாடு ஆகும். திருப்பலி  காண்பது,  ஜெபமாலை  ஜெபிப்பது, மற்றும்  பாவசங்கீர்த்தனம்  செய்வது  முதல் சனிக்கிழமை பக்தி  முயற்சிகளாக  புனிதர்களும் நம் முன்னோர்களும்  கடைப்பிடித்தார்கள். நாமும்  முதல் சனிக்கிழமை பக்தி கொண்டாட்டங்களில் கலந்து பயன் பெறுவோம்.

இந்த மாதம் முதல் சனிக்கிழமை இங்கு அமெரிக்க  நகரம் மெம்பிஸில் நாங்கள் மக்நிபிகாட் நாள் கொண்டாடினோம்.  


11/7/14

முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம்

முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம் 

முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம் ஜெபமும் ஆகும் . முதல் வெள்ளி பக்தி முயற்சிகளாக, பல்வேறு தவ முயற்சிகள் பயனில் உள்ளன . அவை யாவும் உடலுக்கும் , மனதிற்கும் , அன்மாவிற்கும் நம்பிக்கையும் , தெம்பும் தருகின்ற அரும் மருந்தான அருள் வரங்கள் ஆகும்.

முதல் வெள்ளி ஒருத்தல் இருந்து ஜெபிப்பது பக்திமான்களின் பழக்கம் மட்டுமில்லாது , அஃது வேண்டும் வரங்களை பெற்றுத் தரும் அருள் கருவியாக அமைகின்றது . தானியேல் தான் வேண்டும் வரங்களுக்காக ஒருத்தல் இருந்து ஜெபித்தார் . நமதாண்டவர் யேசு கிறிஸ்து நாற்பது  நாள் உபவாசம் இருந்து ஜெபித்தார். உபவாச  ஜெபம் சாத்தானை  ஜெயிக்கும் வல்லமையான ஜெபமாகவும் அமைகின்றது . இதனால் மாதம் ஒருமுறை முதல் வெள்ளியன்று  உபவாசம்  இருந்து ஜெபிப்பது சாலச் சிறந்த புண்ணிய பழக்கம் ஆகும்.

முதல் வெள்ளியன்று திருப்பலி  கண்டு  நன்மை வாங்குவது  நம் பாரம்பரியம்  ஆகும் . ஜெபங்களில்  சிறந்த ஜெபம் திருப் பலியாகும். முதல் வெள்ளியன்று  திருப்பலி  காண்பது ஓர் சிறந்த புனித ஜெப வழக்கம் ஆகும். திருப்பலியில்  எசுக்கி றிஸ்துவோடு  அவர்தம் சிலுவைப் பாடுகளில் பங்கு கொள்ளும் போது , நம் பாடுகளும் அவரோடு இணைந்து , நம் சுமைகள் எளிதாக  வாய்ப்பு  பெறுகின்றோம்.

முதல் வெள்ளியன்று  சிலுவைப் பாதை தியானம் நம் பாரம்பரியம் ஆகும் . சிலுவைப்பாதையின் பதினான்கு ஸ்தலங்களிலும் , நம்மையும் நம் பாவங்களையும் இயேசு சுமந்ததை தியானிக்கும் போது நாம் மனம் மாறி பிறரை மன்னிக்கும் மன வல்லமையை பெற்றுக்கொள்ள வாய்ப்பு பெறுகின்றோம்.

முதல் வெள்ளியன்று பாவ சங்கீர்த்தனம்  செய்வது  நம் பாரம்பரியம் ஆகும் . மாதம் ஒருமுறையாவது முதல் வெள்ளியன்று ஒப்புரவு அருட்சாதனத்தில் பங்குபெற்று நமை நாம் பரிசுத்த ஆவியின் நண்பர்களாக அயத்தப்  படுத்துவது, நம் வாழ்வின் சூழல்களில் நம் தீர்மானங்களில் இறைவனின் சித்தத்தை அறிந்து நடக்க பலன் அளிக்கும். மேலும்  பாவ சங்கீர்த்தனம் நம் பாவங்களை  கழுவி நம் ஆன்மாவை சுத்தமாக மாற்றும் அற்புத ஆற்றுபடுத்தும் கருவியாகும். இதனால் உடல் உள்ள ஆன்மா சுகம் பெறுகின்றோம்.

  முதல் வெள்ளியன்று ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது மிகவும் நன்மை பயக்கும் அறப்பணியாகும். முதல் வெள்ளியன்று இயேசுவின் திரு இருதய பேரால் ஏழைகளுக்கு உணவு உடை அளிப்பது நம்  பாரம்பரிய பக்தி முயற்சிகளில் அடங்கும். இதனால் முதல் வெள்ளி பக்தி : இயேசுவின் திரு இருதய ஜெபம் நம்பிக்கையூட்டும் ஜெபம் ஆகும் : நம் திருச்சபையின் பாரம்பரியம் ஆகும் . ஜெபம் , தவம் , அறம் என்ற அருள் கனிகளால்  முதல் வெள்ளி பக்தியை  அலங்கரிப்போம்.




https://www.youtube.com/watch?v=AwBT57RbLlc


.

.

11/2/14

மரித்த ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் ஜெபம் புண்ணிய ஜெபம் ஆகும்

மரித்த ஆன்மாக்களுக்காக ஜெபிக்கும் ஜெபம் புண்ணிய ஜெபம் ஆகும் . இந்த ஈகை  வாழும் விசுவாசிகளால் மட்டுமே இவ்வுலகில்  வாழும் போது ஜெபிக்க கூடிய விசுவாசிகளின் மன்றாட்டு  ஜெபம் ஆகும் . குறிப்பாக யாரும் நினையாத ஆன்மாக்கள் , குருக்கள் , கன்னியர்கள் , அனாதைகள்  ஆன்மா க்களுக்காக ஜெபிப்போம். நம் ஜெபங்களால்  அவர்களுக்கு இறைவனின் தயவை பெற்றுத் தருவோம் , அவர்களின்  விடுதலைக்காய்  தினமும் ஜெபிப்போம் . இதுவும் ஓர் மிசினரி பணியாகும்.


https://www.youtube.com/watch?v=8jzEDCGeZo0


கர்த்தர் கற்பித்த ஜெபம் எக்காலமும் துணை நிற்கும் வல்லமையான வாழ்வின் ஜெபம் ஆகும்

கர்த்தர் கற்பித்த ஜெபம் எக்காலமும் துணை நிற்கும் வல்லமையான வாழ்வின் ஜெபம் ஆகும்
https://www.youtube.com/watch?v=aX_PDfpc8L8

புனிதர்கள் பிராத்தனை ஜெபம் பலமளிக்கும் ஜெபம்




புனிதர்கள் பிராத்தனை  ஜெபம் பலமளிக்கும் ஜெபம் 

10/25/14

அதிகாலை ஜெபித்தல்: இயற்கையோடு ஜெபித்தல் இன்பம் பயக்கும் ஓர் அற்புத ஜெபம் ஆகும்

அதிகாலை ஜெபித்தல் :இயற்கையோடு ஜெபித்தல் இன்பம் பயக்கும் ஓர் அற்புத ஜெபம் ஆகும்:உண்மையான அனுபவம்

காலாண்டுத் தேர்வு விடுமுறை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க , இயற்கை அன்னையின் தென்றலும் , கருமேக கூட்டங்களும் ஒன்றி குலாவிடும் இனிய வசந்த காலம் மலர்கிறது . கூவும் குயிலும் , அகவும் மயிலும் ,பாடும்  வானம் பாடிகளும், தேன்சிட்டுக் குருவிகளும்,  கூடு கட்டி குஞ்சி பொறிக்கும் பறவைகளும், நாடு விட்டு  நாடு செல்லும் பறவை கூட்டங்களும் வானத்தை அழகு செய்யும் உல்லாச காலம். இது வசந்த காலம். தென்மேற்கு பருவக்காற்றும், வடமேற்கு   பருவக்காற்றும், ஓடும் ஆறும் , கொட்டும் அருவிகளும், தாவிக்குதிக்கும் கடலின்  அருவிகளும் உற்சாகமாய் தோன்றும் ஓர் இன்ப காலம் .   பூமியை வருடிக் கொடுக்கும் ஓர் வனப்பான வசந்த காலம். இந்துக்களின் சுப்ரபாதமும் , பஜனைகளும் , விழாக்களும் அணிவகுத்து சுற்றுபுறங்களை சுறுசுறுப்பாக மாற்றும் விழாக்காலம். அதிகாலையும் , அந்திவேளையும் அனுதினமும் ஐந்து வேளையும் பள்ளிவாசலின் தொழுகை வீசும் காற்றுடன் கலந்து கைகோர்க்கும் காலம். அதிகாலை ஆலய மணியோசையும் அனுதின ஜெபங்களும்  அனுதின திருப்பலியும் , அன்னை  மரியின் திருவிழாக்களும், அணிவகுத்து ஆண்டவனின் அருளை அவனிக்கு அள்ளித்தரும் காலம். எங்கும் எதிலும் எல்லா மதமும் அவர்தம்  நம்பிக்கையை உலகுக்கு உண றச் செய்யும்   காலம்.

அன்டன்  அதிகாலையில் கண்விளித்து  கடைமைகள் செய்ய  தயார் ஆகின்றார் . அங்கே  அப்போது  வழக்கம்போல் கபிரியேல் தூதுவரும் , மைக்கேல் தூதுவரும்  தங்கள்  உலகச் சுற்றுபயணத்திற்காக  வலம்  வந்து  கொண்டிருந்தார்கள்( இந்த வரி  மட்டும் விசுவாச கற்பனை ) . மக்கள் ஜெபங்களை ஏற்று இறைவனிடம் இருந்து பதிலும், பலனும்,  நன்மையையும்  பெற்றுத் தருவது இப்புனித தூதுவர்களின்  அன்றாடப்  பணியாகும். அதிகாலையில்  அன்டன் வீட்டின் முகப்பில் இருக்கும் மாதா சுருபம் ஜொலிக்க , அதிகாலை  தென்றல் இதமாக வீச அன்டன் தன் அனுதின ஜெபத்திற்கு ஆயத்தமானார் . உள்ள வீட்டில்  வீற்றிருக்கும் இருதய ஆண்டவரின் படத்தின் முன்பாக நின்று அவர் தன் மன ஜெபத்தை தொடங்கி , பின்  தலைவாயிலைத்  திறந்து  அன்னை மரி பாலனோடு   காட்ச்சி தரும் வேளாங்கண்ணி  மாத சுருபத்தின் முன்னால் நின்று  மனதுருகச் ஜெபிகின்றார். தேவ  தூதர்கள் அன்டனின் பக்தியால்  ஈர்க்கப்பட்டு  அவருக்குத்  துணையாக  பக்கம் வந்து  நின்று  ஆவலோடு  அவரை பின்தொடர்ந்தனர்.

   அதன் பிறகு  அன்டன்  மலர்த் தொட்டிகளுக்கு  . தண்ணீர்  உற்றிக் கொண்டே ஜெபமாலை ஜெபிக்கலானர். இன்று  அவர்  சந்தோஷ தேவரகசியங்களைத்  தியானிக்கத் தொடங்கினார். அன்டன்  தன்  அதிகாலை வேலைகளோடு ஜெபம் செய்து  விட்டு , பின்  அனுதினமும் அதிகாலை  திருப்பலிக்குச்    சென்று  தினமும்  நன்மை  வாங்குவது  வழக்கம்  உடைய  ஓர்  பக்திமான் . இஃது  இவருக்கு  கடந்த  இருபது  வருடபழக்கம். ஜெபம் செய்வதும் தன் குடும்பத் தேவைகளுக்காக மன்றாடுவதும்  இவருடைய முழு நேர சேவையாக இவர்  மாற்றிக்கொண்டார் என்றால் அஃது மிகையாகது . இவர்  ஓர்  ஜெபிக்கும்  கணவர் , ஜெபிக்கும் தந்தை , ஜெபிக்கும்  ஓர்  விசுவாசி . மாதாவின் மீதும் , திருஇருதய  ஆண்டவர்  மீதும் , திருப்பலி  திவ்ய நற்கருணை மீதும் மிகுந்த பக்தியுடைய ஓர் பக்திமான்.

அவர் முதல் தேவ ரகசியமான கபிரியேல் தூதன் மங்கள வார்த்தை சொன்னதை    தியானிக்கலானார். அப்போது  அவர்  கபிரியேல் தூதன் மற்றும்  அன்னை  மரியாவையும்  தேவ ரகசியத்தின்  படி  தியனிக் கலானர். அந்தக்கணம் அவரது உள்ளத்தில் ஓர் அருமையான  எண்ணம்  தோன்றியது . அதாவது அன்னை மரியும் தேவதூதனும் நம்மோடு  சேர்ந்து  ஜெபிக்கிறார்கள்  என்ற புண்ணிய எண்ணம். அந்த எண்ணம் மனதிற்கு அறுதல்  தந்தது . ஆம் தேவதூதர்கள், அன்னை  மரியும்   அவரோடு சேர்ந்து  ஜெபிக்கலானர்கள்.

இரண்டாவது தேவரகசியத்தை ஜெபித்தார் . அப்போது  அவர் கன்னி மரியையும் எலிசபெத் வீட்டாரையும் தியானித்தார் , இப்போது  அன்னை  மரி , தேவ  தூதர்களோடு எலிசபெத்தும் , சக்கரியாவும் , யோவான்  அருளப்பரும்  சேர்ந்து ஜெபிக் கலானர்கள்  அன்டனின்  ஜெபமாலை  தியானத்தில்.

மூன்றாவது  தேவரகசியத்ததை    மனதுருகத் தியானித்தார் . அப்போது  அவரோடு  பெத்லேகம் இடையர்கள் , கால்நடைகள் , விண்மீன்கள் , வானதூதர்கள் , மூன்று அரசர்கள், தந்தை சூசையப்பரும்  சேர்ந்து  கொண்டு  ஜெபித்தார்கள் . இப்போது  அன்டனின் தியானத்தில் வீடு நிறைய புண்ணிய புனிதர்கள்  நிறைந்து காணப்பட்டனர் .

இப்போது அங்கே காதல் பறவைகள் இரைக்காக  பாடின . அன்டன்  அவைகளுக்கு  இறை  கொடுத்துகொண்டே , அன்றாடம்  வீடு  தேடி  வரும்  புறாக்களுக்கு இறை  தூவினார் . பின் நான்காவது  தேவரகசியத்தை தியானித்தார் . அப்போது திருக்குடும்பத்தோடும், தேவ தூதர்களோடும் , மற்றும் மேற்கூறிய புனிதர்களோடும் , கோயிலின் அன்னாளும் , சீமோனும் சேர்ந்து  ஜெபிக்கலானர்கள்  அன்டனின் தியானத்தில் .

ஐந்தாவது தேவரகசியத்தை தியனிக்கலானர் அன்டன் . தூரத்தில்  கூவுகின்ற  குயில் இனிமையாய் இசைக்க , இதமான கலைத் தென்றல் தேகத்தை வருட முல்லையும்  ரோஜாவும் மணம் பரப்பி பூத்துக் குலுங்கி கண்ணுக்கும் வாசனைக்கும் இனிய விருந்து படைக்க , அன்டன் இறைவனுக்கு நன்றியோடு ஜெபிக்கலானர் . அப்போது  அவர்  தியானத்தில் அன்னை மரி , தந்தை  சூசை , தேவ தூதர்கள், புனிதர்கள் , மற்றும் புதிதாய் யெருசலம் பயணிகள் , கோயில் குருக்கள் , புண்ணியவான்கள், சிறுவன்  யேசுவும் ஜெபத்தில் சேர்ந்து கொண்டார்கள்.

இஃது ஓர் வல்லைமையான  அனுபவமாக அமைந்தது . அன்டன் துணிவு கொண்டார் , நம்பிக்கை கொண்டார் , இறைவன் தன்  வேண்டுதல் கேட்பார் என்று விசுவாசத்துடன்  தன் வேண்டுதல்களை இறைவன் பாதத்தில் வைத்தார்.மேலும் எல்லாரின்  ஜெபங்களுடன்  அன்டன் தன் ஜெபத்தை இணைத்து இறைவனுக்கு  ஒப்புக்  கொடுத்து   விட்டு , அதிகாலை திருபலிக்குச்  செல்ல அயத்தமாகச் சுருசுருப்படைந்தார். இந்த தியான அனுபவம் உன்னதமாய், உண்மையாய் , உக்கம்  அளிப்பதாய்  அன்டனுக்கு அமைந்தது . நெருக்கமான  சூழ்நிலையில் மனதில் அமைதி,  சந்தோசம்,  சமாதானம்,   தரும் தியானமாய்  அமைந்தது. இவ்வேளையில் அன்டனும்  அவர் மனைவியும் குடும்ப வேண்டுதல்களுக்காக உபவாச  மேற்கொண்டிந்ருதர்கள். அன்டன் தன் மனைவியிடம் அவரது தியான அனுபவங்களை பகிர்ந்து  மகிழ்ந்தார் . இருவரும் இறைவனுக்கு நன்றி  செலுத்தி , இறைவன்  அவர்கள்  வேண்டுதலை சீக்கிரம் கேட்பார் என்று அமைதி கொண்டனர் .



10/5/14

தியானங்களில் ஜெபிக்கும் ஜெபம் உள்ளத்திற்கு திடன் தரும் ஜெபம்

தியானங்களில் ஜெபிக்கும் ஜெபம் உள்ளத்திற்கு திடன் தரும் ஜெபம்

தியானங்கள்  மக்களை ஓன்று கூட்டி ஒன்றாக சேர்ந்து அயராது மக்கள் இறைவனை தியானித்து , தனிப்பட்ட மனித வாழ்வை செம்மை செய்ய வரமளிக்கும் ஓர் அற்புத அறிய வரம் ஆகும்.

இக்காலத்தில், பங்குகளில் , சமுதாயத்தில் , தியானங்கள்  குறைந்து  வருகின்றது. தியானங்கள்  மனிதனை விடிவிக்கும் சக்தியுடையவை.  தியானங்கள்  மனிதனை ஊக்கிவிக்கும் திறனுடையவை. தியானங்கள்  மனிதனை குணமாக்கும் வரம் பெற்றவை . தியானங்கள்  மனிதனை ஒன்று படுத்தும் சக்தி பெற்றவை. இதனால் தியானங்களுக்கு  சென்று ஜெபிப்பது தனி மனிதனுக்கு மிகவும் பலன் அளிக்கும்.

தியானங்கள் குடும்பத்தை ஊறுதிப்படுத்தும் வல்லமை கொண்டவை. தியானங்கள் குடும்பத்தை ஓன்று படுத்தும் சக்தியுடையவை . தியானங்கள் குடும்பத்தை மனம் மாற்றம் செய்து , இறைவன்பால் திரும்பச் செய்யும் திறன்  கொண்டவை. தியானங்கள் குடும்பத்தை, குழந்தைகளை , பெற்றோர்களை  இணைக்கும்  சக்தி கொண்ட ஜெபங்களாகும். இதனால் தியானங்களுக்கு  சென்று ஜெபிப்பது தனி மனிதனுக்கு மட்டுமின்றி , குடும்பங்களுக்கும்  மிகவும் பலன் அளிக்கும் ஜெபம் ஆகும்.

தியானங்கள்  சமுதாயத்தை  விடிவிக்கும் வல்லமை கொண்டவை .  தியானங்கள்  சமுதாயத்தை சாத்தானின் அந்தகார ஆளுகையினின்று விடிவிக்கும்  சக்தியுடையவை . தியானங்கள்  சமுதாயத்தை ஒன்றுபட செய்பவை . தியானங்கள்  திருச்சபையையும் சமுதாயத்தையும்  ஒன்றிணைப்பவை. தியானங்கள்  சமுதாயத்தை குணப்படுத்தும்  ஆற்றல்  கொண்டவை. இதனால் தியானங்களுக்கு  சென்று ஜெபிப்பது தனி மனிதனுக்கு மட்டுமின்றி  சமுதயாத்திற்கும், திருச்சபைக்கும்  மிகவும் பலன் அளிக்கும் அரும் மருந்தாகும்.

தியானங்களை ஒருவர் தனியாகவோ , இல்லை குழுவாகவோ , இல்லை ஓர் பங்காகவோ, இல்லை ஓர்  சமுதயமாகவோ ,  ஜெபிக்கலாம்.  தியானங்களின் அடிப்படையான ஜெபங்கள் , திருப்பலி , ஜெபமாலை , திவ்விய நற்கருணை ஆசிர் , விவிலிய விளக்கங்கள்,  தியானங்கள், தியான மறையுரைகள் , திருச்சபையுடன் கலந்துரையாடல், புனிதர்களின் வாழ்க்கை தியானங்கள் , பரிசுத்த ஆவியின் ஜெபங்கள் , .............இப்படியாக தியானங்கள் மனித ஆன்மாவை திருச்சபையோடும் , மக்களோடும், இறைவனோடும் ஒன்றிணைத்து பலன்   அளிக்கும் அரும் ஜெபம் ஆகும் . தியானங்கள் சென்று ஜெபிப்போம் , விசேஷ பலன் பெறுவோம்.