இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “இன்றைய உலகில் நீதியை ஊக்குவிப்பதில் கத்தோலிக்க-முஸ்லீம் ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலானக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களை வாழ்த்தினார். இவ்வாண்டில் பொன்விழாவைச் சிறப்பிக்கும் CAFOD பிறரன்பு நிறுவனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் திருஅவையின் சார்பாகத் தனது நன்றி கலந்த வாழ்த்தைத் தெரிவித்தார். மேலும், நவம்பர் 21, இப்புதனன்று தூய கன்னிமரியை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவன்று அடைபட்ட துறவு சபையினர் நாளும் சிறப்பிக்கப்பட்டது. எனவே அத்துறவியரையும் வாழ்த்தினார். இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தித் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
வருந்துவோருக்கு ஆறுதலே, நான் உம்மிடம் இப்போது மன்றாடும் விண்ணப்பங்கள் நிறைவேறுமாறு உமக்கு வணக்கமாக இதுவரை பரிசுத்தவான்களால் செய்யப்பட்ட எல்லாப் புனித செயல்களையும் ஒப்புக் கொடுக்கிறேன். உமது திரு மகனும் எங்கள் ஆண்டவருமான இயேசு நாதருடைய திரு இருதயத்தில் பொங்கி வழியும் பேரன்பையும் அது போன்ற உமது அன்பையும் பார்த்து, ஏழையான எனது செபத்தை ஏற்று என்மன்றாட்டை அடைந்து அடைந்து தந்தருளும் தாயே! - ஆமென்.
11/25/12
திருத்தந்தையின் புதன் மறைபோதகம்: Vatican radio
திருத்தந்தையின் புதன் மறைபோதகம்

நவ.21,2012. கடந்த இரண்டு நாள்களாக மழையைப் பொழிந்து கொண்டிருந்த கார்மேகக் கூட்டங்கள் இப்புதன் காலை கலைந்து கதிரவனின் வெள்ளிக் கதிர்களுக்கு இடம் கொடுத்திருந்தன. குளிர்காலமும் தனது நிலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, திருத்தந்தையின் இப்புதன் பொது மறைபோதகம் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, இறைநம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்புச் சகோதர சகோதரிகளே, நம்பிக்கை ஆண்டில் நாம் கேட்டுவரும் புதன் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக, கடவுளின் உண்மையின் மகிமையோடு சந்திப்பதாக, கடவுள் மீதான நம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து இன்று நோக்குவோம் என ஆங்கிலத்தில் தனது சிறிய போதகத்தைத் தொடங்கினார்.

நம்பிக்கை மூலமாக கடவுள் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் உண்மையான அறிவைப் பெறுகிறோம். வாழ்வின் நிறைவையும், மகிழ்ச்சியையும் மறுவுலகில் பெறுவதற்காகக் காத்திருக்கும் நாம், இவ்வுலகில் விவேகத்துடன் வாழ்வதற்கும் நம்பிக்கை வழியாகக் கற்றுக் கொள்கிறோம். கடவுள் பற்றிய உண்மையை மனித மனத்திற்குத் திறந்து வைப்பதில் நம்பிக்கையும் அறிவும் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. உண்மையைத் தேடும் அறிவானது, கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இடம்பெறும் சந்திப்பில் உள்தூண்டுதலையும், வழிகாட்டுதலையும், நிறைவையும் கண்டு கொள்கின்றது. அதேநேரம், நம்பிக்கை, தனது இயல்பிலே கொண்டிருக்கும் புரிந்துகொள்ளும் வழிகளைத் தேடுகின்றது. மனிதரின் அறநெறி வாழ்வின் முன்னேற்றத்துக்கும், அவர் படைப்பை விவேகத்தோடு கையாள்வதற்குமான சேவையில் நம்பிக்கையும் அறிவியலும் கைகோர்த்துச் செல்கின்றன. இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நமது மீட்பின் நற்செய்தியானது உண்மையான மனிதத்தை நமக்கு வழங்குகிறது. மனிதர் மற்றும் அகிலத்தின் பேருண்மையைப் புரிந்துகொள்வதற்கு ஓர் இலக்கணத்தையும் இது நமக்கு வகுக்கின்றது. நமது மனித மாண்பு மற்றும் அழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் கடவுளின் உண்மையின் ஒளிக்கு இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நமது மனங்களைத் திறப்போமாக
இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “இன்றைய உலகில் நீதியை ஊக்குவிப்பதில் கத்தோலிக்க-முஸ்லீம் ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலானக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களை வாழ்த்தினார். இவ்வாண்டில் பொன்விழாவைச் சிறப்பிக்கும் CAFOD பிறரன்பு நிறுவனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் திருஅவையின் சார்பாகத் தனது நன்றி கலந்த வாழ்த்தைத் தெரிவித்தார். மேலும், நவம்பர் 21, இப்புதனன்று தூய கன்னிமரியை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவன்று அடைபட்ட துறவு சபையினர் நாளும் சிறப்பிக்கப்பட்டது. எனவே அத்துறவியரையும் வாழ்த்தினார். இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தித் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், “இன்றைய உலகில் நீதியை ஊக்குவிப்பதில் கத்தோலிக்க-முஸ்லீம் ஒத்துழைப்பு” என்ற தலைப்பிலானக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களை வாழ்த்தினார். இவ்வாண்டில் பொன்விழாவைச் சிறப்பிக்கும் CAFOD பிறரன்பு நிறுவனத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் திருஅவையின் சார்பாகத் தனது நன்றி கலந்த வாழ்த்தைத் தெரிவித்தார். மேலும், நவம்பர் 21, இப்புதனன்று தூய கன்னிமரியை காணிக்கையாக அர்ப்பணித்த விழாவன்று அடைபட்ட துறவு சபையினர் நாளும் சிறப்பிக்கப்பட்டது. எனவே அத்துறவியரையும் வாழ்த்தினார். இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தித் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்
திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்

அக்.24,2012. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவு, கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு நம்பிக்கை ஆண்டை அறிவித்து அதனை இம்மாதம் 11ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இந்த நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் தனது வழக்கமான புதன் பொதுமறைபோதகங்களில் இந்த நம்பிக்கை ஆண்டு குறித்த சிந்தனைகளை வழங்கவிருப்பதாகக் கடந்த புதன் பொதுமறைபோதகத்தில் அறிவித்தார் திருத்தந்தை. இந்த நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் இரண்டாவது பொது மறைபோதகமான இப்புதனன்று, நம்பிக்கை ஆண்டின் நமது மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக நம்பிக்கையின் இயல்பு குறித்து இன்று பார்ப்போம் என தனது மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. அராபியம் உட்பட பல மொழிகளில் பொது மறைபோதகத்தை வழங்கிவரும் திருத்தந்தை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ஆங்கிலம் பேசும் பயணிகளுக்கென இவ்வாறு ஆரம்பித்தார்.

நம்பிக்கை என்பது, கடவுள் பற்றிய அறிவை மட்டும் வெறுமனே கொண்டிருப்பதற்கும் மேலாக, அவரை வாழ்வில் சந்திப்பதாகும். கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றில் தம்மையே வெளிப்படுத்திய கடவுளை நம்பிக்கை வழியாக அறிந்து அன்பு கூருகிறோம். அவ்வாறு செய்யும்போது, மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தையும் உண்மையையும் அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த நம் காலங்களின் ஆன்மீகக் குழப்பங்களுக்கு மத்தியில் உறுதியான பற்றுறுதியையும் வழியையும் நம்பிக்கை நமக்கு அளிக்கின்றது. அனைத்துக்கும் மேலாக, நம்பிக்கை ஒரு விண்ணகக் கொடை. இறைவார்த்தைக்கு நமது இதயங்களையும் மனங்களையும் திறக்கவும், திருமுழுக்கு வழியாக திருஅவைக்குள் அவரது இறைவாழ்வில் பங்குதாரர்கள் ஆகவும் நம்பிக்கை நமக்கு உதவுகிறது. எனினும், நம்பிக்கை, நமது அறிவையும் சுதந்திரத்தையும் சார்ந்து இருக்கும் ஓர் ஆழமான மனிதச் செயலாகவும் இருக்கின்றது. கடவுளது அழைப்பையும் அவரது கொடையையும் நாம் வரவேற்கும்போது நமது வாழ்வும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாற்றம் அடைகின்றன. நமது நம்பிக்கையை நாம் முழுமையாக வாழவும், நம்பிக்கை உறுதியளிக்கும் நித்திய வாழ்வுக்கு மற்றவர்கள், தங்களின் இதயங்களைத் திறந்து வைத்து, இறைவார்த்தையைக் கேட்டு அதனை ஏற்கவும் இந்த நம்பிக்கை ஆண்டு உதவுவதாக.

இவ்வாறு தனது புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, 16ம் பெனடிக்ட், ஜப்பான், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, கானடா, பிரிட்டன், டென்மார்க், நார்வே, நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து வந்திருந்த பயணிகளை வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
8/2/12
Subscribe to:
Posts (Atom)